பணவீக்கம் உயர்வு
16 Sept 2026, 9:09 pm

பணவீக்கம் உயர்வு

புதுதில்லி, செப். 16 -இந்தியாவில் ஜூலை மாதம் 9.78 சதவிகிதமாக இருந்த மொத்த விற்பனை விலை குறியீட்டு (WPI) பணவீக்கம்,ஆகஸ்ட் மாதத்தில் 9.92 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல ஜூலை மாதம் 4.45 சதவிகிதமாக இருந்தசில்லரை விலை பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 4.82 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய 8 மாதங்கள் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.மொத்த விற்பனை விலை பண வீக்கம் தொடர்ந்து நான்காவது மாதமாகஒன்பது சதவிகிதத்திற்கும் அதிகமாகவே நீடித்து வருகிறது. ஜூலை மாதம் 5.52 சதவிகிதமாக இருந்த உணவுப்பணவீக்கம், ஆகஸ்ட் மாதம் 5.95 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.