தீக்கதிர் விரைவு செய்திகள்
8 Jun 2026, 8:53 pm

ஈரான் பயணத்தை தவிர்க்க அரசு வேண்டுகோள்!’

புதுதில்லி, ஜூன் 8 - இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ள நிலை யில், ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு ஒன்றிய அரசு எச்சரிக்கை செய்துள்ளது. “சமீபத்திய சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் ஈரான் பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற முந்தைய அறிவுறுத்தலை தூதரகம் மீண்டும் வலி யுறுத்துகிறது. தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் கிடைக்க க்கூடிய போக்குவரத்து வசதிகள் மூலம் நாட்டை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி மீதான வழக்கு : ஆளுநர் அனுமதி

சென்னை, ஜூன் 8 - அதிமுக ஆட்சியின் போது, பண மோசடியில் ஈடு பட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. 2023-இல் அவர் கைதும் செய்யப்பட்டார். இந்த வழக்கில் செந்தில் பாலா ஜியை விசாரிக்க, அமலாக்கத் துறை அனுமதி கோரி யிருந்தது. இதற்கு தவெக அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், தற்போது ஆளுநர் அர்லேகரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

போட்டியின்றி தேர்வாகும் பிரவீன் சக்கரவர்த்தி

சென்னை, ஜூன் 8 - தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் காங்கி ரஸ் கட்சி வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வாகிறார். திங்கட்கிழமை (ஜூன் 8) மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கலுக்கான அவகாசம் முடிவடைந்த நிலையில், பிரவீன் சக்கர வர்த்தி தவிர, அரசியல் கட்சி கள் சார்பில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வில்லை. இதனால், பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங் களவை உறுப்பினராக போட் டியின்றி தேர்வு பெறுவது உறுதியாகியுள்ளது.