டாலர் சரிவும் பாஜகவின் வண்ணக்கனவும்!
yesterday

டாலர் சரிவும் பாஜகவின் வண்ணக்கனவும்!

2025ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக உயர்ந்து, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தைப் பிடிக்கும் எனப் பிரதமர் மோடியும் பா.ஜ.க. அரசாங்கமும் இந்திய மக்களுக்கு வண்ணக்கனவுகளை வாரி வழங்கினர்.

ஆனால், 2026 தரவுகளின்படி இந்தியா 3.92 டிரில்லியன் டாலருடன் 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைவிட ரூபாய் மதிப்பில் ஜி.டி.பி. சற்று உயர்ந்திருந்தாலும், டாலர் கணக்கீட்டில் சரிவைச் சந்தித்துள்ளது. டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் வரலாறு காணாத அளவிற்கு 4.26% வீழ்ச்சியடைந்ததே இதற்குக் காரணம்.

அதேநேரம் யூரோ, யென் போன்ற நாணயங்கள் உயர்ந்துள்ளன. ரூபாயின் மதிப்பைக் காப்பாற்ற இயலாத மோடி அரசின் கையாலாகாத்தனமே இந்தச் சர்வதேசச் சரிவுக்குக் காரணம். மேலும், தனிநபர் சராசரி ஜி.டி.பி. வரிசையில் இந்தியா 150வது இடத்தில் மிக மோசமாக உள்ளது.

பொருளாதாரச் சிதைவிலிருந்து மீள வழிதெரியாமல், நெருக்கடியை ஒப்புக்கொள்ளவும் மறுக்கும் பா.ஜ.க., மக்களின் சிந்தனையை மடைமாற்ற மதவாதத்தை மட்டுமே ஆயுதமாக்குகிறது. அதற்குச் சங் பரிவார அமைப்புகளும் துணை நிற்கின்றன.