இந்திய தேர்தல் ஜனநாயகம் எதிர்கொள்ளும் பேராபத்தும் தேர்தல் சீர்திருத்தங்களுக்கான அவசியமும்
29 Jun 2026, 10:10 pm

இந்திய தேர்தல் ஜனநாயகம் எதிர்கொள்ளும் பேராபத்தும் தேர்தல் சீர்திருத்தங்களுக்கான அவசியமும்

அரசியல் நிர்ணய சபையில், சுதந்திர இந்தியா எவ்வாறான அமைப்பை நிறுவ வேண்டும் என்று ஆழமான விவாதம் நடந்து, நாடாளுமன்ற ஜனநாயக முறையைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. தேர்தல் ஜனநாயகம் அதன் மையப்புள்ளி. சுதந்திரமாகவும், அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான ஆடுகளத்துடனும் தேர்த லை நடத்தும் பெரும் பொறுப்பு தேர்தல் ஆணை யத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பொறுப்பை நிறை வேற்ற தேவையான அதிகாரமும் அளிக்கப்பட்டது. இப்போது தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையே மிக மோசமாகக் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது என்பது ஒரு மாறியுள்ள சூழல். தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்படும் முறையே ஆளும் கட்சிக்குச் சாதகமாக உள்ளது. அனுபவங்களின் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தங்களுக்கான முயற்சிகள் நடந்தன. இந்திரஜித் குப்தா கமிட்டி உள்ளிட்ட கமிட்டிகள் பல பரிந்துரைகளை அளித்தன. சில மாற்றங்கள் வந்தன. ஆயினும் முற்றிலும் மாறவில்லை.

பணபலம்: சமமற்ற பந்தயமும் கார்ப்பரேட் ஆதிக்கமும்

இப்போதும் பிரம்மாண்டமான பணச் செலவு அனைத்துக் கட்சிகளையும் சம நிலையில் நிறுத்து வதில்லை. பணம் படைத்தவர்கள் பந்தயத்தில், துவங்கும் போதே முன்னிலையில் நிற்கின்றனர். தேர்தல் பணியின் ஒவ்வொரு அம்சத்திலும் பண பலத்தின் பங்கு உள்ளது. இது தவிர, கோடீஸ் வரர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்க ளாகத் தேர்வு செய்யப்படுகின்றனர். ஏடிஆர் (ADR) அமைப்பு, 2024 நாடாளுமன்ற தேர்தலில் வென்றவர்களில் 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் எனச் சுட்டிக்காட்டுகிறது. 2019-இல் இது 88 சதவீத மாக இருந்தது. முதல் 3 இடங்களில் இருப்பவர்கள் 1200 முதல் 5600 கோடி ரூபாய் சொத்துக்களை அறிவித்துள்ளனர்.

யார் வென்றாலும் அவர்கள் வர்க்கப் பார்வை தானே முக்கியம் எனக் கேட்கலாம். ஆனால் ஜன நாயகத்தைத் தீர்மானிப்பது, சட்டங்களை இயற்றுவது பணம் படைத்தவர்கள் மட்டுமே என்ற நிலை, ஏற்கெனவே பெரும் பொருளாதார இடைவெளி நிலவும் நாட்டில் பேராபத்தை ஏற்படுத்தும்.

கார்ப்பரேட்டுகள் மிகப் பெரும் நிதியை நன்கொ டையாக அளிப்பதும், ஆட்சிக்கு வரும் கட்சிகள் அதற்குக் கைமாறாக விதிகளை வளைத்து அந்தக் கார்ப்பரேட்டுகளுக்குப் பலன் கிடைக்கும் சூழலை ஏற்படுத்துவதும் (quid pro quo) குறிப்பாகத் தேர்தல் பத்திரத்தின் போது தெளிவாக முன்னுக்கு வந்தது. மிக அதிகமான கார்ப்பரேட் நன்கொடை பெறுவது பாஜக என்பது தொடர்ச்சியாக அம்பலப்பட்டு வந்த தையும் பார்த்தோம். தேர்தல் பத்திர நன்கொடை பெறாதது மட்டுமல்ல, அரசியல் கட்சிகளுக்குக் கார்ப்பரேட் நன்கொடை தடை செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. எனவே, அரசே தேர்தல் செலவுகளை ஏற்பது (state funding) தேவைப்படுகிறது.

விகிதாச்சார பிரதிநிதித்துவம்: ஒவ்வொரு வாக்குக்குமான மதிப்பு

பெரும்பான்மை வாக்குகள் பெறுபவர் வெற்றி பெற்றவராகக் கருதப்படுகிறார் (first past the post - FPTP). இது இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் அமலில் இருக்கிறது. அப்படியானால் தோற்றவர் பெற்ற வாக்குகளுக்கு மதிப்பு இல்லையா என்பது முக்கியமான கேள்வி. ஒரு வாக்கு அல்லது சில நூறு வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெறுவது தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நடக்கிறது. ஒவ்வொரு வாக்கும் மதிப்பு மிக்கது, கணக்கில் எடுக்கப்பட வேண்டியது.

மேலும் தற்போதைய முறையில் ஒரு கட்சி பெறும் வாக்கு சதவீதமும், வெல்லும் தொகுதி எண்ணிக்கை யும் பொருந்தவில்லை. 35 விழுக்காடு வாக்குகள் பெற்று 70 விழுக்காடு சீட்டுகளைக் கைப்பற்று கிறார்கள்.

எனவே, விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் (pro portional representation with partial list) தேவை அதிகம் முன்வருகிறது. தினேஷ் கோஸ்வாமி கமிட்டி, தார்குண்டே கமிட்டி, சட்டக் கமிஷன் 170 மற்றும் 255-ஆவது அறிக்கைகள் இப்பரிந்துரையை முன் வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதிலும் பல வகைகள் உள்ளன. கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும், அந்தச் சதவீத அடிப்படையில் கட்சிப் பட்டியலில் இருந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப் படுவர். இது ஒரு முறை.

கலப்பு உறுப்பினர் விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கை (MMP - mixed member pro portional system) வருகிறது. ஒவ்வொரு வாக்கா ளருக்கும் இரண்டு வாக்குகள்; ஒன்று உள்ளூர் தொகுதி வேட்பாளருக்கு, இதில் பெரும்பான்மை வாக்குகள் பெற்றவர் தேர்வு செய்யப்படுவார். மற்றொன்று அரசியல் கட்சிக்கு. ஒரு கட்சிக்குக் கிடைக்கும் வாக்கு சதவீதம் 40% என வைத்துக் கொள்வோம். ஆனால் அவர்களுக்குக் கிடைக்கும் சீட்டுகள் 30 சதவீதம் என்றால், அந்த இடைவெளி யை இட்டு நிரப்ப, 10 சதவீதம் அதிக எண்ணிக்கை யில் அவர்கள் உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளலாம். அது ஏற்கெனவே அந்தக் கட்சி வெளி யிட்ட பட்டியலில் இருந்து எடுக்கப்பட வேண்டும். இது போல் பல முறைகள் உள்ளன.

சில நாடுகளில் அரசியல் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதம், குறைந்தபட்சம் 3 அல்லது 5 சதவீதம் இருந்தாக வேண்டும் என விதிமுறை உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையும் பறிபோகும் வாக்குரிமையும்

தற்போது பெரும் பிரச்சனை, ஒன்றிய பாஜக அரசின் விருப்பத்திற்கேற்ப தேர்தல் ஆணையம் வளைந்து கொடுத்து, கொண்டு வரப்பட்ட எஸ்ஐஆர்(SIR). ஒரு கட்சி பலன் பெறுவதற்காக, தேர்தல் ஆணையம் தன் சுயேச்சை நிலையை இழக்கிறது. அனைத்துக் கட்சிகளுக்கும் சம ஆடு களம் என்பது இங்கு தவிடு பொடியாகிவிடுகிறது. எஸ்ஐஆர்., வாக்குரிமையில் கை வைக்கிறது. வாக்குரிமை பறிக்கப்பட்டால் தேர்தல் ஜனநாயகம் பொருள் இழந்து போகிறது. லட்சக்கணக்கான வாக்கா ளர்களின் உரிமை பறிபோயுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தலில் எவ்வித ஆதார மும் இன்றி, பாஜக வேட்பாளர் கொடுத்த புகாரை மட்டும் வைத்துக் கொண்டு, காங்கிரஸ் வேட்பா ளரின் வேட்புமனுவைத் தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தது, அதிகார வர்க்கத்தினர் எத்தகைய அரசிய லுடன் இயங்குகிறார்கள் என்பதை வெளிக்காட்டுகி றது. மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர்-ஐ முன்னின்று அமல்படுத்திய அதிகாரி, தற்போது பாஜக முதல மைச்சரின் முதன்மை ஆலோசகராகப் பணியமர்த் தப்பட்டுள்ளார்.

வயது வந்த அனைத்துக் குடிமக்களுக்கும் வாக்குரிமை என்பது எந்த அரசின் கருணையினாலும் வரவில்லை. இந்திய மக்கள் பெரும் திரளாய்ப் பங்கேற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம், பல பகுதி உழைக்கும் மக்களின் போராட்டம், அரசி யல் சமத்துவத்திற்காக ஓங்கி ஒலித்த குரல்கள் போன்றவற்றால் கிடைத்தது. ஒரு வாக்கு ஒரு மதிப்பு என்பது நிறுவப்பட்டது. அதன் மீது தற்போது தாக்குதல் நடந்துள்ளது. திட்டமிட்டு வாக்காளர் பட்டிய லில் இருந்து பெயர்களை நீக்குவது, அடுத்து, இதைக் காரணம் காட்டி நலத்திட்டங்கள் மீது கை வைப்பது, அடுத்து, இவர்கள் குடிமக்களே அல்ல என்ற நிலை மையை ஏற்படுத்துவது என இது மிக ஆபத்தானது. டெலிகிராப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ராஜகோபால் பெயர், மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அதனால் பாஸ்போர்ட் கிடைப்பது இழுபறியாக உள்ளது.

ஆனால் உச்சநீதிமன்றம் எஸ்ஐஆர்-க்கு ஒப்பு தல் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பு மீறலையும் நியாயப்படுத்தியுள்ளது. குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணம் வேண்டும் என்று கேட்டால், “பாஜக உறுப்பினர் அட்டை வேண்டும்” என வலைத்தளத்தில் காமெடி செய்தாலும், நிலைமை அபாயகரமாக உள்ளது.

எனவே, தேர்தல் சீர்திருத்தத்திற்கான இயக் கத்தில் தேர்தல் ஆணைய செயல்பாடு, எஸ்ஐஆர் போன்றவை இணைக்கப்பட வேண்டும். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் பலவீனமும் ஆளுநர்களின் துஷ்பிரயோகமும் அடுத்து, கட்சித் தாவல் தடைச் சட்டம் வந்த பின்னும், அதனை ஓரம் கட்டிவிட்டுச் சூழலைத் தவறா கப் பயன்படுத்த முடிகிறது. பேரவைத் தலைவர் பங்கு இதில் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் உடைக்கப்பட்ட போது சட்டப் பேரவைத் தலைவரும், எம்பிக்கள் விலைக்கு வாங்கப்பட்ட போது மக்களவைத் தலைவரும் அதனை ஊக்கப்படுத்துவது போல் நடந்து கொண்டனர். ஒரு கட்சியில் செயல்பட்டு, வேட்பா ளராகி, அந்தக் கட்சியின் பெயர், சின்னத்தைப் பயன்படுத்தி, கொள்கைகளை, தலைவரைச் சொல்லி மக்களிடம் ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற பிறகு இன்னொரு கட்சிக்குத் தாவுவது ஜனநாய கத்திற்கு முரணானது. இந்த அம்சமும் தேர்தல் சீர்திருத்த இயக்கத்தில் இடம் பெற வேண்டும். மேலும் ஆட்சி அமைக்க அழைக்கும் அதிகா ரத்தை ஆளுநர் துஷ்பிரயோகம் செய்ய முடிகிறது. ஒன்றிய அரசாங்கத்தின், ஆளும் கட்சியின் முகவராக அட்சரம் பிசகாமல் ஆளுநரால் செயல்பட முடிகிறது. அனைத்தையும் தனது விருப்ப அதிகாரம் என்கிற ஒரே வார்த்தையில் சமாளிக்க முடிகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM): சந்தேகங்களும் விவிபேட் எதார்த்தமும்

பகுதி பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டு 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஈவிஎம் (EVM) முழுமை யான பயன்பாட்டுக்கு வந்தது. இதன் பயன்பாடு குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன; சந்தேகங்கள் எழுகின்றன. வாக்குப்பதிவு துவங்கும் முன் நடக்கும் பரிசோதனையில் தவறு கள் வெளிவருகின்றன. குறுகிய காலத்தில் கடைசி நேரத்தில் ஆயிரக்கணக்கான வாக்குகள் பதிவாவதாகவும், அந்த வாக்குச்சாவடியில் உள்ளதை விட அதிகம் பதிவாவதாகவும் செய்தி கள் வருகின்றன. இயந்திரத்தில் பதிவானதை விட அதிகமாக ‘சி’ படிவத்தில் (Form C) சில கட்சிக ளுக்குச் சாதகமாக, வாக்குச்சாவடி அலுவலர்கள் எண்ணிக்கை போடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பெருமளவில் மோசடி செய்ய முடியும் என்றால் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத சூழல் ஏற்பட்டிருக்குமா என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். விவிபேட் (VVPAT) முறை நடைமுறைக்கு வரும் வரை இதில் பெரி தாக எதுவும் சொல்ல இயலவில்லை.

2017-இல் முழுமையாக விவிபேட் வந்த பின், தில்லுமுல்லு நடக்க எங்கு வாய்ப்பு வருகிறது என்று ஓரளவு கணிக்க முடிந்தது. தற்போது வாக்குப்பதிவு யூனிட் முதலாவதாகவும், விவிபேட் இரண்டாவதாகவும், வாக்கு எண்ணிக்கை பதியும் யூனிட் மூன்றாவதாகவும் எனச் செயல்முறை (process) ஆகிறது. விவிபேட் சீட்டைப் பார்த்துத் திருப்தி அடைந்து வாக்காளர்கள் வெளியேறி விடுவார்கள். ஆனால் விவிபேட்டிற்குப் பிறகு, நமது தேர்வு வாக்கு எண்ணிக்கை யூனிட்டுக்கு போகும் செயல்முறையில் மோசடி நடக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஈவிஎம் மூலம் நாம் வாக்களிக்கும் போது நடக்கும் நிகழ்முறையில் வரிசைக்கிரமத்தை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எழுப்பியது. வாக்குப்பதிவு முதலில் (ballot unit), அந்தத் தகவல் வாக்கு எண்ணிக்கை யூனிட்டுக்கு (control unit) இரண்டாவதாகப் போய்விட வேண்டும்; இறுதியாக விவிபேட் செயல்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தும் தேர்தல் ஆணை யம் ஏற்கவில்லை.

வாக்கு எண்ணிக்கையின் போது விவிபேட் ரசீது களை 100 சதவீதம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்கிற கோரிக்கையும் பரவலாக எழுந்து வரு கிறது. ஒரு வாக்குச்சாவடியில் ஒரு ஈவிஎம்-இன் விவிபேட் சீட்டுகள் ஒப்பீடு செய்யப்பட்டு வந்தன. உச்சநீதிமன்றம் அதனை 5 ஆக உயர்த்தியுள்ளது.

வாக்குச்சீட்டு (ballot paper) முறைக்குத் திரும்ப லாம் என்றும் குரல்கள் ஒலிக்கின்றன. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மோசடி நடந்தால், மோசடியைச் சரி செய்வதற்கான வழிமுறையைப் பார்க்க வேண்டுமே தவிர, அந்த வளர்ச்சியைப் புறக்க ணித்து பழைய முறைக்குச் செல்வதா என்பதும் ஒரு கேள்விதான். பல வளர்ந்த நாடுகளிலேயே வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படுகிறதே என்று ஒரு வாதம் வருகிறது. ஆனால் அங்கெல்லாம் இந்தியா போல் 97 கோடி வாக்காளர்கள் இல்லை. இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை, வாக்குச்சீட்டு முறை அமலில் உள்ள அமெரிக்காவைப் போல் 4.2 மடங்கு, ஜெர்மனி போல் 15.6 மடங்கு, பிரிட்டனைப் போல் 20 மடங்கு, நெதர்லாந்து போல் 72 மடங்கு அதிகம்.

வாக்குச்சாவடி கைப்பற்றுதல், கள்ள ஓட்டு போடுதல் போன்றவை அங்கு இல்லை. கையால் எண்ணுவது ஏற்படுத்தும் தாமதம் அங்கு பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை.

இருப்பினும் தொடர்ந்து மோசடி புகார்கள் முன்னுக்கு வரும் சூழலில், ஈவிஎம் பிரச்சனையை இன்னும் கூடுதலாகவும் ஆழமாகவும் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

இதர சீர்திருத்தங்களும் இறுதி இலக்கும்

அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்களுக்கு உச்சவரம்பு வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் ஆளும் கட்சிகளுக்கு, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு அமலாவதில்லை.

இவற்றை உள்ளடக்கித் தேர்தல் சீர் திருத்தத்திற்கான பிரச்சாரம் வலுவாக முன்னெ டுக்கப்பட வேண்டும். அதாவது ஜனநாயகத்திற்கான ஒவ்வொரு வெளியையும் பயன்படுத்த வேண்டும் என்பதே நோக்கம்.

அதே சமயம் இதுவே தீர்வு அல்ல. புரட்சிகர இலக்கே இறுதியானது. தோழர் லெனின், “இறுதி இலக்கின் மீதான கவனத்தை இழந்துவிடாமல், சீர்திருத்தங்களுக்காகப் போராட வேண்டும்” என்கி றார். மார்க்ஸ், “போராட்ட அழுத்தத்தின் விளை பொருளே சீர்திருத்தம். புரட்சிகர மாற்றத்திற்கு அவை பதிலி அல்ல” என்கிறார். நாடாளுமன்ற வாதம் அதிகரித்து வரும் சூழலில் இதைக் கவனப்படுத்த வேண்டியிருக்கிறது.

எனவே, மேற்கூறிய பிரச்சனைகளைத் தனித்தனி யாக அணுகுவது உதவாது. நவ பாசிச போக்குக ளுடன் இந்து ராஷ்டிரம் நோக்கிப் பயணிக்கும் ஓர் அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. மோசடி செய்யும் வாய்ப்புகளைப் புதிதாகக் கண்டுபிடிக்கும், முழுமையாகப் பயன்படுத்தும். எனவே அனைத்துத் தளங்களிலும் போரிடுவதும், மக்களைத் திரட்டி எழுச்சி பெற வைப்பதும் அவசியம்.