அதானிக்காக 9 முக்கிய கனிம சுரங்கங்களின் ஏலம் ரத்து?
5 Jul 2026, 8:53 pm

அதானிக்காக 9 முக்கிய கனிம சுரங்கங்களின் ஏலம் ரத்து?

இந்தியாவில் ஏழாவது சுற்று ஏலத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 9 முக்கிய கனிம சுரங்கங்களின் ஏலத்தை ஒன்றிய அரசு திடீரென ரத்து செய்துள்ளது. முத லீட்டாளர்களிடம் இருந்து போதிய வர வேற்பு இல்லாததாலும், தகுதிவாய்ந்த ஏலதாரர்கள் வராததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுரங்க அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“மத்தியப்பிரதேசத்தில் உள்ள டைட்டானியம், வெனடியம் சுரங்கம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள டங்ஸ்டன், லித்தியம் சுரங்கம் ஆகிய 2 முக்கிய சுரங்கங்களை ஏலம் எடுக்க ஒரு முதலீட்டாளர் கூட முன்வர வில்லை. அதே போல பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள கிளாகோனைட், வெனடியம் மற்றும் கிராபைட் உள்ளிட்ட 7 சுரங்கங்களுக்கு ஏலம் கேட்க வந்த தகுதியான நிறுவனங்களின் எண் ணிக்கை 3-க்கும் குறைவாக இருந்த தால், விதிகளின்படி அவை ரத்து செய் யப்பட்ட்டுள்ளது” என அதில் கூறப் பட்டுள்ளது.

அதானிக்காக ஏதேனும் திட்டமா?

மின்சார வாகனங்கள், பசுமை ஆற்றல் மற்றும் நவீன தொழில்நுட்ப உற்பத்திக்குத் தேவையான முக்கிய கனிமங்களை உள்நாட்டிலேயே தயா ரித்து, பிற நாடுகளின் மீதான இறக்கு மதிச் சார்பைக் குறைக்க ஒன்றிய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், கனிம சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது அரசின் இந்த முயற்சிக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்பட்டாலும், அதானிக்காக மோடி அரசு ஏதேனும் மறைமுக சதியை அரங்கேற்ற உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

அதாவது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டாததால் 9 முக்கிய கனிம சுரங்கங்களின் ஏலம் ரத்து செய்யப் பட்டுள்ளதாக மோடி அரசு விளக்கம் அளித்து, அதானியிடம் 9 கனிம சுரங்கங்க ளையும் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. 2 ஆண்டு களுக்கு முன்பு நிலக்கரி சுரங்கங்களின் ஏலம் கடைசி நேரத்தில் ரத்து செய் யப்பட்டு, ஏலம் விடப்படுவதாக இருந்த நிலக்கரி சுரங்கங்கள் அதானியிடம் தாரை வார்க்கப்பட்டது என்பது குறிப் பிடதக்கது.