தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6% ஆக குறையும்

11 Jun 2026, 8:36 pm
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6% ஆக குறையும்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6% ஆக குறையும்

பிட்ச் நிறுவனம் கணிப்பு

நடப்பு நிதியாண்டில் (FY-2026/27) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6% ஆக குறையும் என பிரபல பொருளாதாரக் கணிப்பு நிறுவன மான பிட்ச் (Fitch) நிறுவனத்தின் பிஎம்ஐ பிரிவு தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான அறிக்கை யில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது, “கடந்த வாரம் ஒன்றிய அரசு வெளி யிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, கடந்த 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7.7 சதவீதமாக இருந்தது. வலுவான நுகர்வு, சிறப்பான முதலீட்டு நட வடிக்கைகள் காரணமாக இது சாத்தியமானது. ஆனால், நடப்பு நிதியாண்டில் நிலைமை அப்படி அல்ல. பலவீனமான முதலீடுகள், நுகர்வு வளர்ச்சி குறைவு, மேற்கு ஆசிய நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வர்த்தக அதிர்ச்சிகள் காரணமாக, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆக குறைய வாய்ப்புள்ளது.

மேலும் மங்கும்

2025 செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங் களால் கடந்த ஆண்டின் டிசம்பர் காலாண்டில் நுகர்வு பெருமளவு அதிகரித்தது. ஆனால், மார்ச் காலாண்டில் இது 1.1 சதவீதம் சரிந்து 7.1 சதவீதமாகக் குறைந்தது. இந்த நுகர்வுப் பலன்கள் நடப்பு நிதியாண்டில் மேலும் மங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் 5.3 சதவீதத்தை எட்டக்கூடும். அதேநேரம், ஈரான் மோதல், ஹோர்முஸ் நீரிணை பகுதிகளில் ஏற்பட்டுள்ள இடை யூறுகளால் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் கடுமையான சிக்கல் எழுந்துள் ளது. இது உள்நாட்டு நுகர்வை கடுமையாகப் பாதிக்கும். குறிப்பாக நடப்பு நிதியாண்டில் புதிய முதலீடுகளின் வேகமும் குறையும்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த காலண்டர் ஆண்டில் சராசரியாக 95.1 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகும். கடந்த 2025ஆம் ஆண்டில் ரூபாயின் சராசரி மதிப்பு 87 ஆக இருந்தது. தற்போது ரூபாய் மதிப்பு சரிவடைவது இந்தியாவின் ஏற்றுமதித் திறனை சற்று அதிகரிக்க உதவும். மேலும் மேற்கு ஆசிய நெருக்கடியால் ஏற்படும் வர்த்தக இழப்புகளை ஓரளவுக்கு ஈடுசெய்யும்” என தனது கணிப்பில் பிஎம்ஐ நிறுவனம் கூறியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.