தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மத்திய ஆசியாவில் மங்கும் இந்தியாவின் செல்வாக்கு

30 Aug 2026, 9:24 pm
மத்திய ஆசியாவில் மங்கும் இந்தியாவின் செல்வாக்கு

மத்திய ஆசியாவில் மங்கும் இந்தியாவின் செல்வாக்கு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர் மற்றும் குடியரசு நாடுகளுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் மற்றும் கிர்கிஸ் குடியரசு ஜனாதிபதி சதிர் ஜபரோவ் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தப் பயணம், மத்திய ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் வீழ்ச்சியடைந்துவரும்செல்வாக்கை மீட்டெடுப்பதற்கான ஒரு பின்தங்கிய முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டில் அனைத்து மத்திய ஆசியநாடுகளுக்கும் பயணம் மேற்கொண்ட உற்சாகம் தற்போது இல்லாமல் போனதற்கு, புவிசார் அரசியல் மாற்றங்களும் ஒன்றிய பாஜகஅரசின் திறனற்ற வெளியுறவுக் கொள்கைகளுமே முக்கியக் காரணமாகும்.

​மத்திய ஆசியாவில் சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ (BRI) திட்டம் மிகப்பெரிய அளவில்காலூன்றி செல்வாக்கு செலுத்தி வருகிறது. 2025-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி சீனா-மத்திய ஆசியாவர்த்தகம் 106 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ள நிலையில், இந்தியாவுடனான வர்த்தகம் வெறும் 2பில்லியன்டாலர்களைத் தாண்டி மிக மந்தமாகவே தொடர்கிறது. போக்குவரத்துச் சவால்கள் மற்றும் நேரடித்தொடர்பின்மை காரணமாக, பிராந்தியத்தின் பொருளாதார வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் இந்தியாபின்தங்கியுள்ளது. அறிவிக்கப்பட்ட இந்தியா-மத்திய ஆசியா உச்சி மாநாடு 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதே இந்தியாவின் தேக்கத்திற்குச் சான்றாகும்.

​ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் அவையின் 2028-2029 காலத்திற்கான சுழற்சி முறை இடத்திற்கு மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானும் இந்தியாவும் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. சமீபகால ஐ.நா பொதுச்சபை வாக்கெடுப்புகளில் ஜெர்மனி மற்றும்பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் தோல்வியடைந்ததைப்போல, ராஜ தந்திரப் பலவீனங்களால் இந்தியாவும் பின்னடைவைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தஜிகிஸ்தானின் போட்டியை விலக்கிக்கொள்ளச் செய்வதற்காகஅந்நாட்டு ஜனாதிபதி இமோமலி ரஹ்மானுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

​மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தக மற்றும் ராணுவப் பாதுகாப்புத் தொடர்புகளை வலுப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் மோடிஅரசு, பிராந்தியத்தின் மாறும் அரசியல் சூழல்களுக்கு ஏற்ப துரிதமாகச் செயல்படத் தவறிவிட்டது. கார்ப்பரேட் சார்புப் பொருளாதாரக் கொள்கைகளிலும் உள்நாட்டு அரசியல் பிரச்சாரங்களிலும் மட்டுமேகவனம் செலுத்தும் அரசு, அண்டை நாடுகளுடனான வெளியுறவு மற்றும் வர்த்தக உறவுகளில் தொடர்ச்சியானதோல்விகளைச் சந்தித்து வருகிறது. நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் பலவீனங்களைச் சரிசெய்து,சுயசார்பான மற்றும் சமத்துவமான பன்னாட்டு உறவுகளை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.