100 சதவிகித எத்தனால் பயன்பாடு : வாகன விதிகளில் பாஜக திருத்தம்
28 Oct 2026, 8:58 pm

100 சதவிகித எத்தனால் பயன்பாடு : வாகன விதிகளில் பாஜக திருத்தம்

புதுதில்லிநூறு சதவிகிதம் எத்தனால் மூலம் இயங்கும் இ-100 வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் 1989-ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகளில் பாஜக அரசு திருத்தங்களை மேற்கொண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.இ-85 மற்றும் இ-100 ஆகிய எத்தனால் எரிபொருட்கள் பயன்படுத்தி இயங்கும் வாகனங்களுக்கான மாசுகட்டுப்பாட்டு விதிகள், எரிபொருள் விவர குறிப்புகள் மற்றும் பரிசோதனை நடைமுறைகள்சட்டப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளன.

சாதாரண பெட்ரோல் கார்களிலோ அல்லது இ-20 வரை இயங்க கூடிய கார்களிலோ E -100 எரிபொருளை பயன்படுத்தமுடியாது என அமைச்சகம் திட்டவட்டமாக தெளிவுப்படுத்தி உள்ளது.20 சதவீதத்திற்கு மேற்பட்ட எத்தனால் கலந்த எரிபொருட்கள் அதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சான்றளிக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக இந்தியாவில் வாகன எரிபொருளில் எத்தனால் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் கரும்புகள் சக்கரை உற்பத்திக்கு அனுப்பப்படுவதை விட எத்தனால் உற்பத்திக்கே மடைமாற்றப்படுகிறது. இதனால் மக்களின் அன்றாட தேவையில் உள்ள சக்கரை விலை அதிகரித்து வருகிறது. தற்போது 100 சத

விகித எத்தனால் பயன்பாடு தற்போதைய நிலையை மேலும் மோசமாக்கும் என அச்சம் எழுந்துள்ளது.