குழந்தைகளைப் பாதுகாப்பது எப்போது?
17 Jun 2026, 8:43 pm

குழந்தைகளைப் பாதுகாப்பது எப்போது?

தேசிய குற்ற ஆவண வாரியத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் இந்தியச் சமூகத்தின் மன சாட்சியை உலுக்கியுள்ளன. 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக 1,87,702 குற்றங்கள் பதிவாகியுள்ளன. ஒரு நாளை க்குச் சராசரியாக 512 குழந்தைகள் ஏதேனும் ஒரு வகையில் வன்முறைக்கு ஆளாகிறார்கள். இது பத்தாண் டுகளில் உச்சநிலை பதிவாகும் ஒட்டுமொத்த வழக்குகளில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளே 36.9 விழுக் காடாக உள்ளன.தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த பத்தாண்டுகளில் குழந்தைகளுக்கு எதி ரான குற்ற வழக்குகள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளன.

தமிழகக் காவல்துறை 94 விழுக்காடு வழக்கு களில் உடனடியாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தேசிய அளவில் முதலிடத்தில் இருப்பது பாராட்டுக்குரியது என்றாலும், கள நிலவரம் இன்னும் அச்சமூட்டுவதாகவே உள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர் போன்ற தொழில் நக ரங்களில் கடந்த பத்தாண்டுகளில் இக்குற்றங்கள் 5 மடங்குக்கும் மேல் (539%) அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொ டுமைகள் அதிகரிப்பதற்குப் பின்னால் பல சமூக, உளவியல் மற்றும் தொழில்நுட்பக் கார ணங்கள் பின்னிப் பிணைந்துள்ளன.போக்சோ வழக்குகளில் 97 விழுக்காடு குற்றவாளிகள் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான அண்டை வீட்டார், உறவினர்கள் அல்லது குடும்ப நண்பர் களாகவே இருக்கிறார்கள்.

ஸ்மார்ட்போன்களின் அசுர வளர்ச்சியும், இணையத்தில் தணிக்கையின்றிப் பரவும் ஆபா சக் காணொலிகளும், இணையவழிப் பாலி யல் குற்றங்களும் பிஞ்சு உள்ளங்களை வேட்டை யாடப் புதிய வழிகளை உருவாக்கியுள்ளன.உடற்கூறியல், “பாதுகாப்பான தொடுதல் - பாது காப்பற்ற தொடுதல்” போன்ற அடிப்படை விழிப்பு ணர்வு இன்னும் பெரும்பாலான குடும்பங்களி லும், பள்ளிகளிலும் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை.

ஒரு சமூகத்தின் நாகரிகம் என்பது, அச்சமூ கத்தில் குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்பதை வைத்தே மதிப்பிடப்படு கிறது. விழிப்புணர்வு அதிகரிப்பால் தான் வழக்கு கள் அதிகமாகப் பதியப்படுகின்றன என்ற வாதம், நிர்வாகத்தின் சுமையைக் குறைக்கலாமே தவிர, பாதிக்கப்பட்ட குழந்தையின் காயத்தை ஆற் றாது. தமிழக அரசு உடனடியாக இதில் தலை யிட்டு, குழந்தைகளின் பாதுகாப்பை ஒரு ‘சமூக அவசர நிலை’யாகப் பிரகடனப்படுத்த வேண்டும். சட்டத்தின் இரும்புக்கரமும், சமூ கத்தின் விழிப்புணர்வுப் பார்வையும் இணையும் போது மட்டுமே நமது எதிர்காலத் தலைமுறை யைக் காக்க முடியும். இல்லையெனில், குற்றப் புள்ளிவிவரங்கள் ஒவ்வோர் ஆண்டும் உயர்ந்து கொண்டே போகும், நமது மனிதநேயம் வீழ்ந்து கொண்டே இருக்கும்.