தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இஸ்ரேலின் ஆயுதத் தயாரிப்புக்கு 17 கண்டெய்னரில் இரும்பு அனுப்பிய இந்தியா 22 நாடுகளின் துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

30 Oct 2026, 8:52 pm
இஸ்ரேலின் ஆயுதத் தயாரிப்புக்கு 17 கண்டெய்னரில் இரும்பு அனுப்பிய இந்தியா  22 நாடுகளின் துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

இஸ்ரேலின் ஆயுதத் தயாரிப்புக்கு 17 கண்டெய்னரில் இரும்பு அனுப்பிய இந்தியா 22 நாடுகளின் துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

ரோம், அக். 30 -பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் தோட்டாக்கள், பீரங்கிக் குண்டுகள் தயாரிப்பதற்காக இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட தாகக் கூறப்படும் 17 கண்டெய்னர்எஃகு, இத்தாலியின் ஜியோயா தௌரோ (Gioia Tauro) துறைமுகத்தில் தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் பல மாதங்களாக நகர முடியாமல் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், காசா மீதான போருக்கும், துறைமுகங்கள் ராணுவமயமாக்கப்படுவதற்கும் எதிராக 22 நாடுகளைச் சேர்ந்ததுறைமுகத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை (அக்.30) ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

22 நாடுகள், 110-க்கும் மேற்பட்ட துறைமுகங்கள்

“துறைமுகத் தொழிலாளர்கள் போருக்காக வேலை செய்ய மாட்டார்கள்” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த “துறைமுக மற்றும் கப்பல்துறைத் தொழிலாளர்களின் சர்வதேசப் போராட்ட நாள்” நிகழ்வில், ஐந்து கண்டங்களில் உள்ள 22நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. இத்தாலி, பிரான்ஸ், கிரீஸ்,துருக்கி, மொராக்கோ நாடுகளின் தொழிற்சங்கங்கள் இதற்குஅழைப்பு விடுத்தன. ‘போர்ட்ஸ் இன் ஆக்சன்’ (Ports in Action) கூட்டமைப்பின் கணக்கின்படி 113 துறைமுகங்களில் வேலைநிறுத்தம் அல்லது பணிநிறுத்தம் நடைபெற்றது. இந்தத் துறை முகங்கள் உலகக் கப்பல் போக்குவரத்தில் சுமார் 13.5 சதவீதத்தைக் கையாள்கின்றன.

ஆயுதங்கள், வெடிமருந்து கள், ராணுவத் தளவாடங்கள், படைகளைக் கொண்டு செல்லதுறைமுகங்களைப் பயன் படுத்தக் கூடாது என்று தொழிற் சங்கங்களின் கூட்டறிக்கை வலியுறுத்தியது. இஸ்ரேலுக்கு முழுமையான ராணுவத் தடை விதிக்கவேண்டும் என்றும் அரசுகளை வலியுறுத்தியது. இத்தாலியில் ஜெனோவா, ட்ரியஸ்டே, ஜியோயா தௌரோ உள்ளிட்ட ஒன்பதுதுறைமுகங்களில் போராட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வு, குறைந்த ஊதியம், ராணுவச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றைக் கண்டித்துஅந்நாட்டின் முக்கியத் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த நாடுதழுவிய பொது வேலைநிறுத்த மும் இதே நாளில் நடைபெற்றது.பிரான்சில் லே ஹாவ்ரே, மார்செய்டன்கிர்க் துறைமுகங்களிலும், கிரீஸின் பிரேயஸ், துருக்கியின் இஸ்தான்புல் துறைமுகங் களிலும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

அவுரங்காபாத்திலிருந்து இஸ்ரேலுக்கு

இத்தாலியின் தெற்கே கலாப்ரியா பகுதியில் உள்ள ஜியோயா தௌரோ, அந்நாட்டின் மிகப்பெரிய சரக்கு மாற்றுத் (trans shipment) துறைமுகமாகும். கடந்த மார்ச் மாதம் இங்கு வந்தசந்தேகத்துக்குரிய கண்டெய்னர்களில் இருந்த எஃகு, மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள ஆர்.எல். ஸ்டீல்ஸ் அண்ட் எனர்ஜி (RL Steels & Energy)நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்டது எனப் போராட்டக் குழுக்கள் கண்டறிந்தன. இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸ் (Elbit Systems) நிறுவனத்துக்குச் சொந்தமான, வெடிமருந்து தயாரிக்கும் ஐ.எம்.ஐ. சிஸ்டம்ஸ் (IMI Systems) ஆலைக்கு இந்த எஃகு செல்வதாக பி.டி.எஸ். இத்தாலி அமைப்பு குற்றம்சாட்டியது. 155 மி.மீ. பீரங்கிக் குண்டுகள் தயாரிக்க இத்தகைய எஃகு பயன்படுகிறது.

யார் இந்த ஆர்.எல். ஸ்டீல்ஸ்?

ஆர்.எல். ஸ்டீல்ஸ் அண்ட் எனர்ஜி லிமிடெட், 1985 ஆகஸ்ட் 6 அன்று தொடங்கப்பட்டது. பங்குச்சந்தையில் பட்டிய

லிடப்படாத இந்தப் பொது நிறுவனத்தின் பதிவு அலுவலகம் தில்லியில் உள்ளது. இதன் ஆலை, அவுரங்காபாத் (தற்போது சத்ரபதி சம்பாஜிநகர்) பைத்தான் சாலையில் சித்தேகாவ் பகுதியில் இயங்குகிறது. கார்பன், அலாய், சிறப்பு வகை எஃகு பில்லெட்டுகள், உரு ளைக் கம்பிகள் ஆகியவற்றைத் தயாரிக்கிறது. இவை வாகன, பொறியியல், ஃபோர்ஜிங் தொழில்களுக்கான மூலப்பொருள் என்று நிறுவனம் தன்னைஅறிமுகப்படுத்துகிறது. பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. குப்தா குடும்பத்தினர் உள்ளிட்டோர் இதன் இயக்குநர்களாக உள்ளனர். வாகன உதிரிபாக நிறுவனமான அகார் ஆட்டோ இண்டஸ்ட்ரீஸின் தலைவர் சுனில்தோடியும் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட சுமார் 806 டன் அலாய் எஃகு மூலம் 17,000-க்கும் மேற்பட்ட 155 மி.மீ. பீரங்கிக்குண்டுகளைத் தயாரிக்க முடியும் என்று பி.டி.எஸ். மற்றும் ‘நோ ஹார்பர் ஃபார் ஜெனோசைட்’ அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன. இந்தச் சரக்குகள் மகாராஷ்டி ரத்தின் நவா ஷேவா துறை முகத்திலிருந்து எம்.எஸ்.சி. கப்பல்களில் இத்தாலிக்குச் சென்றன. இதே நிறுவனத்தின் மற்றொரு சரக்கு, மெர்ஸ்க் கப்பல் மூலம் மொராக்கோ வழியாக எகிப்தின் போர்ட் சையத் துறைமுகத்தில் ஜூன் மாதம் இறக்கப்பட்டதாகவும் பி.டி.எஸ். குற்றம் சாட்டியது. அதேநேரம்,சரக்கு ஆவணங்களின்படி இந்தஎஃகு நேரடியாக ஆயுத ஆலைக்குஅல்லாமல், இந்தியா-இஸ்ரேல் வர்த்தகத்தில் ஈடுபடும் ‘பன்யன் குரூப் இண்டர்நேஷனல்’ என்ற இடைத்தரகு நிறுவனத்துக்கு அனுப்பப்

பட்டதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்தன. குற்றச்சாட்டுகள் குறித்து நிறுவனத்தின் தரப்பில் பொது விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

சர்வதேச பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், துறைமுகத்துக்குள் இருக்கும் தொழிலாளர்கள் கண்டெய்னர்களைச் சரிபார்த்தனர். உறுதியானதும் புகார்கள், நாடாளுமன்றக் கேள்விகள், துறைமுக வாயிலில் மறியல் என போராட்டம் விரிவடைந்தது. மே 29 அன்று, இவற்றில் எட்டு கண்டெய்னர்களை ஏற்றிச்செல்ல வந்த எம்.எஸ்.சி. மனஸ்வி (MSC Manasvi) கப்பலை, ஐந்து படகுகளில் சென்ற போராட்டக்காரர்கள் துறைமுகத்துக்கு முன்பாகக் கடலில் வழிமறித்தனர். பல மணி நேரம் கடலில் காத்திருந்த அக்கப்பல், கண்டெய்னர்களைஏற்றாமலேயே திரும்பிச் சென்றது. செப்டம்பர் மாதத்துக்குள் தடுத்து வைக்கப்பட்ட கண்டெய்னர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்தது.

“இது போர்த் துறைமுகம் அல்ல”

ஓர்சா போர்ட்டி (ORSA Porti) துறைமுகத் தொழிலாளர் சங்கத்தின் தேசியச் செயலாளர் டொமெனிகோ “மிம்மோ” மக்ரிகூறுகையில், “பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்கான எஃகு, இரட்டைப் பயன்பாட்டு எஃகு கொண்ட கண்டெய்னர்களை இடைமறித்துத் தடுத்துள் ளோம். அவற்றில் 17 கண்டெய்னர்கள் இன்னும் இந்த முனையத்துக்குள்ளேயே உள்ளன. இது சாதாரணப் பொருட்களைக் கையாளும் வணிகத் துறைமுகம்; போர்த் துறைமுகம் அல்ல. எங்களுக்கும் போர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உலகின் அதிகார சக்திகள் எங்களை மரணத்தின் கருவிகளாகப் பயன்படுத்தமுயல்கின்றன” என்றார்.யு.எஸ்.பி. (USB) தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான பெப்பே மர்ரா கூறுகையில், “பார்வைக்கு இவை சாதாரண எஃகுக்கம்பிகள்தான். ஆனால் சேருமிடத்தில் அவை தோட்டாக்களாக மாறும் என்பது எங்களுக்குத் தெரியும். நாம் ஏற்றிய சரக்குசில நாட்களில் குழந்தைகள், பெண்கள், ஆண்களின் உயிரைப் பறிக்கிறது என்பதை அறியும்போது அது நம்மைப்பாதிக்கிறது; பாதிக்கவில்லை என்றால் நாம் மனிதர்களே அல்ல” என்றார்.

சுங்கத்துறை கட்டுப்பாட்டில் கண்டெய்னர்கள்

இந்த எஃகுக் கண்டெய்னர்கள் இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை. இத்தாலி சுங்கத்துறை அவற்றை ‘இரட்டைப் பயன்பாட்டுப் பொருள்’ (Dual-use material) என வகைப்படுத்தி, தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்நாட்டின் ஆயுத ஏற்றுமதி அனுமதி அமைப்பான யு.ஏ.எம்.ஏ. (UAMA) இறுதி முடிவு எடுக்கும் வரை அவற்றை வெளியே கொண்டு செல்ல முடியாது. கோப்புகள் “கவனமான ஆய்வில்” இருப்பதாக அக்டோபரில் யு.ஏ.எம்.ஏ. தெரிவித்துள்ளது.முன்னதாக, செப்டம்பர் 7 அன்று பால்மி அரசு வழக்கறிஞர்கள், நிதிக் காவல்துறை, சுங்கத்துறை மேற்கொண்ட தொழில்நுட்ப ஆய்வில் எட்டு கண்டெய்னர்களில் “குற்றவியல் முக்கியத்துவம் வாய்ந்த” பொருள் எதுவும் இல்லை என்றும், சரக்கு இஸ்ரேலுக்குச் செல்லும் என்றும் இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்தன.

மீதமுள்ள கண்டெய்னர்கள் சோதிக்கப்பட வில்லை எனவும் செய்திகள் வெளியாகின. ஆனால், சேருமிடம் மற்றும் இறுதிப்பயன்பாடு உறுதியாகச் சான்றளிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கோருவதாகவும், போரில் ஈடுபட்டு மனித உரிமைகளைமீறும் நாட்டுக்கு இத்தகைய பொருட்களின் போக்குவரத்தை அனுமதிக்க முடியாது என்றும் தொழிற்சங்கங்கள் உறுதியாகநிற்கின்றன. இதன் விளைவாக, 17 கண்டெய்னர்களும் இன்னும் துறைமுகத்தை விட்டு வெளியேறவில்லை.

முழுமையாகப் பறிமுதல் செய்யக் கோரிக்கை

சட்டரீதியான அனுமதிகள் வழியாக கண்டெய்னர்கள் மீண்டும் பயணத்தைத் தொடரலாம் என்ற அச்சம் நிலவுவதால், அவற்றை முழுமையாகப் பறிமுதல் செய்ய வேண்டும்எனத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டொமெனிகோ லுக்கானோ, 17 கண்டெய்னர்களையும் பறிமுதல் செய்யக் கோரி அக்டோபர் 24 அன்று நீதிமன்றத்தை நாடி

யுள்ளார். “இவ்வளவு கடுமையாகப் போராடித் தடுத்த பிறகு, அவை மீண்டும் பயணம் செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று மர்ரா தெரிவித்தார்.

இதற்கிடையே, போக்குவரத்துத் துறையில் வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்க வேண்டும் என இத்தாலி போக்குவரத்து அமைச்சர் மத்தேயோ சல்வினி அக்டோபர் 27 அன்று உத்தரவிட்டார். இதனை மீறுவோருக்கு 500 முதல் 1,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படலாம். ஆனால், இந்த உத்தரவு சட்டவிரோதமானது எனக் கூறிய யு.எஸ்.பி., திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவித்தது. அபராதத்துக்கு உள்ளாகும் தொழிலாளர்களுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்என்றும் உறுதியளித்தது.

எல்பிட் நிறுவனத்துக்கு 315 சரக்குகள்

ஆயுத விநியோகச் சங்கிலியை ஆய்வு செய்யும் ‘நோ ஹார்பர் ஃபார் ஜெனோசைட்’ (No Harbour for Genocide) அமைப்பு, 2025

ஆகஸ்ட் முதல் 2026 செப்டம்பர் வரை 29 நாடுகளின் 56 வணிகத் துறைமுகங்கள் வழியாக எல்பிட்

சிஸ்டம்ஸ் நிறுவனத்துக்கான 315 உதிரிபாகச் சரக்குகள் சென்றதைக் கண்டறிந்துள்ளது. 2025 அக்டோபர்போர்நிறுத்தத்துக்குப் பிறகும் காசா மீது ஏறக்குறைய தினசரி தாக்குதல்கள் தொடரும் நிலையில், உலகம்முழுவதும்துறைமுகத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.