ஆரோக்கியத்தை பாதிக்கும் 16 கூட்டு மருந்துகளுக்குத் தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவு!
20 Jun 2026, 3:44 pm

அமாக்ஸ்லின், பாராசிட்டமால் ஆகியவை கலந்த 16 கூட்டு(Fixed-dose combination) மருந்துகளுக்கு தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் (DTAB) அமைத்த நிபுணர் குழு பல்வேறு மருந்து சேர்க்கைகளை ஆய்வு செய்தது. இதில் சில மருந்துகள் சிகிச்சை ஏற்றவையல்ல என்றும் நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றும் கண்டறியப்பட்டது.

அதன்படி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் அமாக்ஸ்லின் கலந்த சில ஆண்டிபயாட்டிக் மருந்துகள், பாராசிட்டமால் கலந்த சில வலி நிவாரணிகள் மற்றும் கற்றாழை, வைட்டமின்- E கலந்த சரும மற்றும் முடி சம்பந்தமான 16 கூட்டு(Fixed-dose combination) மருந்துகளுக்கு ஒன்றிய சுகாதரத்துறை அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

1940-ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 26A-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட மருந்துகள் பின்வருமாறு:

1. Acetyl Salicylic Acid + Ethoheptazine

2. Aloe Extract + Allantoin + Alpha Tocopherol Acetate + D-Panthenol + Vitamin A

3. Aloe Extract + Vitamin E + Dimethicone + Glycerine

4. Aloe Vera + Jojoba Oil + Vitamin E

5. Aloe Vera + Orange Oil

6. Aloe Vera + Jojoba Oil + Wheat Germ Oil + Tea Tree Oil

7. Aloe Vera + Vitamin E + Herbal Preparation

8. Dicyclomine + Paracetamol + Clidinium Bromide

9. Dicyclomine + Paracetamol + Clidinium Bromide + Chlordiazepoxide

10. Gliclazide + Chromium Picolinate

11. Paracetamol + Lignocaine

12. Amoxicillin + Serratiopeptidase + Lactobacillus Sporogenes

13. Amoxicillin + Cloxacillin + Lactic Acid Bacillus + Serratiopeptidase

14. Amoxicillin + Serratiopeptidase

15. Cefadroxyl + Probenecid

16. Cefuroxime + Serratiopeptidase