தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உர நெருக்கடியும் உரமற்ற சவடால்களும்! - கே.பி.பெருமாள்

8 Jun 2026, 9:27 pm
உர நெருக்கடியும் உரமற்ற சவடால்களும்! - கே.பி.பெருமாள்

உர நெருக்கடியும் உரமற்ற சவடால்களும்! - கே.பி.பெருமாள்

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல், இறக்குமதி உரங்கள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களை இந்தியா சார்ந்திருக்கும் நிலையை மேலும் மோசமாக்கி யுள்ளது. இந்தியாவின் விவசாயத் தேவைக் கான யூரியா மற்றும் டை அம்மோனியம் பாஸ்பேட் (DAP) இறக்குமதியில் சுமார் 30 சத வீதம் வளைகுடா நாடுகளையே சார்ந்துள்ளது. இதனால் தற்போது கடுமையான விநியோகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. யூரியா உற்பத்திக்கான முக்கிய எரிபொருளான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் ஏறக்குறைய 50 சதவீதத்தை வளைகுடா நாடுகளே வழங்குகின்றன. அமெரிக்கா - ஈரான் மோதலால் உலக அளவில் இயற்கை எரிவாயு விலை 20% முதல் 30% வரை உயர்ந்துள்ளதுடன், யூரியா உற்பத்திச் செலவும் 5% முதல் 20% வரை அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக இந்தியாவில், பொட்டாஷ் உரம் (50 கிலோ) ரூ.1850-லிருந்து ரூ.2250 ஆகவும், பாக்டம்பாஸ் ரூ.1750-லிருந்து ரூ.2150 ஆகவும், அம்மோனியம் சல்பேட் ரூ.1200-லிருந்து ரூ.1400 ஆகவும் உயர்ந்துள்ளது. காம்ப்ளக்ஸ் உரம் ரூ.1550-லிருந்து ரூ.2200 ஆகக் கடுமையாக உயர்ந்துள்ளது விவசாயிகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உர உற்பத்தியும் தற்போதைய தேவையும்

உலகில் உரம் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. நாட்டின் மொத்த உரப் பயன்பாடு 1960-61இல் 0.295 மில்லியன் டன்களாக இருந்தது, 2024-25இல் 32.93 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. அதாவது, ஒரு ஹெக்டே ருக்கான உரப் பயன்பாடு 1.92 கிலோவி லிருந்து 150.11 கிலோவாக, சுமார் 78 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2023-24 ஆம் ஆண்டில் இந்தியா சாதனை அளவாக 21.95 மில்லியன் டன்கள் உரத்தை உற்பத்தி செய்த போதிலும், 2026 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தேவை 39 மில்லியன் டன்களாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை விடத் தேவையின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

விவசாயத் துறையில் ஏற்படும் பேரழிவு

இந்த உரப் பற்றாக்குறை தற்காலிகமான ஒன்று அல்ல; இதன் விளைவுகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கக் கூடியவை. மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோருக்கு உணவளிக்கும் விவசாயத் துறையில் ஏற்படும் உரப் பற்றாக்குறை, கடுமையான உணவுப் பொருள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். இது நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறும்.

கிராமப்புற விவசாயிகள் உரங்களைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த விலை உயர்வு அவர்களின் உற்பத்திச் செலவை அதிகரித்து, சாகுபடிப் பரப்பைக் குறைக்கக் கட்டாயப்படுத்தும். சொந்த நுகர்வுக்கும் ஏற்றுமதிக்கும் உள்நாட்டு விவ சாயத்தையே நம்பியிருக்கும் இந்தியாவில், இந்த உரத்தட்டுப்பாடு பேரழிவை ஏற்படுத்தக்கூடும்.

வெற்று விளம்பரமாகும் ஒன்றிய அரசின் திட்டங்கள்

பிரதமர் நரேந்திர மோடி 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டு சுதந்திர தின உரைகளில், ரசாயன உரப் பயன்பாட்டை 25% முதல் 50% வரை குறைக்க வேண்டும் என்று விவசாயிகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால், நடைமுறையில் ரசாயன உரப் பயன்பாடு 61.4 மில்லியன் மெட்ரிக் டன்களி லிருந்து 70.8 மில்லியன் மெட்ரிக் டன்களாக, அதாவது 15 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல், ‘ஒரே நாடு, ஒரே உரம்’ (One Nation One Fertilizer) திட்டத்தின் கீழ் ‘பாரத்’ என்ற ஒரே பிராண்டில் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்று ஒன்றிய அரசு விளம்பரப்படுத்தியது. ஆனால், உற்பத்தி செய்யத் தொழிற்சாலைகளோ அல்லது அதற்கான மூலப்பொருட்களோ இல்லாதபோது, வெறும் பெயரளவில் மட்டுமே திட்டங்கள் இருக்கும் என்பதற்குத் தற்போதைய உரத்தட்டுப்பாடே சாட்சி. இன்று விவசாயிகள் உரங்களுக்காகக் கடை வாசல் களில் இரவு பகலாகக் காத்துக் கிடக்கின்றனர்.

அவசரக் கோரிக்கைகள்

இந்த நிலையில், உர நெருக்கடியைத் தீர்க்க ஒன்றிய அரசு உடனடியாக உர இறக்குமதிகளைப் பன்முகப்படுத்த வேண்டும்; உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். செயற்கை உரத்தட்டுப்பாட்டை உருவாக்கி உரங்களைப் பதுக்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரங்களுக்கான மானியம் நேரடியாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அரசே உரங்களை நேரடியாக விவசாயி களுக்கு விற்பனை செய்ய வேண்டும். நிர்ண யிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியார் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தெந்தப் பகுதிக்கு என்னென்ன உரங்கள் தேவையோ, அவற்றை தங்கு தடையின்றி விநி யோகம் செய்ய வேண்டும். அப்போதுதான் உணவுப் பொருள் உற்பத்தியைப் பெருக்கி, நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.