9 மாதங்களில் 322 வெறுப்புக் குற்றங்கள்; சிறுபான்மையினர் 54 பேர் உயிரிழப்பு மூன்றில் ஒரு சம்பவத்தில் அரசு இயந்திரமே பங்கேற்பு – ஏபிசிஆர் அதிர்ச்சி அறிக்கை
12 Nov 2026, 8:59 pm

9 மாதங்களில் 322 வெறுப்புக் குற்றங்கள்; சிறுபான்மையினர் 54 பேர் உயிரிழப்பு மூன்றில் ஒரு சம்பவத்தில் அரசு இயந்திரமே பங்கேற்பு – ஏபிசிஆர் அதிர்ச்சி அறிக்கை

புதுதில்லி, நவ. 12 – 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான ஒன்பது மாதங்களில், இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக 322 வெறுப்புக் குற்றங்கள் நடந்துள்ளதாகவும், இவற்றில் 54 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சங்கம் (APCR) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. 24 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நவம்பர் 10 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி,சராசரியாக வாரத்துக்கு 8, அதாவது நாளொன்றுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வெறுப்புக் குற்றம் நிகழ்ந்துள்ளது.‘வெறுப்புக் குற்றக் கண்காணிப்பு’, ‘வெறுப்புப் பேச்சுக் கண்காணிப்பு’ என இரண்டு பகுதிகளாக வெளியான அறிக்கைகளில் மொத்தம் 405 சம்பவங்கள்ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

குழந்தைகள், பெண்களும் பாதிப்பு

322 சம்பவங்களில் 307 முஸ்லிம் களையும், 14 கிறிஸ்தவர்களையும், ஒன்று இரு பிரிவினரையும் குறிவைத்து நடந்துள்ளன. குறைந்தது 488 முஸ்லிம் களும் 90 கிறிஸ்தவர்களும் துன்புறுத்தல், தாக்குதல், கைது, இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 48 குழந்தைகள், 26 பெண்கள், 9 முதியவர்கள் அடங்குவர். கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் பெரும்பாலும் மதமாற்றக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்பு

டையவை; சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் 25-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரார்த்தனைக் கூட்டம் தாக்கப்பட்டது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

காவல் மரணங்கள், போலி என்கவுண்டர்கள்

அதிர்ச்சியளிக்கும் வகையில், 119 சம்பவங்களில் (37 சதவீதம்) அரசு அதிகாரிகளின் தலையீடு அல்லது பங்களிப்பு இருந்துள்ளது. அதாவது, வன்முறையைத் தடுக்க வேண்டியவர்களே மூன்றில் ஒரு சம்பவத்தில் அதில் பங்கேற்றுள்ளனர். குறைந்தது 115 சம்பவங்களில் காவல்துறை, ராணுவப் பிரிவு, உள்ளாட்சி அமைப்பு அல்லது நிர்வாகம் நேரடியாக ஈடுபட்டுள்ளன. அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளால் 21 பேர் உயிரிழந்துள்ளனர்; இவர்களில் 12 பேர் போலி என்கவுண்டர்களிலும், 9 பேர் காவல் அல்லது சிறைக் காவலிலும் இறந்துள்ளனர். உத்தரப் பிரதேசம் காசியாபாத்தில் மார்ச் மாதம் சகோதரர்கள் ஜீஷான், குல்ஃபாம் கொல்லப்பட்டது, அகமதாபாத்தில் 70 வயதான ஜாஹீர் ஷேக் காவலில் உயிரிழந்தது ஆகியவை அறிக்கையில் முக்கிய வழக்குகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

83 வெறுப்புப் பேச்சுகள்; ஒரே ஒரு கைது

இதே காலத்தில் 16 மாநிலங்களில் 57 பேச்சாளர்களால் 83 வெறுப்புப் பேச்சுகள் பேசப்பட்டுள்ளன. இவற்றில் 33 பேச்சுகள் அரசு அல்லது பொதுப் பதவிகளில் உள்ளவர்களால் பேசப்பட்டவை; 11 பேச்சுகள் முதலமைச்சர்களான யோகி ஆதித்யநாத் (உத்தரப் பிரதேசம்), ஹிமந்த பிஸ்வ சர்மா(அசாம்), புஷ்கர் சிங் தாமி (உத்தரகண்ட்), சுவேந்து அதிகாரி (மேற்கு வங்கம்) ஆகியோருடையவை. இந்துத்துவ அமைப்புகள், மதத் தலைவர்கள் 25 பேச்சுகளைப் பேசியுள்ளனர். தொடர்ந்து வெறுப்பைப் பரப்பும் சுமார் 12 பேர் மட்டுமே கிட்டத்தட்ட 50 பேச்சுகள், காணொலிகளுக்குக் காரணமாக உள்ளனர்; அவர்களில் 7 பேர் பொதுப்பதவிகளில் உள்ளவர்கள். கிறிஸ்தவர்களைக் குறிவைத்து 4 வெறுப்புப் பேச்சுகள்பதிவாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் மார்ச் 14 கொல்கத்தா உரை, ஒன்றியஉள்துறை அமைச்சர் அமித் ஷாவின்உரைகளும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 37 பேச்சுகளில் வன்முறைக்கான அழைப்பும், இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற தூண்டுதலும்இருந்தன. ஆனால், 6 பேச்சுகளுக்கு மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது; ஒரே ஒரு வழக்கில் மட்டுமேகைது நடந்துள்ளது.

பொறுப்புக்கூறல் தேவை

வெறுப்புக் குற்றங்கள், வெறுப்புப் பேச்சுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும், இதுதொடர்பான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக அமல்படுத்த வேண்டும், உரிமை மீறல்களைஆவணப்படுத்துவோருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஏபிசிஆர் வலியுறுத்தியுள்ளது.