வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா உலகின் முதல் 10 பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!
17 Jul 2026, 8:17 pm
<p><strong>வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா உலகின் முதல் 10 பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!</strong></p><p>சண்டிகர் இந்தியாவின் ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக, நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சனியன்று ஹரியானா மாநிலம் ஜிந்த் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடியால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் சோனிபட் வரை செல்கிறது. உலகின் பிற நாடுகளில் ஹைட்ரஜன் ரயில்கள் பொதுவாக 3 அல்லது 4 பெட்டிக ளைக் கொண்டவையாகவே உள்ளன. ஆனால், இந்தியா தனது முதல் முயற்சி யிலேயே 10 பெட்டிகளைக் கொண்ட பிரம்மாண்டமான ஹைட்ரஜன் ரயிலை உரு வாக்கி உலக அரங்கில் சாதனை படைத்து ள்ளது. இதன்மூலம் ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு வலிமை யான சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் முதல் 10 பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரயில், தமிழ்நாட்டின் சென்னை யில் உள்ள புகழ்பெற்ற ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலையில் (Integral Coach Factory - ICF) வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
