இந்தியாவில் நிலவும் தீவிர வெப்ப அலைக்கு காலநிலை மாற்றமே காரணம்
28 May 2026, 9:40 pm

இந்தியாவில் நிலவும் தீவிர வெப்ப அலைக்கு காலநிலை மாற்றமே காரணம்

பெர்லின் இந்தியாவில் நிலவும் தீவிர வெப்ப அலைக்கு காலநிலை மாற்றமே காரணம் என ஐக்கிய நாடுகளின் சபை யின் காலநிலை மாற்ற தலைவர் சைமன் ஸ்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகை யில்,“காலநிலை மாற்றம் காரணமாக இந்தி யாவில் பெரும் பகுதிகளில் நீடித்து வரும் தீவிர வெப்ப அலை, மக்கள் மீதும் பொருளாதாரத்தின் மீதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

குளிர்விக்கும் வசதிகள் இல்லாத மக்களும், நீண்ட நேரம் வெளியில் வெயிலில் வேலை செய்பவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட நாட்களாக நீடிக்கும் அதிக வெப்ப நிலை காரணமாக, இந்தியா முழுவதும் மின்சா ரத்திற்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மே 18 அன்று 257.3 கிகாவாட் ; மே 19 அன்று 260.4 கிகாவாட் ; மே 20 அன்று 265 கிகாவாட் ; மே 21 அன்று 270.8 கிகாவாட் அளவில் இந்தியாவின் மின்சார தேவை அதிகரித்துள்ளது.

இதில் மே 21 அன்று பயன்படுத்தப்பட்ட மின்சார அள வான 270.8 கிகாவாட் அளவு புதிய வரலாற்று அளவாகும்.

இந்தியாவில் பகல் நேர மின் தேவையைப் பூர்த்தி செய்ய சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக் கத்தக்க ஆற்றல் வளங்கள் உதவியுள்ளன.

சூரிய மின்சக்தியை அதிகரிக்க இந்தியா எடுத் துள்ள தீவிர நடவடிக்கைகள் நல்ல பலனைத் தந்துள்ளன.

மேற்கு ஆசியாவில் நிலவும் மோ தல்கள் காரணமாக, புதைபடிவ எரிபொ ருட்களின் விலை, இறக்குமதி செய்யப்படும் ஆற்றலின் விலை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது.

இத்தகைய சூழ்நிலையில் நிலவும் இந்த தீவிர வானிலை, மக்களின் வாழ்வாதாரத்திற் கும் வாழ்க்கைக்கும் ஒரு ‘இரட்டைச் சுமை யாக’ மாறியுள்ளது.

இந்த தீவிர வானிலை நிகழ்வுகள், உலகளவில் காலநிலை மாற்றத் தின் தாக்கங்களுக்கு ஏற்ப நம்மை (உலக மக்கள்) மாற்றியமைத்துக் கொள்வதற்கான நட வடிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்த்து கின்றன” என சைமன் ஸ்டீல் கவலை தெரி வித்துள்ளார்.