உலகளாவிய உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது! விஐடி மாநாட்டில் முன்னாள் ஆளுநர் பி. சதாசிவம் பேச்சு
10 Dec 2025, 4:08 pm

உலகளாவிய உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புமையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது! விஐடி மாநாட்டில் முன்னாள் ஆளுநர் பி. சதாசிவம் பேச்சு

வேலூர், டிச.10 –

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறை சார்பில் நடைபெற்ற 19-வது உலகளாவிய உற்பத்தி மற்றும் மேலாண்மை மாநாட்டில், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளாவின் முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் மற்றும் விஐடி வேந்தர் முனைவர் கோ. விசுவநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பி. சதாசிவம்

உற்பத்தியும், மேலாண்மையும் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான இரட்டை எஞ்சின்களாக விளங்குகின்றன என்று பி. சதாசிவம் தெரிவித்தார். ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்ற தொலைநோக்குப் பார்வை யுடன், விண்வெளி, பாதுகாப்பு, செமி கண்டக்டர் போன்ற முக்கியத் துறைகளில் விரைவான வளர்ச்சியினால் இந்தியா, உலகளாவிய உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக உருவெடுத்து வருகிறது என்று அவர் பெருமிதம் கொண்டார். மாண வர்கள் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளை அறிந்து, துணிச்சல், தொலைநோக்குப் பார்வை போன்ற ஆறு பண்புகளுடன் வளர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோ. விசுவநாதன்

விஐடி வேந்தர் முனைவர் கோ. விசு வநாதன் பேசுகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 4-வது இடத்தில் இருந்தாலும், தனிநபர் வருமானம் சுமார் ரூ.2,41,800 (2,900 டாலர்கள்) மட்டுமே உள்ளதால், உலக அளவில் 140-வது இடத்தில் உள்ளது என்று சுட்டிக்காட்டினார். ஒரு நாடு மேம்பட்ட நாடாக மாற தனிநபர் வருமானம் சுமார் ரூ.9,96,000 முதல் ரூ.10,80,000 வரை (12,000 முதல் 13,000 டாலர்கள்) இருக்க வேண்டும் என்றார். உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதன் மூலமே வறுமையை நீக்கி, இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

உலக உற்பத்தியில் சீனா, அமெரிக்கா வுக்கு அடுத்தபடியாக இந்தியா 2.9 சதவீதப் பங்களிப்புடன் 5-வது இடத்தில் உள்ளது. உற்பத்தியில் கவனம் செலுத்தி, உற்பத்தி செய்ய முன்வருபவர்களுக்கு அரசு சலுகைகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மாநாட்டில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை முன்னாள் தலை வர் ஜி.சதீஷ் ரெட்டிக்கு வாழ்நாள் சாத னையாளர் விருதும், ஐஐடி பேராசிரியர் டி.பிரதீப்க்கு சிறந்த ஆராய்ச்சிக்கான விருதும், டிஆர்டிஓ விஞ்ஞானி ஜி.மது சூதன் ரெட்டிக்கு சிறந்த பணிக்கான விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மாநாட்டில் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், அறங்காவலர் ரமணி பாலசுந்தரம், உதவித் துணைத் தலைவர் காதம்பரி ச.விசுவநாதன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.