ஞானேஷ் குமார் மீது ‘மக்கள் மன்ற விசாரணை’
28 Oct 2026, 8:59 pm

ஞானேஷ் குமார் மீது ‘மக்கள் மன்ற விசாரணை’

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான மக்கள் மன்ற விசாரணை நிகழ்வானது அக்.30 அன்று காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் நடைபெறும் என இந்தியா அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.அசோக் ஹோட்டல் மற்றும் ராம்லீலா மைதானத்தில் இந்த நிகழ்வை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இந்தியா அணிசார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசுக்கு சொந்தமான அசோக் ஹோட்டல் இந்த நிகழ்வை நடத்த முதலில் அனுமதி கொடுக்கப்பட்டாலும், பின்னர் காவல்துறை தலையீட்டின் காரணமாக அந்த அனுமதி திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது தில்லி காவல்துறையின் தனிப்பட்ட முடிவு அல்ல. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் முடிவு ,அவர்கள் தங்களின் செல்லப் பிள்ளையான ஞானேஷ் குமாரைப் பாதுகாக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நவம்பர் 1-ம் தேதி ராம்லீலா மைதானத்தில் எதிர்கட்சிகள் நடத்தவுள்ள பேரணிக்கு முன்னதாக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தகம் (SIR) மற்றும் தேர்தல் முறைகேடுகள் புகார்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகளும் நடத்தி வரும் தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாகவே இந்த ‘மக்கள் குற்றச்சாட்டு’நிகழ்வும், நவம்பர் 1 பேரணியும் திட்டமிடப்பட்டுள்ளன.