தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சீனப் பொருட்களின் இறக்குமதியால் ‘இந்தியாவின் ஏற்றுமதி’ அதிகரிப்பு அமைச்சகத்தின் தரவுகளில் அம்பலம்

19 Aug 2026, 8:27 pm
சீனப் பொருட்களின் இறக்குமதியால் ‘இந்தியாவின் ஏற்றுமதி’ அதிகரிப்பு அமைச்சகத்தின் தரவுகளில் அம்பலம்

சீனப் பொருட்களின் இறக்குமதியால் ‘இந்தியாவின் ஏற்றுமதி’ அதிகரிப்பு

அமைச்சகத்தின் தரவுகளில் அம்பலம்

புதுதில்லிஸ்மார்ட்போன் முதல் ஜெனரிக்மருந்துகள் வரை இந்தியாவின் பல பொருட்கள் அதிகம் ஏற்றுமதியாகி வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் தான் ஏற்றுமதி அதிகரிப்புக்கு அடிப்படையாக உள்ளது எனவர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளில் தெரிய வந்துள்ளது.

சீனாவின் பொருட்களை அசெம்பல் செய்துஉலகம் முழுவதும் இந்தியா அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது. உதாரணத்திற்கு, ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பல பாகங்கள் சீனாவில் இருந்து தான் அதிகம் இறக்குமதிசெய்யப்படுகின்றன. கடந்த நிதிஆண்டை விட நடப்பு நிதியாண்டின் முதல் மூன்றுமாதங்களில் சீனாவில் இருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமாக போன் உற்பத்திக்கான மின்னணு பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சகம் வெளியிட்டுள்ள மாதாந்திரத் தரவுகளின் பகுப்பாய்வு படி ஸ்மார்ட்போன் தயாரிப்பில்பயன்படுத்தப்படும் சர்கியூர் போர்டுகள் உள்ளிட்ட மின்சார பாகங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அளவானது 2026 ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 78 சதவீதம்அதிகரித்துள்ளது.

அதேபோல், ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகள் உட்பட நவீன மின்னணுப் பொருட்களை இயக்குவதில் இன்றியமையாத பொருளான மைக்ரோ சிப்கள் இறக்குமதி கடந்த ஆண்டை விட 63.59 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனா மட்டுமின்றி அமெரிக்கா, தென் கொரியா மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் இருக்குமதி செய்யப்படுகிறது என்றாலும் சீனாவே முதன்மை இடத்தை இன்னும் தக்க வைத்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியா தோராயமாக 94,322 கோடி ரூபாய் மதிப்பிலானஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 23 சதவீதம் அதிகமாகும்.

லித்தியம்-அயன் பேட்டரிகளின் இறக்குமதியும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சீனாவிடம் இருந்து 13 ஆயிரத்து 715 கோடி மதிப்பிலான பேட்டரிகளை இறக்குமதி செய்துள்ளது. இது கடந்தஆண்டுடன் ஒப்பிடுகையில் 85.11 சதவீதம் அதிகமாகும்.

இந்தியாவின் மற்றொரு முக்கிய ஏற்றுமதித் துறையான ஜெனரிக் மருந்துத் துறையும்(Generic pharmaceuticals) அதன் மூலப்பொருட்களுக்குச் சீனாவையே பெரிதும் நம்பியுள்ளது. ஜூன் மாதம்வெளியிடப்பட்ட சமீபத்திய நிதி ஆயோக் காலாண்டு வர்த்தக அறிக்கை, மருந்துப் பொருட்களுக்கான முக்கியப் பொருட்களை தரும்நாடாக சீனா இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.2025 இல் மருந்து உற்பத்திக்கு தேவையான நைட்ரஜன் ஹெட்டோரோசைக்ளிக் சேர்மங்கள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், அமினோ சேர்மங்கள், ஆக்சிஜனேற்றப்பட்ட கார்பாக்ஸிலிக் அமிலங்கள் மற்றும் ஆக்சிஜனுடன் கூடிய ஹெட்டோரோசைக்ளிக்சேர்மங்கள் நான்கில் மூன்று பங்கிற்குச் சீனாவிடம் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா இறக்குமதி செய்யும் அனைத்து நுண்ணுயிர் எதிர்ப்பிகளில் 86.1 சதவீதம் சீனாவில் இருந்து வருகிறதுஎன்று நிதி ஆயோக்அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 76.4 சதவீத நைட்ரஜன் ஹெட்டோரோசைக்ளிக் சேர்மங்கள், 73.1 சதவீத அமினோ சேர்மங்கள், 65.9 சதவீத ஆக்சிஜனேற்றப்பட்ட கார்பாக்ஸிலிக்அமிலங்கள் மற்றும் ஆக்சிஜனுடன் கூடிய 72.6 சதவீத ஹெட்டோரோசைக்ளிக் சேர்மங்கள் அனைத்தும் சீனாவில் இருந்து தான் இறக்குமதிசெய்யப்படுகின்றன.

சீனாவில் இருந்து அந்நிய நேரடி முதலீட்டைப் (FDI) பெறுவதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகின்றது. இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்வி.அனந்த நாகேஸ்வரன், 2023-2024 பொருளாதார ஆய்வறிக்கையில் சீனாவில் இருந்து சாத்தியமான முதலீடுகளை பெறவேண்டும் என்று அழுத்தம்கொடுத்திருந்தார். அதன் பின்னணியில் தான் சீனா பொருட்களை இந்தியா அதிகம் இறக்குமதி செய்யத்துவங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.