புள்ளிவிவர மாயாஜாலமும் உடைபடும் உண்மையும்!
2 Sept 2026, 8:51 pm

புள்ளிவிவர மாயாஜாலமும் உடைபடும் உண்மையும்!

ஒன்றிய பாஜக அரசு “இந்தியா 7.8சதவிகிதம் ஜிடிபி வளர்ச்சியுடன் உலகிலேயே மிகவேகமாக வளரும் பொருளாதாரம்” என்று முரசு கொட்டுகிறது. ஆனால், மக்களின் நுகர்வு வளர்ச்சி வெறும்3.9 சதவிகிதத்திற்குள்ளே இருப்பது எப்படி?

உண்மையான ஜிடிபி என்பது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பும், மக்களின் ஒட்டுமொத்த செலவினம், தனியார் மற்றும்அரசின் ஒட்டு மொத்த முதலீட்டுச் செலவினம் உட்பட ஒட்டு மொத்த செலவின் மதிப்பும் சமமாகஇருக்க வேண்டும். ஆனால் இங்கு செலவின வழி ஜிடிபி தொடர்ந்து சரிந்து கொண்டே போகிறது. மக்கள் கையில் பணமில்லை; பொருட்களுக்கான நுகர்வு குறைந்து கொண்டே வருகிறது. செலவழிக்கும் சக்தி குறையும் போது ஜிடிபி மட்டும் எப்படி 7.8சதவிகிதம் உயரும்? இந்த முரண்பாட்டைச் சரிசெய்ய ஆட்சியாளர்கள் ‘புள்ளிவிவரச் சரிசெய்தல்’ மற்றும் விற்காத ‘சரக்கு இருப்புகளை’ நேர்மறையாகக் கணக்கில் சேர்த்து செயற்கையாக வளர்ச்சி பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.

ஜிஎஸ்டி வசூல் மாதம் ரூ.2 லட்சம் கோடியைத் தொட்டு சாதனை படைத்துவிட்டது என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டிவசூலில் உள்நாட்டு உற்பத்தி சார்ந்த வரியை விட, வெளிநாட்டு இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வரியே 29சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. சொந்த நாட்டில் உற்பத்தியை அதிகரிக்காமல், இறக்குமதியைச் சார்ந்து வாழும் ஒரு பொருளாதாரம் எப்படி வளர்ச்சியாக இருக்கும்? அது வீழ்ச்சியின் வெளிப்பாடே.

ஒருபக்கம் நாடு வளர்கிறது என்று சொல்லிக்கொண்டே, மறுபக்கம் பிரதமர் “சுயசார்பு இந்தியா” என்று ஏன் பேச வேண்டும்? நிஜமாகவே உற்பத்தித் துறை வளர்ந்திருந்தால் சுயசார்பைப் பற்றிய பயம் ஏன் வரவேண்டும்? அதேபோல, 7.8 சதவிகிதம் ஜிடிபி வளரும் ஒரு நாட்டில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஏன் தொடர்ச்சியாக வீழ்ச்சியடையவேண்டும்?

ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளால் இன்று பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே வளர்கின்றன. இந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளைத் தருகிறசிறு-குறு தொழில்களை அழித்து, அவற்றின் சந்தையைப் பெரு நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன. சிறு தொழில்களின் அழிவைப் பெரு நிறுவனங்களின் “வளர்ச்சி” என்று அரசு தவறாகக் கணக்கிடுகிறது. இது உண்மையான பொருளாதார வளர்ச்சி அல்ல; சிறிய மீன்களைப் பெரிய மீன் விழுங்கும் ஆபத்தான போக்கு.

மக்களைப் பொறுத்தவரை ஜிடிபி என்பது காகிதத்தில் அச்சிடப்படும் எண்கள் அல்ல; அவர்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் வாங்கும் சக்தியின் வளர்ச்சி என்பதே. புள்ளிவிபரங்களை மாற்றி மக்களைக் கொஞ்ச காலம் ஏமாற்றலாம். ஆனால், இறக்குமதியை நம்பி,முறைசாராத் துறையை அழித்து, கடனில் கட்டப்படும் இந்த போலி ஜிடிபி கோபுரத்தை நீண்டகாலத்திற்கு உண்மை என்று நம்ப வைக்க முடியாது. உடைபடும் நாள் வெகுதொலைவில் இல்லை.