தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நல்லுறவும் தொடர்ச்சியான பேச்சுமே எல்லையில் அமைதியைக் காக்கும்!

7 Sept 2026, 9:55 pm
நல்லுறவும் தொடர்ச்சியான பேச்சுமே எல்லையில் அமைதியைக் காக்கும்!

நல்லுறவும் தொடர்ச்சியான பேச்சுமே எல்லையில் அமைதியைக் காக்கும்!

இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (LAC) நிலவிவரும் பதற்றங்களைத் தணிக்கும் விதமாக, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள வச்சா-டாமாய் எல்லைப் பகுதி சந்திப்பில் இந்திய மற்றும் சீன இராணுவத்தினரின் கமாண்டர்கள் அளவிலான முதலாவது உயர்மட்டப் பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதுவரை லடாக் மேற்குப் பகுதிஎல்லைகளுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்த இந்த உயர்மட்ட இராணுவப் பேச்சுவார்த்தை ஏற்பாடு, தற்போதுகிழக்குப் பகுதியான அருணாச்சலப் பிரதேசத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். தற்போதைய சூழலில், பிராந்திய அமைதியையும் நல்லுறவையும் நிலைநிறுத்த இதுபோன்றநேரடித் தொடர்புகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளும் காலத்தின் கட்டாயமாகியுள்ளன.

பிரிக்ஸ் உச்சிமாநாடு புதுதில்லியில் செப்டம்பர் 11 முதல் 13 வரை நடைபெறவுள்ள நிலையில், இம்மாநாட்டில் சீன ஜனாதிபதிஜி ஜின்பிங் கலந்துகொள்ள உள்ளார். இந்த முக்கிய மாநாட்டிற்குச் சில நாட்களுக்கு முன்பாகஇந்த இராணுவப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பது இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரகமற்றும் ராணுவ ரீதியிலான இணக்கத்தை மேலும்வலுப்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 6 அன்று நடைபெற்ற எல்லை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, கடந்தஆகஸ்ட் 26-ல் பெய்ஜிங்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவுத்துறை இயக்குநர் வாங் யீ தலைமையிலான 25-வது சிறப்புப் பிரதிநிதிகள் சுற்றுப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இந்தத் தொடர் முயற்சிகளின் விளைவாக எட்டப்பட்ட எட்டு அம்சஉடன்படிக்கையின் அடிப்படையில், புதியஎல்லைச் சந்திப்புப் புள்ளிகளை உருவாக்குவதும், ஹாட்லைன் இணைப்புகளை வலுப்படுத்துவதும் எல்லையில் நம்பிக்கையை வளர்க்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியாவின் இருபெரும் சக்திகளான இந்தியாவும் சீனாவும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயல்படுவது உலகளாவிய தெற்கின் (Global South)குரலை வலுப்படுத்தவும், பிரிக்ஸ் அமைப்பை மேலும் பலப்படுத்தவும் பெரிதும் உதவும். வளரும் நாடுகளின்நலன்களைப் பாதுகாப்பதிலும், பன்னாட்டு நிதி அமைப்புகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதிலும் பிரிக்ஸ் அமைப்பின் பங்குஇன்றியமையாதது என்பதால், இவ்வமைப்பை வலுப்படுத்த இவ்விரு நாடுகளுக்கிடையேயான சுமூகமானநல்லுறவு அடிப்படையாக அமைகிறது.

பரஸ்பர நல்லுறவையும் எல்லைப்புற ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் இரு நாடுகளும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதை உழைப்பாளி மக்களும் அமைதி விரும்பிகளும் முழுமையாகவரவேற்கின்றனர். பொருளாதார மற்றும் வர்த்தகஉறவுகளில் நல்லுறவையும் சமாதானத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இரு தரப்புத் தலைமைகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தைப் பாதையையே உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.