தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீவிரமடையும் இந்திய நெருக்கடி வேர் எது? தீர்வு என்ன? - டி.கே.ரங்கராஜன்

6 Jun 2026, 7:55 pm
தீவிரமடையும் இந்திய நெருக்கடி வேர் எது? தீர்வு என்ன? - டி.கே.ரங்கராஜன்

தீவிரமடையும் இந்திய நெருக்கடி வேர் எது? தீர்வு என்ன? - டி.கே.ரங்கராஜன்

தீவிரமடையும் இந்திய நெருக்கடி வேர் எது? தீர்வு என்ன? - டி.கே.ரங்கராஜன்நெருக்கடியைச் சந்திக்கின்றன. உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற பளபளப்பான விளம்பரங்களுக்கும், ரிசர்வ் வங்கியின் 7.6% ஜிடிபி வளர்ச்சி என்ற புள்ளிவிவரங்களுக்கும் பின்னால், சாமானிய மக்களின் வாழ்வாதாரச் சீர்குலைவு என்கிற கசப்பான எதார்த்தம் மறைந்துள்ளது. தொழில்துறை மந்தநிலை, விவசாயத்தின் வீழ்ச்சி, வரலாறு காணாத இளைஞர் வேலையின்மை, கல்வியும் சுகாதாரமும் ஏழைகளுக்கு எட்டாத கார்ப்பரேட் பண்டங்களாக மாறியுள்ள அவலம் என — நாட்டின் ஒவ்வொரு துறையும் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

இந்த நெருக்கடியின் வேர்கள் சரியாக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஊன்றப்பட்டன. 1991 ஜூலை 24 அன்று, அன்றைய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, இந்திய அரசியல் பொருளாதாரம் சர்வதேச நிதி மூலதனத்திற்கு முழுமையாகச் சரணடைந்தது. சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) மற்றும் உலக வங்கியின் நிபந்தனைகளுக்குக் கைமாறாக, நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, நேருவிய மக்கள் நல அரசைத் தகர்க்க ஒப்புக்கொண்டது. அந்நியச் செலாவணி நெருக்கடி உடனடிக் காரணமாக கூறப்பட்டாலும், உண்மையான காரணம் கொள்கை ரீதியான சரணாகதியே. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்கிற “எல்பிஜி சீர்திருத்தங்கள்” இன்றைய அனைத்து நெருக்கடிகளுக்கும் மூலகாரணம்.

இந்த பாதகமான மாற்றத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்த ஒரே இயக்கம் இந்திய இடதுசாரி இயக்கம் மட்டுமே! 1992-இல் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14-ஆவது அகில இந்திய மாநாட்டிலிருந்து தொடர்ந்து, தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (எல்பிஜி) என்பது இந்திய மற்றும் சர்வதேச ஏகபோக மூலதனத்திற்குச் சேவை செய்யும் கொள்கை என்று மார்க்சிஸ்ட் கட்சி திட்டவட்டமாக எதிர்த்து வந்துள்ளது. ஏப்ரல் 2025-இல் மதுரையில் நடைபெற்ற 24-ஆவது அகில இந்திய மாநாடு இதை மேலும் கூர்மைப்படுத்தியது: மோடி அரசு “நவ-பாசிசப் பண்புகளை வெளிப்படுத்தும் இந்துத்துவ-கார்ப்பரேட் எதேச்சதிகார ஆட்சி” என்றும், இந்த நவ-பாசிசம் “நவதாராளவாத நெருக்கடியின் விளைபொருள்” என்றும் அரசியல் தீர்மானம் சுட்டிக்காட்டியது. காங்கிரஸ் நவீன தாராளமயக் கொள்கை அமலாக்கத்தைத் தொடங்கியது; பாஜக அதை மேலும் தீவிரப்படுத்தி, அதன் விளைவாக எழும் சமூகக் கொந்தளிப்பை ஒடுக்க மதவாத எதேச்சதிகார மேல்கட்டமைப்பை ஏற்றியுள்ளது. இரண்டும் ஒரே வர்க்கக் கொள்கையின் இருவேறு முகங்களே.

தொழில்துறை நெருக்கடி: வேலையில்லா வளர்ச்சியின் உண்மை முகம்

2026 மார்ச் மாதத்தில் தொழில் உற்பத்திக் குறியீடு (IIP) வெறும் 4.1% மட்டுமே வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது — கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத மிகக் குறைவான வளர்ச்சி. 2025 அக்டோபரில் இது 0.4% ஆக வீழ்ந்தது; அப்போது உற்பத்தித் துறை 1.8%, சுரங்கத் துறை -1.8% (மைனஸ்), மின்சார உற்பத்தி -6.9%(மைனஸ்) என அனைத்தும் சரிந்தன. ஒட்டுமொத்த 2024-25 நிதியாண்டில் வெறும் 4.0% கூட்டுத் தொழில் உற்பத்தி வளர்ச்சி — கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத மிகப் பலவீனமான செயல்திறன். மேலும், பிப்ரவரி 2026-இல் வெடித்த மேற்கு ஆசியப் போர்ச் சூழல் இந்த பொரு ளாதார மந்தநிலைக்கு மேலும் பின்னடைவு ஆபத்தை சேர்க்கும் என ரிசர்வ் வங்கியே எச்சரித்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்களுக்குள் ஒளிந்தி ருக்கும் உண்மை மிகவும் கொடூரமானது. மூலதனப் பொருட்கள் (Capital goods) துறை 14.6% வளர்ச்சியை அடைந்தி ருக்கும்போது, உழைக்கும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பிஸ்கட், சமையல் எண்ணெய் போன்ற நுகர்பொருட்கள் துறை வெறும் 1.1% என்கிற அற்பமான வளர்ச்சியையே பெற்றுள்ளது. 2025 அக்டோபரில் இதே துறை 4.4% சுருக்கத்தைச் சந்தித்தது. இதன் பொருள், மூலதனம் கொழுக்கிறது; உழைக்கும் மக்களின் வாங்கும் திறன் பறிக்கப்படுகிறது — இதுவே “வேலை யில்லா வளர்ச்சியின்” (Jobless Growth) உண்மையான முகம். பொருளாதாரம் வளர்கிறது என்று கூறப்படும்போது, யாருக்காக வளர்கிறது என்கிற கேள்வியே வெடித்து எழுகிறது.

இந்த நெருக்கடியின் கட்டமைப்பு காரணங்கள் தெளிவானவை: பிஎஸ்என் எல், ஏர் இந்தியா, எல்ஐசி, விசாகப்பட்டி னம் எஃகு ஆலை என தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் திட்டமிட்ட விற்பனை; 2016 பணமதிப்பு நீக்கம், அவசர ஜிஎஸ்டி, கோவிட் பொதுமுடக்கம் ஆகியவற்றால் உழைப்புச் சார்ந்த வேலைகளின் முதுகெலும்பான லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்கள் அழிந்த நிலைமை; தொழிற்சாலைகளில் புகுத்தப்படும் ஏஐ, ரோபோட்டிக்ஸ் தானியங்கி தொ ழில்நுட்பங்கள் காரணமாக புதிய மூல தன முதலீடுகள் மிகக் குறைவான வேலை வாய்ப்புகளையே உருவாக்குகின்றன.

இத்துடன், 2025 நவம்பரில் நடைமுறைக்கு வந்த நான்கு புதிய தொழி லாளர் தொகுப்புச் சட்டங்கள் உழைக்கும் வர்க்கத்தின் மீதான பேரிடியாக இறங்கியுள்ளன. 300 தொழிலாளர்கள் வரையிலான நிறுவனங்களில் அரசு அனுமதியின்றி பணிநீக்கம் செய்யும் உரிமை முதலாளிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது; தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது; நிரந்தர வேலைக்குப் பதிலாக குறிப்பிட்ட கால ஒப்பந்த முறை சட்டப்பூர்வ மாக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ்-சார்பு பாரதிய மஸ்தூர் சங்கம் உட்பட நாட்டின் அனைத்து மத்திய தொழிற் சங்கங்களும் இதை ஏகமனதாக எதிர்த்துள்ளன என்பது வரலாற்று முக்கி யத்துவம் வாய்ந்தது.

விவசாயப் பேரழிவு: தேசிய அளவிலும் தமிழகத்திலும்

1995 முதல் 2023 வரை இந்தி யாவில் அதிகாரப்பூர்வ கணக்கின்படி 3,94,206 விவசாயிகளும் விவசாயத் தொழிலா ளர்களும் தற்கொலை செய்துகொண் டுள்ளனர் — ஆண்டுக்குச் சராசரியாக 13,600 மரணங்கள். 2023-இல் மட்டும் 10,786 பேர் மாண்டனர் — 2022-ஐ விட 7.5% அதிகம். வரலாற்றிலேயே முதல் முறையாக நிலமுள்ள விவசாயிகளை (4,690) விட நிலமற்ற கூலித் தொழிலா ளர்களின் தற்கொலை எண்ணிக்கை (6,096) அதிகமாக உள்ளது — நவ தாராளவாத நெருக்கடி சிறு விவசாயிக ளிடமிருந்து நிலமற்ற ஏழைத் தொழிலா ளர்கள் வரை ஆழமாக ஊடுருவியதற் கான வேதனை மிகுந்த சான்று இது.

விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் பொதுத்துறை முதலீடு 1970-களில் 4% ஆக இருந்தது, 2000-களில் 2%-க்கும் கீழ் சரிந்தது. ஒட்டு மொத்த விவசாய முதலீட்டில் பொதுத் துறையின் பங்கு 1980-களில் 50% ஆக இருந்தது, 2000-களில் 20% ஆகக் குறைந்தது. 1995-இல் இந்தியா உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததும், விவசாய ஒப்பந்தத்தின் மூலம் இறக்கு மதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும், வளர்ந்த நாடுகளின் மானியம் பெற்ற விவசாயப் பொருட்கள் இந்தியச் சந்தை யில் புகுந்ததும் — இந்த வரிசை நிகழ்வு களே இந்திய விவசாயிகளை கடனாளிக ளாக மாற்றி, தற்கொலைக்குத் தள்ளின. அரசு விவசாயத்தை கைவிட்டது; கார்ப்ப ரேட்டுகள் கொள்ளையிட வந்தன; சாமா னிய விவசாயி உயிரைப் பலியிட்டார்.

தமிழகத்தில் இந்த அழிவு மிகவும் அடர்த்தியாக வெளிப்படுகிறது. 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் விவசா யம் மற்றும் சார்புத் துறைகள் -3.81% (மைனஸ்) என்கிற எதிர்மறை வளர்ச்சி யைப் பதிவு செய்துள்ளன — எட்டு ஆண்டு களில் இல்லாத வீழ்ச்சி. மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி நாட்டிலேயே உயர்ந்த இடத்தில் இருக்கும்போது, விவசாயம் தனியாக மூழ்கிக்கொண்டிருக்கிறது — நவதாராளவாத “வளர்ச்சியின்” கோர முகம் இதுவே. காவிரி நீர் தீர்வின்மை, கோவை-திருப்பூர் பகுதியில் நிலத்தடி நீர் அபாயகரமான ஆழத்திற்குச் சென்றமை, சட்டவிரோத மணல்-கல் குவாரிகளால் நதிநீர் அமைப்புகள் அழிவு, திருப்பூர் சாயக்கழிவுகளும் வேலூர் தோல்பதனிடும் தொழிற்சா லைக் கழிவுகளும் விளைநிலங்களை நஞ்சாக்குதல் என ஏராளமான பிரச்ச னைகள் விவசாயிகளை முற்றுகை யிட்டுள்ளன; தமிழக விவசாயிகளில் 80%-க்கும் அதிகமானோர் ஒரு ஹெக்டே ருக்கும் குறைவான நிலம் கொண்ட சிறு, குறு விவசாயிகளாக இருக்கும்போது, கார்ப்பரேட் ஆதிக்கம் செலுத்தும் சந்தை யில் தனித்து வெல்வது அவர்களுக்கு அசாத்தியமானது.

கல்வி நெருக்கடி: பொது உரிமையிலிருந்து தனியார் பண்டமாக!

பள்ளிக் கல்விக்கான பொ துத்துறை முதலீடு ஜிடிபி யில் 3%-க்கும் குறைவாக நீடிக்கிறது. — இது, அறுபது ஆண்டுக ளுக்கு முன்பு கோத்தாரிக் குழு பரிந்து ரைத்த 6%-இன் பாதியே. இதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தி யுள்ளன. கல்வித் தரத்தில் தென்னிந் தியாவிலேயே முன்னோடியாகத் திகழும் தமிழ்நாட்டில் கூட, 2-ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தை சரளமாக படிக்கக் கூடிய 3-ஆம் வகுப்பு மாணவர்களின் விகிதம் 2018-இல் 10.2% ஆக இருந்தது, 2022-இல் 4.8% ஆகக் குறைந்துள்ளது. கழித்தல் கணக்கு செய்யக்கூடியவர்களின் விகிதம் 25.9%-லிருந்து 11.2%-ஆகச் சரிந்தது — பிற பெரிய மாநிலங்களை விட மிக மோசமான சரிவு. பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் இன்னும் காலியாகவே கிடக்கின்றன; ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் ஒன்று அல்லது இரண்டு ஆசிரி யர்களுடன் அனைத்து வகுப்புகளையும் நடத்தும் அவல நிலையில் உள்ளன.

இந்தக் கட்டமைப்புப் புறக்கணிப்பின் உச்சமாக, ‘தேசியக் கல்விக் கொள்கை 2020’ கல்வியை அறிவொளிக்கானதாகப் பார்க்காமல் கார்ப்பரேட் சந்தைக்கான “திறன் தொழிற்சாலையாக” மாற்றுகி றது. அந்நியத் தனியார் பல்கலைக் கழகங்களை ஊக்குவிக்கும் இந்தக் கொள்கையையும், ‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தையும் ஏற்க மறுத்த தமிழ்நாட்டின் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக, ஒன்றிய அரசு ரூ.2,291 கோடி சமக்ர சிக்சா நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு அரசியல் சாசனப் பிரிவு 131-இன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. கூட்டாட்சி முறைக்கும், 2009-ஆம் ஆண்டின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை முரணானது என்று தமிழ்நாடு வாதிட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் ‘நீட்’ திணிப்பு, ஏழை கிராமப்புற மாணவர்க ளின் மருத்துவக் கனவை சிதைத் துள்ளது — கல்வி என்பது வணிக லாபங்களை நிலைநிறுத்தும் கருவியாக மாற்றப்பட்டுவிட்டது.

இளைஞர் வேலையின்மையும் நுகர்வுத் தேக்கமும்

அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தின் ‘இந்திய உழைப்பு நிலை அறிக்கை 2026’, 15-25 வயதுக்குட்பட்ட இளைஞர்க ளில் கிட்டத்தட்ட 40% பேர் வேலையின்றி தவிக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. 20-29 வயது பட்டதாரிகளில் 1.1 கோடி பேர் — ஆறில் ஒருவர் — முற்றிலும் வேலையற்றவர்களாக உள்ளனர்; 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளிடையே வேலையின்மை 42.3% என்கிற உச் சத்தைத் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் இளைஞர் வேலையின்மை 12.7%, இளம்பெண்கள் மத்தியில் 21.9% என அதிர வைக்கும் அளவில் உள்ளது. உழைப்பாளர் படையில் 65.7% பேர் இன்னும் முறைசாரா துறையிலேயே — எந்த முறையான பணி ஒப்பந்தமும், சமூகப் பாதுகாப்பும், தொழிற்சங்க உரி மையும் இன்றி — முடங்கிக் கிடக்கி றார்கள்.

2024 ஜனவரியில் நடைபெற்ற ‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்’ (GIM 2024) ரூ.6,64,180 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், 14,54,712 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு உருவாகும் என்றும் அறிவிக்கப் பட்டது. ஆனால் ஒன்றிய அரசின் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) தரவுக ளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்திற்கு வந்தது வெறும் ரூ.68,507 கோடி மட்டுமே — அறிவிக்கப் பட்டதில் வெறும் 6%. கையில் பட்டங்க ளோடு இளைஞர்கள் ஸ்விக்கி, சொ மாட்டோ, அமேசான் ஒப்பந்தத் தொழி லாளர்களாக மாறும் அவல நிலை — புதிய தொழிலாளர் சட்டங்கள் இவர்க ளை தொழிலாளர்களாகக்கூட அங்கீ கரிப்பதில்லை.

இந்த வேலையின்மை நேரடியாக நுகர்வுத் தேக்கத்தை உருவாக்குகிறது. 2019 ஏப்ரல் முதல் 2024 ஆகஸ்ட் வரை கிராமப்புற உண்மையான ஊதிய வளர்ச்சி -0.4%(மைனஸ்) என்கிற எதிர் மறை நிலையை எட்டியுள்ளது. பெயரளவு ஊதியம் 5.2% உயர்ந்தாலும், கடுமையான உணவுப் பணவீக்கம் அதை விழுங்கிவிட்டது. மறுபுறம், ‘உலக சமத்துவமின்மை அறிக்கை 2026’ அம்பலப்படுத்தும் உண்மை: இந்தியா வின் ஒட்டுமொத்த தேசியச் சொத்தில் 40%-க்கும் அதிகமாக வெறும் 1% கோடீஸ்வரர்களிடம் குவிந்துள்ளது; அடி மட்டத்தில் உள்ள 50% மக்களிடம் வெறும் 6% மட்டுமே உள்ளது. அதானி, அம்பானி உள்ளிட்டோரின் சொத்துகள் பல்லாயிரமடங்கு பெருகும்போது, சாதா ரண தொழிலாளியின் கூலி தேய்ந்து போகிறது — மார்க்ஸ் ‘மூலதனத்தில்’ சொன்ன உண்மை இன்று இந்தியாவில் அப்பட்டமாக நிரூபிக்கப்படுகிறது.

நவ-பாசிசம்: நெருக்கடிக்கு ஆளும் வர்க்கத்தின் தீர்வு

முதலாளித்துவ நெருக்கடி ஆழ மடையும்போது ஆளும் வர்க்கத்திற்கு இரண்டே வழிகள் உள்ளன: மறுபகிர்வு செய்வது அல்லது ஒடுக்குவது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய சமூக ஜனநாயக நாடுகளும், 1991க்கு முன்பு இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதா ரமும் ஓரளவு முதல் வழியை பின்பற்றின. தற்போதைய ஆட்சி இரண்டாவது பாதையை தீவிரமாகப் பின்தொடர்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு; இதை தத்துவார்த்தரீதியாக வரையறுத்தது: “1940களில் எழுந்த பாசிசம் ஏகாதிபத்தி யங்களுக்கிடையிலான முரண்பாடுகளி லிருந்து உருவானது; தற்போதைய நவ-பாசிசம் நவதாராளவாத நெருக்கடியின் விளைபொருள்.” இந்த வேறுபாடு மிக முக்கியமானது — ஏனெனில் இது நவ-பாசிசத்தின் வர்க்க அடித்தளத்தை அம்பலப்படுத்துகிறது.

கார்ப்பரேட்டுகளுக்காக கொண்டு வரப்பட்டு விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தால் முறிய டிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள்; உபா சட்டத்தின் கீழ் சிறையில டைக்கப்படும் மாணவர்கள், பத்திரிகை யாளர்கள், தொழிற்சங்கவாதிகள்; புல்டோசர் கலாச்சாரம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), வக்பு திருத்தச் சட்டம் மூலம் நடைபெறும் கொடிய மாற்றங்கள்; தேர்தல் ஆணையம், நீதித்துறை, ரிசர்வ் வங்கி, சிஏஜி போன்ற அரசியலமைப்புச் சட்ட நிறுவ னங்களின் முடக்கம் — இவை யாவும் ஒரே நோக்கத்திற்காகத்தான்; கார்ப்ப ரேட் கொள்ளை தடையின்றி நடைபெற, உழைக்கும் மக்கள் வர்க்க ரீதியாக ஒன்றிணைந்துவிடக் கூடாது என்ப தற்கான மேலாண்மை கருவிகளே இவை. மதவெறிப் பிரிவினைவாதம் என்பது ஒரு கலாச்சார நிகழ்ச்சி நிரல் மட்டுமல்ல — அதுவே அவர்களின் பொருளாதார நிகழ்ச்சி நிரலாகும்.

இடதுசாரி மாற்றுத் திட்டமும் தமிழகத்தின் வரலாற்றுப் பொறுப்பும்

தமிழ்நாடு இரண்டு கோணங்களி லும் நெருக்கடியை சந்திக்கிறது: ஒருபுறம் ஜிஎஸ்டி மூலம் மறைமுக வரி இறையாண்மை பறிக்கப்பட்ட நிலையில், நிதி ஆயுதங்களைப் பயன் படுத்தி எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்க ளை முடக்கும் ஒன்றிய இந்துத்துவ - கார்ப்பரேட் அரசு; மறுபுறம் தாராள மயம், தனியார்மயம் எனும் கட்டமைப்பிலிருந்து விடுபடாத மாநில நவதாராளவாதப் பொருளாதாரப் போக்கு — உலக முதலீட்டாளர்கள் மாநாடு கள் முறைசாரா, தற்காலிக, குறைந்த ஊதிய வேலைகளையே உருவாக்கு கின்றன; ஸ்ரீபெரும்புதூர், ஓசூர், கோவை தொழில் மண்டலங்கள் விவசாய-மீனவ மக்களின் நிலங்களைப் பறிக்கும் கருவிகளாகவும் மாறுகின்றன.

இந்த நெருக்கடிக்கு சிறு சீர்திருத்தங் கள் போதாது; ஒட்டுமொத்த நவீன தாராள மயக் கட்டமைப்பையே உடைத்தெறி யும் முழுமையான வர்க்க மாற்றுத் திட்டம் தேவை: சுவாமிநாதன் குழு பரிந்து ரைப்படி வேளாண் பொருட்களுக்கு சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஆதரவு விலை; நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உடனடியாக திரும்பப் பெறுதல்; கல்விக்கு ஜிடிபியில் 6%, சுகாதாரத்திற்கு 3% ஒதுக்கீடு; மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து, நிதியை ஜிடிபியில் 1.7%-ஆக உயர்த்தி 200 நாட்கள் வேலைவாய்ப்பும் சட்டப் பூர்வ குறைந்தபட்ச ஊதியமும் உத்தர வாதம் செய்தல்; 1% கோடீஸ்வரர்களுக்கு சொத்துவரி மீண்டும் விதித்தல்; மாநிலங்களின் நிதி சுயாட்சி முழுமை யாக மீட்பு என துணிச்சலுடன் அம லாக்கும் ஆட்சியாளர்கள் தேவை.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி தலை மையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, கடுமையான நிதி நெருக்கடி களுக்கு மத்தியிலும் இந்த மாற்றுப் பாதையை திறம்பட நிரூபித்துக் காட்டி யது. பொதுக்கல்வி, பொதுச்சுகாதாரம், நிலச்சீர்திருத்தம், அதிகாரப் பரவலாக்கல் ஆகியவை “நவதாராளவாதத்திற்கு மாற்றே இல்லை” என்கிற கார்ப்பரேட் கதையாடலை தகர்க்கின்றன.

நம் விவசாயத் தற்கொலைகளும், இளைஞர் வேலையின்மையும், கல்விச் சீரழிவும், கூலி வீழ்ச்சியும், கார்ப்பரேட் சொத்துக் குவிப்பும், பாசிச வன்முறை களும் — தற்செயல் விபத்துக்கள் அல்ல. இவை அனைத்தும் 1991 ஜூலை யில் தொடங்கி வைக்கப்பட்டு, 2014-க்குப் பிறகு மோடி அரசால் அதீத தீவிரத்துடன் நடத்தப்பட்டு வரும் ஒரு திட்டமிட்ட வர்க்கப் போரின் விளைவுகள். தொழிலாளர்கள், விவசாயிகள், மாண வர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் வர்க்கப் போராட்டங்களின் மூலமும் இடதுசாரி-ஜனநாயக சக்திக ளின் ஒற்றுமையின் மூலமும் மட்டுமே இதற்கு மக்கள் தீர்வு வழங்க முடியும். காவிரி டெல்டா விவசாயிகள், திருப்பூ ரின் ஜவுளித் தொழிலாளர்கள், கோவை யின் சிறுதொழில் முனைவோர்கள், வேலையற்ற பட்டதாரி இளைஞர்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களின் விடு தலைக்கான ஒரே பாதை வர்க்க அடிப்படையிலான அரசியல் போராட்டம் மட்டுமே!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.