சொந்த அறிவியல் ஆராய்ச்சிக் கருவிகள் தயாரிக்கும் திறனை இழந்த இந்தியா விஞ்ஞானிகள் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
3 Jun 2026, 8:41 pm

சொந்த அறிவியல் ஆராய்ச்சிக் கருவிகள் தயாரிக்கும் திறனை இழந்த இந்தியா

விஞ்ஞானிகள் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

பெங்களூரு இந்தியா தனது சொந்த அறிவியல் ஆராய்ச்சிக் கருவிகளைத் தயாரிக்கும் திறனை கிட்டத்தட்ட இழந்துவிட்டதாகவும், இதனால் கால நிலை மாற்ற கண்காணிப்புக்கு தேவை யான கருவிகளை வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது எனவும் இந்தியாவின் முன்னணி காலநிலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பெங்களூரில் உள்ள இந்திய அறிவி யல் கழகம் (IISc) உட்பட 3,200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களின் ஆலோ சனையின் பேரில் ‘மெகா சயின்ஸ் விஷன்-2035’ (Mega Science Visi on-2035) என்ற அறிக்கை தயாரிக் கப்பட்டது. அந்த அறிக்கையில் இந்த தக வல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிக்கை ஒன்றியஅரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் (PSA) அலுவ லகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது பொதுவெளியில் வெளியிடப் பட்டுள்ளது. தவறான தரவுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்கு மதி செய்யப்படும் பல கருவிகள், பல ஆண்டுகளாகச் சரியாகப் பரிசோதிக்கப் படாமல் (Uncalibrated) நம்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இத னால் தேசிய மற்றும் சர்வதேச அறிவி யல் இதழ்களில் நமது தரப்பில் இருந்து வெளியாகும் ஆய்வுக்கட்டுரைகளில் தவறான தரவுகள் வெளியாகின்றன.

இது ஒட்டுமொத்த இந்திய அறிவியலின் ஆராய்ச்சியின் மீதான நம்பகத்தன்மை யையே கேள்விக்குறியாக்குகிறது என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வெப்ப அலைகள், வழக்கத்திற்கு மாறான பருவமழை, இமயமலைப் பனிப்பாறைகள் உருகுதல் போன்ற தீவிர காலநிலை மாற்றங்களை இந்தியா சந்தித்து வரும் இக்கட்டான சூழ்நிலையில், மாற்றங்களை முன் கூட்டியே துல்லியமாகக் கண்காணிக் கும் கருவிகளில் குறைபாடு இருப்பது பேரிடர்களை முன்கூட்டியே கணித்து மக்களை பாதுகாப்பதில் பெரும் பின்ன டைவை உருவாக்கும்.

இதனால் பேரழிவு கள் தவிர்க்க முடியாததாகவும் குறிப்பாக ஏழை எளிய மக்களே அதிகம் பாதிக்கப் படுவார்கள் எனவும் அச்சம் எழுந்துள்ளது.

பாஜக அரசின் உள்நாட்டுத் தயாரிப்புக் கான ‘ஆத்மநிர்பர்’ கொள்கையின்படி, அரசு நிறுவனங்கள் ‘GeM’ (Govern ment e-Marketplace) இணையதளம் வழியாகக் குறைந்த விலைக்கு டெண்டர் கோரும் இந்திய நிறுவனங்களிடமி ருந்தே பொருட்களை வாங்க வேண்டும். ஆனால், உயர்தர அறிவியல் கருவி களைத் தயாரிப்பதில் உள்ளூர் நிறுவ னங்களுக்குப் போதிய திறன் இல்லை.

அதே நேரம், உலகளாவிய டெண்டர் (Global tender) விடுவதற்குப் பல அரசு நடைமுறைத் தாமதங்களும் உள்ளன.

இது தொடர்பான விஞ்ஞானிகளின் தொடர் புகார்களைத் தொடர்ந்து , கடந்த 2025 ஜூன் மாதம் ஒன்றிய நிதிய மைச்சகம் இந்த விதிகளில் சில தளர்வுக ளை வழங்கி, 200 கோடி ரூபாய் வரையி லான உலகளாவிய டெண்டர்களை அந்தந்த நிறுவனத் தலைவர்களே முடிவு செய்ய அனுமதித்தது குறிப்பி டத்தக்கது.

விரிவான ஆய்வுகள் தேவை இந்தியாவில் சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் போன்ற புதுப்பிக்கத் தக்க ஆற்றல் திட்டங்கள் வளர்ந்து வரு கின்றன. இந்த முன்னேற்றங்கள் தடுக்கப் படக்கூடாது.

எனினும் எந்த ஒரு கட்டுப் பாடும் இன்றி வேகமாக வளரும் நிலை யில் அதனால் இயற்கையில் ஏற்படும் நீண்டகாலப் பாதிப்புகள் எதிர்மறை யான தாக்கங்கள் குறித்து இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. எனவே, இது குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று விஞ்ஞானி கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் அந்த அறிக்கையில் இந்தி யாவின் காலநிலை ஆராய்ச்சியை உலகத் தரத்திற்கு உயர்த்த 8 பெரிய திட்டங்களும் பரிந்துரைக்கப்பட்டுள் ளன.

அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளின் மாடல்களை நம்பியிருக்கா மல், இந்தியாவின் சொந்த சூழ்நிலைக்கு ஏற்ப ‘புவி அமைப்பு மாதிரி’யை (Earth System Model) உருவாக்க வேண்டும். கார்பன் வரி விதிப்பு மூலம் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வழி முறைகளைக் கண்டறியப்பட வேண்டும்.

புதிய செயற்கைக்கோள்கள், கண்காணிப்பு மையங்கள், உள்நாட்டிலேயே சென்சார் களை உருவாக்க வேண்டும் என விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்தத் திட்டங்களை 2035-ஆம் ஆண்டிற்குள் மூன்று கட்டங்களாகச் செயல்படுத்த வேண்டும்.

அதற்குத் தோராயமாக 795 கோடி ரூபாய் முதல் 1,359 கோடி ரூபாய் வரை மட்டுமே செல வாகும் எனவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.