கடந்த 12 ஆண்டுகளில் பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு கடும் சரிவு!
22 Jul 2026, 8:45 pm

கடந்த 12 ஆண்டுகளில் பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு கடும் சரிவு!

புதுதில்லி இந்தியாவில் கல்வித் துறைக்கு ஒன்றிய அரசு வழங்கி வரும் நிதி ஒதுக்கீடு கடந்த 12 ஆண்டுகளில் தொடர்ச்சியா கக் குறைந்து வந்துள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த பட்ஜெட்டோடு ஒப்பிடும் போது, கல்வி அமைச்சகத் தின் பங்கு பாதியாகக் குறை ந்துள்ளது கல்வி மற்றும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் கவலையை ஏற் படுத்தியுள்ளது.

2009-10 முதல் ஒன்றிய அர சின் பட்ஜெட், ஒவ்வொரு ஆண் டும் சராசரியாக 10.4 சதவிகி தம் அதிகரித்துள்ளது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அர சாங்கம் செலவழித்த மொத் தத் தொகை, அதற்கு முந் தைய ஆண்டு செலவழித் ததை விட தோராயமாக 10 சதவிகிதம் அதிகமாகவே இருந்துள்ளது.

கடந்த ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசின் கடைசி ஆண்டான 2013-14 இல், ஒன்றிய பட்ஜெட்டில் கல்வி அமைச்சகத்திற்கு 4.6 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இது 2025-26 ஆம் ஆண்டு நிலவரப்படி 2.5 சதவிகிதமா கக் கடுமையாகக் குறைந் துள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸில் மூத்த இணை ஆசிரியர் உதித் மிஸ்ரா குறிப் பிட்டுள்ளார். இந்த தொகை யானது அளவிலும் பண வீக்கத்தின் அடிப்படையி லும் மிகக்குறைவாகும்.

கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை யின் பங்கு முன்பு இருந்த தில் பாதியை விடக் குறை வாக உள்ளது. அதேபோல், உயர்கல்வித் துறையின் பங்கும் முந்தைய அளவோடு ஒப்பிடும்போது 60 சதவிகித மாக மட்டுமே உள்ளது.

‘திறன் இந்தியா’ (Skill India) திட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை வளர்ச்சி சார்ந்த முன்னெடுப்புகள் குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பேசி னாலும், திறன் மேம்பாட்டு அமைச்சகத்திற்கான பட் ஜெட் பங்கு ஆரம்பத்தில் இருந்த 0.06 சதவிகிதம் என்ற மிகக் குறைந்த அளவில் இருந்து தற்போது 0.05 சத விகிதமாக மேலும் குறைந் துள்ளது.

சாலைகள் அமைக்க அதிக நிதி

கடந்த 12 ஆண்டுகளில் சாலைகள் மற்றும் நெடுஞ் சாலைகள் அமைப்பதற்குச் செலவிடப்படும் தொகை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. முன்பு 1.8 சதவிகிதமாக இருந்த இந்தத் துறைக்கான ஒதுக்கீடு, தற்போது 5.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதே நேரத் தில் தேசிய நெடுஞ்சாலை கள் அமைப்பதில் பெரும் முறைகேடுகள் நடக்கின்றது என குற்றச்சாட்டுகள் எழுந் துள்ளன. புதிய சாலைகளில் கூட பள்ளங்கள் விழுவதும் மழைக்கு அடித்துச் செல்லப் படுவதும் அரங்கேறி வரு கின்றது.

அரசாங்கங்கள் தங்க ளது சொந்த முன்னுரிமை களின் அடிப்படையில் நிதி யை ஒதுக்க உரிமை பெற்றி ருந்தாலும், நாட்டின் எதிர் காலத் தூண்களான இளை ஞர்களின் கல்வி மற்றும் மேம் பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதி குறைவது எதிர்காலது துல் கடும் தாக்கத்தை ஏற் படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.