இறக்குமதிச் சார்பும் தனியார் லாபமும்! உர மானியக் கொள்கையை அம்பலப்படுத்திய மக்களவை தரவுகள்
1 Aug 2026, 9:57 pm

இறக்குமதிச் சார்பும் தனியார் லாபமும்! உர மானியக் கொள்கையை அம்பலப்படுத்திய மக்களவை தரவுகள்

நாட்டின் உர மானியக் குறைப்பினால் விவசாயிகளின் சாகுபடிச் செலவு உயர்ந்து, தனியார் உர நிறுவனங்கள் பலனடைவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு இடையே, உரங்களின் உற்பத்தி, மானியம்மற்றும் இறக்குமதி சார்ந்த விவரங்களை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் எழுப்பிய எழுத்துப்பூர்வக்கேள்விக்கு (எண்: 2268), ஒன்றிய இரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் அனுபிரியா படேலஜூலை 31 அன்று பதிலளித்தார்.

உர மானியம், உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி

உர உற்பத்தியாளர்களை முறைப்படுத்தாமல் உர மானியங்களைக் குறைப்பது விவசாயிகளின் உள்ளீட்டுச் செலவை உயர்த்தியுள்ளதா, நாட்டின் உரமானியச் சுமைக்கு இறக்குமதியைச் சார்ந்திருப்பதே முதன்மைக் காரணமா மற்றும்உள்நாட்டு பொதுத்துறை உர உற்பத்தியைவலுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள்என்ன என்பன குறித்து ஆர். சச்சிதானந்தம் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த ஒன்றிய இணைஅமைச்சர் அனுபிரியா படேல், பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் (P&K) உரங்களுக்கு2010 முதல் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டம் (Nutrient Based Subsidy - NBS) அமலில் உள்ளதாகத் தெரிவித்தார்.

ஒன்றிய அரசு அளித்துள்ள பதிலின் முக்கிய அம்சங்கள்:

lகுறுவை 2026 பருவ மானியம்: உலகச் சந்தை மாறுபாடுகளால் ஏற்படும்விலைஉயர்வை எதிர்கொள்ள, குறுவை2026 பருவத்திற்கு என்.பி.எஸ் (NBS)திட்டத்தின்கீழ் ₹41,533.81 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சம்பா 2025-26 பருவத்திற்கு ஒதுக்கப்பட்டதை விட தோராயமாக ₹3,581 கோடி கூடுதலாகும்.

lஉள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்பு: இறக்குமதிச் சார்பைக் குறைக்க 2024 ஜனவரி 18 அன்று நியாயமான சில்லறைவிற்பனை விலை வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இதில் இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு முறையே 8%, 10% மற்றும்12% நியாயமான லாபம் அனுமதிக்கப்படுகிறது. என்.பி.எஸ் திட்டத்தின்கீழ் அட்டவணைப்படுத்தப்பட்ட உரங்களின் வகைகள் 2018-இல் 22 ஆக இருந்தது,தற்போது 28 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

lயூரியா விலை மற்றும் உற்பத்தி: யூரியாவிற்குச் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சில்லறை விற்பனை விலையாக 45 கிலோ மூட்டைக்கு ₹242 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (வரிகள் மற்றும் வேம்பு பூச்சு கட்டணம் தனி).உற்பத்தியாளரின் அடக்க விலைக்கும் விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசத்தை அரசு மானியமாகஅளிக்கிறது.

lபுதிய யூரியா ஆலைகள்: புதிய முதலீட்டுக் கொள்கை (NIP-2012) மூலம் ராமகுண்டம் (தெலுங்கானா), கோரக்பூர் (உத்தரப் பிரதேசம்), சிந்த்ரி (ஜார்க்கண்ட்),பரௌனி (பீகார்)ஆகிய4 பொதுத்துறை கூட்டு நிறுவனங்கள் மற்றும் பனாகர் (மேற்குவங்கம்),கதீபன்-III (ராஜஸ்தான்)ஆகிய 2 தனியார் நிறுவனங்கள் எனமொத்தம் 6 புதிய யூரியா ஆலைகள்தலா 12.7லட்சம் மெட்ரிக் டன் திறனில் அமைக்கப்பட்டுள்ளன.

lஉற்பத்தித் திறன் உயர்வு: இதன்மூலம்உள்நாட்டு யூரியா உற்பத்தி திறன் 2014-15 இல் 207.54 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது, 2023-24 இல் 283.74 லட்சம்மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. மேலும், தால்ச்சர் (ஒடிசா) நிலக்கரி வாயுவாக்கல் ஆலை, அசாம்பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உர நிறு

வன வளாகத்தில் (BVFCL) புதிய அமோனியா-யூரியா ஆலை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

lபுதிய முதலீட்டுக் கொள்கை 2026: யூரியா உற்பத்தியில் தன்னாட்சிஅடையும் நோக்கில், புதிய எரிவாயு சார்ந்த யூரியா உற்பத்தி ஆலைகளை ஊக்குவிக்க ‘ஆத்மநிர்பார் பாரதத்திற்கான தேசிய யூரியாமுதலீட்டுக்கொள்கை-2026’ கூட்டமைச்சரவையால் ஜூலை 15, 2026 அன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆர். சச்சிதானந்தம் எம்.பி. விமர்சனம்

ஒன்றிய அரசின் இந்தப் பதிலைசுட்டிக்காட்டி ஆர். சச்சிதானந்தம் எம்.பி. தனது விமர்சனத்தைப் பதிவுசெய்துள்ளார்.

ஒன்றிய அரசு ஆயிரம் கோடி கணக்கில் மானியம் ஒதுக்குவதாகவும்,உற்பத்தியைஅதிகரித்துள்ளதாகவும்புள்ளிவிவரங்களை அடுக்கினாலும், களத்தில் விவசாயிகளுக்கு உரம் சரியான விலையிலும் தங்குதடையின்றியும்கிடைப்பதில்லை என்ற கசப்பான உண்மையை அரசு மறைக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ்உர உற்பத்தியாளர்களுக்கும் இறக்குமதியாளர்களுக்கும் 8% முதல் 12% வரை ‘லாபம்’ ஈட்ட அதிகாரப்பூர்வமாக அனுமதியளித்துள்ள ஒன்றிய அரசு, கட்டுப்பாடற்ற விலையேற்றத்தால் தவிக்கும் விவசாயிகளின் சுமையைக் குறைக்கத் தவறிவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தனியார் நிறுவனங்கள் லாபமடைவதை அரசு உறுதி செய்யும்போது,விவசாயிகள் மீது உள்ளீட்டுச் செலவு பாய்கிறது.

மேலும், 2012-ஆம் ஆண்டின் கொள்கையை வைத்துக்கொண்டு 6 ஆலைகளைக் கணக்குக் காட்டும் அரசு,கடந்த பத்தாண்டுகளில் பொதுத்துறைநிறுவனங்களின் பங்கை முழுமையாகப் பயன்படுத்தாமல் இறக்குமதிக்குபெருந்தொகையைச்செலவிட்டுள்ளது. தற்போதைய 2026 முதலீட்டுக் கொள்கையாவது வெறும்காகித அளவிலான திட்டமாக இல்லாமல், பொதுத்துறை உர நிறுவனங்களை முழுமையாகச் சீரமைத்து,தனியார்நிறுவனங்களின் லாபவெறியைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு மலிவான விலையில்உரங்கள் தடையின்றிகிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.