விண்வெளித்துறையில் தனியார்மயம் துவங்கியது விக்ரம்-1 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!
18 Jul 2026, 9:55 pm

விண்வெளித்துறையில் தனியார்மயம் துவங்கியது விக்ரம்-1 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!

ஸ்ரீஹரிகோட்டா, ஜூலை 18 - இந்தியாவின் முதலாவது தனியார் ராக் கெட்டான விக்ரம்-1, இஸ்ரோ விஞ்ஞானி களின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டு, திட்டமிட்டபடி அதன் புவிவட்டப் பாதை யை அடைந்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு

சென்னையில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு விக்ரம்-1 ராக்கெட் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கவுன்டவுன் நிறுத்தப்பட்டு ஏவுதல் சிறிது நேரம் தள்ளிவைக்கப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகள் உடனடியாக கோளாறை சரிசெய்ததை அடுத்து, மீண்டும் கவுன் டவுன் தொடங்கப்பட்டு, 12.05 மணிக்கு ராக்கெட் திட்டமிட்டபடி விண்ணில் ஏவப் பட்டது.

தனியாருக்கு அனுமதி

ஒன்றிய பாஜக அரசானது, இந்திய விண்வெளித் துறையை 2020-இல் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்து விட்டது. அதைத்தொடர்ந்து, ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறு வனம் விக்ரம்-1 ராக்கெட்டை வடிவ மைத்துத் தயாரித்திருந்தது. உள்நாட்டிலேயே தனியார் நிறுவனத் தால் வடிவமைக்கப்பட்டு, சுற்றுப்பாதை திறன்கொண்ட இந்தியாவின் முதலாவது தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் என விக்ரம்-1 பெயர்பெற்றது.

பெயர்ச் சிறப்பு

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் மறைந்த டாக்டர் விக்ரம் சாராபாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த ராக்கெட் டுக்கு ‘விக்ரம்’ எனப் பெயரிடப்பட்டது. ‘பிராரம்பம்’ எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், கிரஹா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்-ன் சொந்த ‘ஸ்கோப்’ ஆகிய தொழில்நுட்ப கருவிகளுடன், விக்ரம் சாரா பாய், சி.வி. ராமன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோரின் தங்கச் சிற்பங்களும், ஆய்வ கத்தில் உருவாக்கப்பட்ட வைரக்கல்லும் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த என்-ஸ்பேஸ்டெக் மற்றும் ஆர்மீனியாவின் பஸூம்க்யூ விண்வெளி ஆராய்ச்சி ஆய்வ கம் ஆகிய இரண்டு உள்நாட்டு மற்றும் ஒரு வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமான மூன்று பேலோடுகளையும், இந்த ராக்கெட் சுமந்து சென்றது

தொழில்நுட்ப அம்சங்கள்

உலகிலேயே முழுமையாக கார்பன் கலவைப் பொருட்களால் உருவாக்கப் பட்ட முதல் ராக்கெட் இதுவாகும். இதனால் வழக்கமான ராக்கெட்டுகளை விட உலோ கப் பயன்பாடு ஐந்தில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது. 3டி அச்சிடப்பட்ட என்ஜின்களைக் கொண்ட மூன்று கட்ட ராக்கெட்டான இது, முதல் இரண்டு கட்டங் களில் திட எரிபொருளையும், இறுதிக் கட்டத்தில் திரவ எரிபொருளையும் பயன்படுத்துகிறது.

பிரதமர் ‘மகிழ்ச்சி’

விக்ரம்-1 திட்டம் வெற்றியடைந்ததை அடுத்து விஞ்ஞானிகள் கைத்தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்டோர் ஸ்கைரூட் குழு வினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். செல்போன் மூலம் ஸ்கைரூட் குழுவின ருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த தோடு, “இந்தியாவின் பெருமை உச்சத் திற்குச் சென்றுள்ளது” என்றும் குறிப் பிட்டுள்ளார். இந்தச் சாதனை மூலம் இந்தியா சரித்தி ரம் படைக்கத் தயாராக உள்ளதாகவும், விண்வெளித் துறை சீர்திருத்தங்களால் (தனியார்மயம்) விண்வெளிக் குப்பைகள் மேலாண்மை, நானோ செயற்கைக்கோள், ஏவுகணை, தரை அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளில் சுமார் 102 புத்தொழில் நிறுவனங்கள் செயல் பட்டு வருவதாக ஒன்றிய அரசின் பணியா ளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.