தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி மேலும் 17% அதிகரிப்பு ரூ.57,400 கோடியை தாண்டும் என ஒன்றிய மோடி அரசு பெருமிதம்

20 Aug 2026, 9:26 pm
இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி மேலும் 17% அதிகரிப்பு ரூ.57,400 கோடியை தாண்டும் என ஒன்றிய மோடி அரசு பெருமிதம்

இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி மேலும் 17% அதிகரிப்பு ரூ.57,400 கோடியை தாண்டும் என ஒன்றிய மோடி அரசு பெருமிதம்

புதுதில்லி2014ஆம் ஆண்டு மோடி பிரதமர்ஆன பின்பு, நாட்டில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இந்துத்துவா குண்டர்களின் தாக்குதல் தீவிரமடைந்து வருகின்றது. குறிப்பாக இந்த தாக்குதல் பாஜக ஆளும்மாநிலங்களில் மிகமோசமான அளவில் அதிகரித்து வருகிறது. மாட்டிறைச்சிதான் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் முக்கிய அரசியல் ஆதாயபொருளாக மாறியுள்ளது. பசுப் பாதுகாப்பு குண்டர்களின் அட்டூழியத்தால் பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம், தலித் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் கடும் இன்னலுக்குஆளாகி வருகின்றனர்.

பாஜகவின் வெளிப்படையான இந்த பசுப் பாதுகாப்பு அரசியல் போலியானது என்பதுநாடறிந்த விசயம் என்றாலும், நாட்டின் மாட்டிறைச்சி ஏற்றுமதி இதுவரை இல்லாத வகையில் ரூ.50,000 கோடியை தாண்டும் அளவிற்கு அதிகரித்து வருவது அம்பலமாகியுள்ளது.

2 மில்லியன் டன்2025–26ஆம் ஆண்டில், இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதியின் மதிப்பு 5.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (சுமார் ரூ.48,806கோடி) இருந்தது. இது முந்தைய நிதியாண்டை விட 25.6% அதிகரிப்பைக் குறிக்கிறது.

இத்தகைய சூழலில், 2026–27ஆம் ஆண்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி 6 பில்லியன் டாலர்களாக (சுமார் ரூ.57,400 கோடி) அதிகரிக்கக் கூடும்என்று ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான ஒன்றிய வர்த்தக அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு ஏற்றுமதி மதிப்புடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஏற்றுமதி செய்யப்படும் மாட்டிறைச்சியின்அளவும் ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியா 2024–25இல் சுமார் 1.25 மில்லியன் டன்னும்,2025–26இல் 1.42 மில்லியன் டன் மாட்டிறைச்சியையும் ஏற்றுமதி செய்துள்ளது. இது சுமார் 13% வளர்ச்சியாகும். 2026-2027இல் 2 மில்லியன் டன்னை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.30 கோடி நன்கொடைநாட்டில் மிகப்பெரிய இறைச்சி (மாடு, எருமை) ஏற்றுமதி நிறுவனமான அல்லானா குழுமம் தான்மாட்டிறைச்சியை அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. எருமை இறைச்சியிலும் அல்லானா குழுமமே முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் 2024–25ஆம் ஆண்டில் பாஜகவுக்கு ரூ.30 கோடிநன்கொடை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(குறிப்பு : இந்த தரவு மாட்டிறைச்சிக்கு மட்டுமே. எருமை இறைச்சி பற்றி குறிப்பிடவில்லை)

பாஜகவின் நன்கொடை விஷயம் கசிந்ததால் தரவு மாற்றமா?

ஒன்றிய வர்த்தக அமைச்சகம் மதிப்பீடு, முதலில் மாட்டிறைச்சி (BEEF) என்றுதான் இருந்தது. இந்த தரவு வெளியான பின்பு அல்லானா குழுமம் பாஜகவிற்கு அளித்த நன்கொடை (ரூ.30 கோடி) விபரம் வெளியானது. உடனே தரவுகள் மாட்டிறைச்சி, எருமைஇறைச்சி என்று மாறியது. அதாவது 2026-2027ஆம் ஆண்டில் அல்லானா குழுமம் 1.25 மில்லியன் டன்னுக்கு மேலாகஎருமை இறைச்சியை ஏற்றுமதி செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அப்படியென்றால் மாட்டிறைச்சி தொடர்பான தரவுகள் எப்போது வெளியாகும்? நாட்டில் எருமை இறைச்சி மட்டுமே ஏற்றுமதிசெய்கிறது என்றால், அல்லானா குழுமம் எங்கிருந்து மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறது? இந்தியா மட்டுமின்றிஉலகின் முன்னணி ஏற்றுமதி நிறுவனமாக உள்ள அல்லானா குழுமம் தனது மாட்டிறைச்சி ஏற்றுமதி பிரிவைகைவிட்டதா? என்ற கேள்விகள் கிளம்பியுள்ளன.

நாட்டில் எருமை எண்ணிக்கை குறைவுதான்

தற்போதைய சூழ்நிலையில், மாட்டிறைச்சியை விட எருமை இறைச்சிதான் அதிகளவில் ஏற்றுமதி நடக்கிறது என்று கூறும் வகையில் ஒன்றிய வர்த்தக அமைச்சகம் ஒரு மதிப்பீட்டை வெளியிட்டு, அதனை ‘கோடி மீடியா’மூலம்அல்லானா குழுமம் பாஜகவிற்கு அளித்த நன்கொடை மற்றும் நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி இல்லை என்றபிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. ஆனாலும் இந்தபிரச்சாரம் தோல்வியில்தான் நிறைவடையும்.

இந்தியாவில் சுமார் 19.34 கோடி பசுக்கள்மற்றும் காளைகள் உள்ளன. இதில் பசுக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 14.59 கோடியாகும். எருமைகளின் எண்ணிக்கை சுமார் 10.98 கோடி மட்டுமேஉள்ள சூழலில்,125 மில்லியன் கணக்கான டன் எருமைஇறைச்சி எப்படி ஏற்றுமதி செய்ய முடியும்?என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.