தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி திசை திருப்பும் மோடி அரசு
9 May 2026, 9:40 pm

தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி திசை திருப்பும் மோடி அரசு

பல ஆண்டுகளாக நாட்டை வாட்டி வதைத்து வரும் வேலை யில்லாத் திண்டாட்டம், தேக்க மடைந்த ஊதியங்கள் ஆகிய இரட்டை நெருக்கடிகளுடன், விலை உயர்வு குறித்த மோசமான கணிப்புகளும் சேர்ந்து, நாட்டின் பொருளாதார நெருக்கடி மிகவும் மோசமான நிலை க்குச் சென்றுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரும், அதன் விளைவாக உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தொடர் விளைவுகளும் - அதா வது, எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்வுகள், விநியோகச் சங்கிலித் தடைகள் மற்றும் அதன் விளைவாக உணவுப் பொருட்களின் விலை யில் ஏற்பட்ட திடீர் உயர்வு - ஏற்கெனவே இந்தியா மீது ஒரு நிழலைப் படரச் செய்துள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு இணங்கிப் போனதால்...

வெளிப்படையாக, மோடி அர சாங்கம் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி யுடன் தன்னை முழுமையாக அடை யாளப்படுத்திக் கொள்வதும், ஈரான் மீதான தாக்குதலுக்குச் சற்று முன்னர் பிரதமரின் இஸ்ரேல் பயணத்தின் மூலம் போரின் முதல் கட்டத் தாக்கு தல்களுக்குத் துணை நின்றதும், இந்த நெருக்கடியில் அவர்களின் குற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது. மிகவும் மலிவான ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவது தொடர்பாக, அரசாங்கம் முன்னதாக டிரம்ப்பின் வற்புறுத்த லுக்குப் பணிந்தது. எனவே, மோடி அர சாங்கத்தின் அமெரிக்க ஏகாதிபத்தி யத்திற்கு அடிபணிந்த வெளியுறவுக் கொள்கையாலும், அதன் விளைவாக அமெரிக்க-இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு இணங்கிப் போனதாலும், சாமானிய மக்களின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்தது.

சிலிண்டர் விலை உயர்வு

மோடி அரசு, பெட்ரோலியப் பொ ருட்கள் மீதான தனது கடும் கலால் வரியை வெறும் 10 ரூபாய் குறைத்துள் ளது. இது பெரும்பாலும் எண்ணெய் நிறுவனங்களின் நலனுக்காகவே செய் யப்பட்டுள்ளது. இந்த மாதம் வர்த்த கத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்த்தப் பட்டுள்ளது, அதே சமயம் மார்ச் மாதத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. கட்டுப்பாடற்ற பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை கார ணமாக, வீட்டு உபயோக சிலிண்டர்கள் சட்டவிரோதமாக 3000-4000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. கடந்த 44 மாதங்களில் இல்லாத வேகத்தில் உள்ளீட்டுப் பொருட்களின் விலையும், கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வேகத்தில் வெளியீட்டுக் கட்ட ணங்களும் உயர்ந்துள்ளதாகத் தொழில்துறை ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர். சட்டமன்றத் தேர்தல் வரை மோடி அரசு பல்வேறு விலை உயர்வுகளைத் தவிர்த்து வந்தது. தற்போது தேர்தல் முடிவுகள் வெளி யாகியுள்ள நிலையில், பணவீக்கம் கடுமையாக உயரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்கறையில்லா மோடி அரசு

இந்த ஆண்டின் பிற்பகுதியில் எல் நினோ எனப்படும் பசிபிக் பெருங் கடலில் வெப்பநிலை உயர்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று வானிலை ஆய்வா ளர்கள் கூறிவருகிறார்கள். எனவே உணவு உற்பத்தியில் வானிலை தொடர்பான இடையூறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு கள் அதிகம். மோடியும் அவரது அமைச் சர்களும் இந்த அச்சுறுத்தல்களைப் பற்றி அறியாமல் இல்லை, மாறாக அக்கறையின்றி இருக்கிறார்கள்.

வேலையின்மை- அபத்தமான வரையறை

நாட்டில் தொடர்ந்து நிலவும் அதிக அளவிலான வேலையின்மையின் காரணமாக, பணவீக்கம் குடும்ப வரவு செலவுத் திட்டங்களை மேலும் கடு மையாகச் சிதைக்கும் காரணியாக மாறி யுள்ளது. காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு மாத அறிக்கையின்படி, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வேலை யின்மை விகிதம் 5.1 சதவீதமாக இருந்தது - இது ஓராண்டுக்கு முன்பு இருந்த அதே அளவாகும். நகர்ப்புறங்களில் இது 6.8 சதவீதமாக இருந்தது. ‘தற்போதைய வாராந்திர நிலை’ வகை வேலை என்பது, முந்தைய ஓராண்டில் ஒரு மணி நேரம் செய்யப்பட்ட வேலையாக வரையறுக் கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வெளிப்படையாக, இத்தகைய அபத்தமான வரை யறை, இன்று இருக்கும் வேலை யற்றோர் கூட்டத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலானோரை விலக்கு வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாவுமணி அடிப்பு

அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘இந்தியாவில் வேலையின் நிலை’ குறித்த சமீபத்திய அறிக்கை, பட்டதாரிகளிடையே 15-25 வய துக்குட்பட்டோரில் வேலையின்மை 40 சதவீதமாகவும், 25-29 வயதுக்குட் பட்டோரில் 20 சதவீதமாகவும் உள்ளது என்ற மிகவும் அபாயகரமான தரவைக் குறிப்பிட்டுள்ளது. பெரிதும் பறை சாற்றப்பட்ட இளம் தொழிலாளர் சக்தி எனும் மக்கள்தொகைப் பலனுக்கு இந்த அறிக்கை நடைமுறையில் சாவு மணியை அடித்துள்ளது. 2030இல் அதன் உச்சம் எட்டப்படும் என்றும், அதன் பிறகு உழைக்கும் வயதுடையோரின் விகிதம் குறையத் தொடங்கும் என்றும் அது கூறுகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கத் தில் காட்டிய மிக மோசமான அலட்சி யத்தின் காரணமாக, இந்த அனு கூலத்தை வீணடித்ததற்கு மோடி அர சாங்கமே முழுமையாகவும், கிரிமினல் ரீதியாகவும் பொறுப்பாகும்.

23.6 சதவீதமே நிலையான வேலை

இதற்கிடையில், பொருளாதார நல்வாழ்வின் மிக அடிப்படையான அம்ச மான - வருவாய் அல்லது வருமானம் - தொடர்ந்து தேக்க நிலையிலேயே நீடிக்கிறது. இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை நிலைமையை அளவிட, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மாதிரி ஆய்வு அலுவ லகத்தால் வெளியிடப்படும் 2025-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை இதனை மீண்டும் ஒருமுறை உறுதிப் படுத்தியுள்ளது. மொத்தப் பணியா ளர்களில் கால் பகுதிக்கும் குறைவான வர்களே (துல்லியமாகச் சொல்வதானால் 23.6 சதவீதம் பேர்) நிலையான ஊதியம் அல்லது சம்பளம் வழங்கப்படும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். மக்க ளில் பெரும்பான்மையினர் (56.2 சதவீதம் பேர்) ‘சுயதொழில்’ செய்ப வர்களாக உள்ளனர்; இவர்களில் விவ சாயத் தொழிலாளர்கள், சேவைத் துறை யில் கூலிக்கு வேலை செய்யும் லட்சக் கணக்கானோர் மற்றும் பிற பிரிவினர் அடங்குவர். மேலும், 20 சதவீதத்திற்கும் சற்று அதிகமானோர் தற்காலிகத் தொழி லாளர்களாகப் பணிபுரிகின்றனர்.

கார்ப்பரேட்டுகளுக்கு தாராளம்! உழைக்கும் மக்களுக்கு பெரும் சுமை

இந்த மூன்று பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சராசரியாக எவ்வளவு ஈட்டுகின்றனர்? ஒரு மதிப்பீட்டின்படி, உழைக்கும் இந்தியர்களில் 64 சதவீதம் பேர் குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்ன வென்றால், 2022-2025 காலகட்டத்தில், நிலையான ஊதியம் மற்றும் சம்பளம் பெறுபவர்களின் ‘உண்மையான ஊதியத்தில்’ (real wages) ஆண்டுக்கு 1.2 சதவீதம் உயர்வு காணப்பட்டது; அதேவேளையில், தற்காலிகத் தொழி லாளர்களுக்கு இந்த உயர்வு வெறும் 0.5 சதவீதமாகவும், சுயதொழில் செய்பவர்க ளுக்கு 1 சதவீதமாகவும் மட்டுமே இருந்தது.

கார்ப்பரேட் உலகம் வரிக் குறைப்பு கள், சலுகைகள் மற்றும் கடன் தள்ளு படிகள் வாயிலாக மோடி அரசாங்கம் வழங்கிய தாராள உதவிகளால் பெரும் லாபங்களை ஈட்டி, கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் அதே வேளையில், குறைந்த வருவாய் நிலையும், வருவாயில் ஏறக்குறைய எந்த உயர்வுமே இல்லாத நிலையும் இந்திய உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஒரு பெரும் சுமையா கத் தொடர்கிறது.

வெறுப்பு விதைப்பும் சிதைக்கப்படும் கட்டமைப்பும்

இந்த நெருக்கடியின் மிகவும் சோக மான மற்றும் ஆத்திரமூட்டும் அம்சம் என்னவென்றால், தற்போதைய அரசாங்கம் மக்களின் துயரத்தையும் வலியையும் சற்றும் பொருட்படுத்த வில்லை என்பதுதான். அதன் அதிகாரப் பேராசையும், செல்வந்தர்களுக்குச் சேவை செய்வதில் உள்ள அதன் அர்ப்பணிப்பும் மிகவும் மேலோங்கி இருப்பதால், அது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்க ளின் கைதட்டல்களுக்கு மத்தியில், நாட்டின் அரசமைப்புச்சட்டத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் அழித்து, ஜன நாயக உரிமைகளை நசுக்கி வருகிறது. இந்தச் செயல்பாட்டில், அது வெறுப்பு மற்றும் பிளவுக்கான விதைகளை விதைத்து, நாட்டின் சமூகக் கட்ட மைப்பையே சிதைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மக்களின் ஒன்றுபட்ட பலத்தால் மட்டுமே இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத் தின் இந்த அழிவைத் தடுக்க முடியும். “பீப்பிள்ஸ் டெமாக்ரசி, மே 10” தமிழில் சுருக்கம்: ச.வீரமணி