முந்தய பக்கம்

ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை 42.1 சதவீதமாக அதிகரிப்பு!

31 Oct 2026, 11:44 pm
ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை 42.1 சதவீதமாக அதிகரிப்பு!
<p><strong>ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை 42.1 சதவீதமாக அதிகரிப்பு!</strong></p><p>புதுதில்லி, அக்.31-நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை, முழு ஆண்டு பட்ஜெட் இலக்கில் 42.1 சதவிகிதத்தை எட்டியுள்ளது.முந்தைய ஆண்டின் இதே காலகட்டத் தில், நிதிப் பற்றாக்குறை 2025-26-ஆம் ஆண் டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் 36.5 சதவீதமாக இருந்தது. தற்போது 42.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது மத்திய தலைமை கணக்குத் தணிக் கையாளர் (சிஜிஏ) அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.</p><p>நடப்பாண்டு செப்டம்பா் வரை ஒன்றிய அரசின் நிகர வரி வருவாய் ரூ. 12.76 லட் சம் கோடியாக - நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில் 44.5சதவீதமாக இருந்தது. இந்த வருவாய் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 43.3 சதவீதமாக இருந்தது.அதேநேரம், மாதாந்திர கணக்குத் தரவுகளின்படி, ஒன்றிய அரசின் மொத்த செலவினம் சுமார் ரூ. 25.5 லட்சம் கோடியாக உள்ளது. இது, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய நிதியமைச்சா் நிா்லாசீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் 47.7 சதவிகிதத்துக்குச் சமமாகும்.நிதிப் பற்றாக்குறை, முழு ஆண்டுக் கான ஒட்டுமொத்த பட்ஜெட் இலக்கில் 42.1 சதவீதத்தை எட்டியுள்ளது. அதாவது, செப்டம்பர் மாத இறுதியில் வருவாய்க்கும் செலவினங்களுக்குமான இடைவெளி ரூ. 7,14,413 கோடியாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram