தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் நடத்திய 10 நாள் பேச்சுவார்த்தை! அருணாச்சல் எல்லைப் பதற்றத்தைத் தணிக்க ஆலோசனை!

21 minutes before
இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் நடத்திய 10 நாள் பேச்சுவார்த்தை! அருணாச்சல் எல்லைப் பதற்றத்தைத் தணிக்க ஆலோசனை!

இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் நடத்திய 10 நாள் பேச்சுவார்த்தை!

அருணாச்சல் எல்லைப் பதற்றத்தைத் தணிக்க ஆலோசனை!

, நவ. 23 –அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய, உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கும், மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் இந்திய - சீன ராணுவஅதிகாரிகள் இரு நாடுகளுக்கு இடையே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது.நாகாலாந்தின் திமாபூர் அருகே உள்ள ரங்கபஹாரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய ராணுவத்தின் 3ஆவது கார்ப்ஸ் (Spear Corps) படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் காலியா தலைமையிலான இந்திய ராணுவ அதிகாரிகள் குழு இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றது.

இரு நாடுகளும் கிழக்குப் பிராந்திய எல்லைப் பகுதிகளில் பெருமளவில் படைகளைக் குவித்துள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே நேரடி மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான விதிமுறைகளை வகுப்பது, தடையற்ற தகவல் தொடர்பைப் பராமரிப்பது, பதற்றத்தைக்குறைப்பது ஆகியவை குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளன.அருணாச்சலப் பிரதேசத்தின் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள தாக்சிங் (Taksing) பகுதியில் இரு நாட்டு வீரர்களும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டதாக இந்தோ - திபெத் எல்லைக்காவல் படையின் (ITBP) தலைமை இயக்குநர் சத்ருஜித் கபூர் கடந்த மாத இறுதியில் தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் கிபித்து (Kibithoo) செக்டார் பகுதியில் உள்ள வாச்சா - தமாய் சந்திப்பு மை யத்தில் இந்திய - சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையேமுதற்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதையடுத்து, நவம்பர் 8-ஆம் தேதி தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை,இடையில் சில நாட்கள் இடைவெளியுடன் சுமார் 10 நாட்கள் நடைபெற்றதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் குளிர்காலம் மிகக் கடுமையாக இருக்கும் என்பதால், வீரர்களின் நடமாட்டத்துக்கும், தளவாடங்களைக் கொண்டு செல்வதற்கும் பெரும் சவால்கள் ஏற்படும்.வெப்பநிலை வெகுவாகக் குறைந்து, முக்கியமான எல்லைப் பகுதிகளுக்குச் செல்வது கடினமாகும் என்பதால்,பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட அம்சங்களைக் கடுமையான குளிர்காலம் முழுமையாகத் தொடங்குவதற்குமுன்பே அமல்படுத்தும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்குச் சென்ற இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், அங்கு சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயுடன் எல்லைப் பிரச்சனை தொடர்பாகப்பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருதரப்பு உறவுகளைச் சீரமைப்பதற்காக இரு நாடுகளும் தூதரக ரீதியிலான முயற்சிகளை மீண்டும் தொடங்கியுள்ள சூழலில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.