தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது இந்தியாவை கடுமையாக விமர்சித்த

31 Dec 2025, 3:37 pm
இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது இந்தியாவை கடுமையாக விமர்சித்த
<p><strong>இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது இந்தியாவை கடுமையாக விமர்சித்த</strong></p> <p>ஜெலன்ஸ்கி கீவ்,டிச.31- &nbsp;இந்தியா இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடுமை யாக விமர்சித்துள் ளார். &nbsp;ரஷ்ய ஜனாதிபதி புடினின் வீட்டின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்திய தாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு இந்திய பிரதமர் மோடி &nbsp;கவலை தெரிவித்ததுடன், ராஜதந்திர முயற்சிகளே அமைதிக்குச் சரியான வழி. அமைதி முயற்சிகளைச் சிதைக்கும் எந்தவொரு செயலையும் அனைத்துத் தரப்பினரும் தவிர்க்க வேண்டும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் &nbsp;குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஜெலன்ஸ்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகளால் உக்ரைன் குழந்தைகள் கொல்லப்படுவது குறித்து இந்தியா மௌனம் காப்பது ஏன் ? இது குறித்த எந்தக் கண்டனமும் இந்தியாவிடமிருந்து வராதது ஏன்? இது குழப்பமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் நாங்கள் &nbsp;டிரோன் தாக்குதல் நடத்தவில்லை. இந்நிலையில் &nbsp;அதனை &nbsp;இந்தியா போன்ற நாடுகள் கண்டிப்பது வியப்பாக உள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். &nbsp;டிசம்பர் 28-29 தேதிகளில் நோவ்கோகிராட் பகுதியில் உள்ள புடினின் &nbsp;இல்லத்தை 91 டிரோன்கள் மூலம் உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இந்நிலை யில் உக்ரைன் இக்குற்றச்சாட்டை ஏற்க மறுத்து வருகிறது. மேலும் ரஷ்யாவின் குற்றச்சாட்டிற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. &nbsp;அமைதிப் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைக்கவே ரஷ்யா இத்தகைய பொய்களைக் கூறி வருகிறது என அந்நாட்டை உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.