அதள பாதாளத்தில் நாட்டின் உள்கட்டமைப்புத் துறை
23 Jun 2026, 11:55 pm

அதள பாதாளத்தில் நாட்டின் உள்கட்டமைப்புத் துறை

ஒன்றிய பாஜக அரசு தனது வெற்று முழக் கங்களாலும் கார்ப்பரேட் சார்புக் கொள்கைக ளாலும் நாட்டின் பொருளாதார அடித்தளத்தை முற்றிலுமாகச் சிதைத்து வருகிறது என்பதற்கு, தற்போது வெளியாகியுள்ள மிக முக்கியத் தொழில் துறைகளின் உற்பத்தித் தரவுகளே சாட்சியாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி யைத் தீர்மானிக்கும் எட்டு முக்கிய உள்கட்ட மைப்புத் துறைகளின் வளர்ச்சி, கடந்த மே 2026-இல் வெறும் 0.5 சதவீதமாகக் கடுமையாகச் சரிந்து வீழ்ச்சியடைந்துள்ளது. இது கடந்த 21 மாதங்க ளில் இல்லாத இரண்டாவது மிக மோசமான சரி வாகும் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் அப்பட்டமாக காட்டியுள்ளன.

பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டி யுள்ளபடி, கடந்த ஆண்டு மே மாதத்தில் 1.2 சத வீதமாக இருந்த வளர்ச்சி, இந்த ஆண்டு பாதியா கக் குறைந்து ஏமாற்றமளித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் கச்சா எண்ணெய் உற்பத்தி 4.6 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 4.9 சதவீதமும் சரி வைச் சந்தித்துள்ளன. மோடி அரசின் தவ றான வெளியுறவுக் கொள்கைகளால் ஏற் பட்டுள்ள மேற்கு ஆசியப் பிராந்திய நெருக்கடி யின் நேரடிப் பாதிப்பு இதுவாகும் என இக்ரா (ICRA) அமைப்பின் முதன்மைப் பொருளாதார வல்லுநரும் எச்சரித்துள்ளார். மேலும், சுத்திக ரிப்பு தயாரிப்புகள் 8.7 சதவீதம் சரிந்து மூன்றரை ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான நிலையை எட்டியுள்ளதோடு, நிலக்கரித் துறை 9.3 சதவீதம் சுருங்கி 10 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியைக் கண்டுள்ளது. நாட்டின் முதன்மைத் தொழில்களான எஃகு 5 சதவீதமாகவும், சிமெண்ட் 8.4 சதவீதமாகவும் வளர்ச்சிக் குறை வைச் சந்தித்து முடங்கிக் கிடக்கின்றன.

உரத்துறை தொடர்ந்து மூன்றாவது மாதமாக 0.9 சதவீதம் சுருங்கியிருப்பது நாட்டின் விவசாயப் பாதுகாப்புக்கே விடப்பட்ட சவாலாகும். உற்பத்தித் துறையின் இந்த முடக்கம் உற்பத்திச் சங்கிலியைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பறித்து, கடுமையான நுகர்வுச் சரிவை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய இமால யப் பொருளாதாரத் தோல்விகளை மூடி மறைக்க, மோடி அரசு வழக்கம் போல் போலி யான வளர்ச்சிப் பிம்பங்களை ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றத் துடிக்கி றது. நாட்டின் தொழில் உள்கட்டமைப்பைத் தாராளமயமாக்கல் என்ற பெயரில் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்ததன் விளைவை தேசம் இப்போது அனுபவிக்கிறது. நாட்டின் பொருளாதாரப் பேரழிவை நோக்கிச் செல்லும் மோடி அரசின் மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளை முற்போ க்குச் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து வீரியத்துடன் அம்பலப்படுத்த வேண்டும்.