இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
17 Jul 2026, 9:27 pm
<p><strong>இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது</strong> </p><p>சென்னை, ஜூலை 17- இந்தியாவில் தயாரான முதல் தனியார் ராக் கெட்டான விக்ரம்-1, சனிக் கிழமை (ஜூலை 18) காலை 11.30 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண் வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து விண் ணில் ஏவப்பட உள்ளது. ராக்கெட் மற்றும் நிறுவனம் ஐதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ் பேஸ் நிறுவனம் இந்த விக்ரம்-1 ராக்கெட்டை தயாரித்து உள்ளது. இப்பணிக்கு ‘பிரரம்ப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏழு அடுக்கு உயரம் கொண்ட இந்த பல நிலை சுற்றுப்பாதை ஏவுகணை வாகனம், முழுக்க முழுக்க கார்பன் கலவை அமைப்புடன் கட்டப்பட்டு, 3டி-அச்சிடப்பட்ட எந்திரங்கள் மற்றும் உயர் உந்துதல் திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர் கள் மூலம் இயக்கப்படுகிறது. ராக்கெட் 545 கிலோ எடை யும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும், 7 டன் உந்து சக்தியும் கொண்டது. சுமந்து செல்லும் பொருட்கள் சுமார் 83 கிலோ எடையை தூக்கிச் செல்லும் இந்த ராக்கெட், இரண்டு இந்திய செயற்கைக் கோள்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு செயற்கைக்கோள் உள்பட மொத்தம் மூன்று செயற்கைக் கோள்களை சுமந்து செல்கிறது. இந்த மூன்று செயற்கைக் கோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 300 வினாடிகளில் நிலை நிறுத்தப்பட்டு, பூமியில் இருந்து தகவல்களை திரட்டு வதற்குப் பயன்படுத்தப்படும். இது சில நூறு கிலோ எடையுள்ள செயற்கைக்கோள் களை குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த வடி வமைக்கப்பட்ட ஒரு சிறிய வகை ராக்கெட் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p>
