ஏவுகணை தொழில்நுட்பத்தில் அசத்தும் இந்தியா
3 Feb 2026, 4:00 pm
<p><strong>ஏவுகணை தொழில்நுட்பத்தில் அசத்தும் இந்தியா</strong></p>
<p>கோவை, பிப்.3- ஏவுகணை தொழில்நுட்பத்தில் அசத் தும் இந்தியா, ஹைப்பர்சோனிக் தொழில் நுட்பத்தை 1,000 வினாடிகள் வரை சோதித்து உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ் வதாக மூத்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்தார். கோவையில் உள்ள தனியார் மருத்து வமனை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி டாக்டர் ஏ. சிவதாணு பிள்ளை கலந்து கொண்டார். இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, கேன்சர் பற்றி பயப்பட தேவையிலை. நம்முடைய வாழ்க்கை தரம் காரணமாக, எப்படி வேண்டுமானால் புற்று நோய் வரலாம். எப்படி வந்தாலும் நம் முடைய தொழில் நுட்பம் முன்கூட்டியே செய்யும் பரிசோதனை மூலம் கண்டு பிடிக்க முடியும். புற்றுநோய்க்கு ஆரம்ப காலத்தில் சிகிச்சை கொடுத்து தீர்வு காண முடியும். மேலும் சிகிச்சைக்கு இப்போது ஏஐ தொழில் நுட்பம் வந்துள்ளது. சூப்பர் சோனிக், ஹைப்பர் சோனிக் ராக்கெட் உரு வாக்கத்தில் முன்னிலையில் நாம் இருக் கிறோம். பரிசோதனை முன்னிலையில் உள் ளோம். ஒலியின் வேகத்தைப் போல 3 மடங்கு வேகத்தில் செல்லும் பிரம்மோஸ் ஏவு கணைகளை, 7 மடங்கு வேகமாக, அதாவது ஹைப்பர்சோனிக் நிலைக்கு கொண்டு செல்வதே தற்போதைய முதன்மை இலக்கு. இத்தகைய வேகம் அதிகரிக்கும் போது ஏவுகணையின் ஆற்றல் பன் மடங்கு அதிகரிப்பதோடு, எதிரி நாட்டு ரேடார்களால் இதைக் கண்டறிய முடியாது, இது எந்தவொரு தற்காப்பு அமைப்பையும் ஊடுருவி அழிக்கும் வல்லமை கொண்டது. இந்தியா ஏற்கனவே ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தை 1,000 வினாடிகள் வரை சோதித்து உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது, என்றார்.</p>
