தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘இந்தியா’ அணி சார்பில் வாக்குத் திருட்டைக் கண்டித்து திரிபுராவில் மாபெரும் பேரணி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு; மக்கள் கடலில் அகர்தலா வீதிகள்

31 Oct 2026, 8:56 pm
‘இந்தியா’ அணி சார்பில் வாக்குத் திருட்டைக் கண்டித்து திரிபுராவில் மாபெரும் பேரணி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு; மக்கள் கடலில் அகர்தலா வீதிகள்

‘இந்தியா’ அணி சார்பில் வாக்குத் திருட்டைக் கண்டித்து திரிபுராவில் மாபெரும் பேரணி

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு; மக்கள் கடலில் அகர்தலா வீதிகள்

அகர்தலாவாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த(எஸ்ஐஆர்) நடவடிக்கையை ரத்து செய்யக் கோரியும், வாக்குத் திருட்டைக் கண்டித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்யக் கோரியும் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் வெள்ளிக்கிழமை ‘இந்தியா’ அணி சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

அகர்தலா ஓரியண்ட் சௌமுஹானியில் இருந்து ஜேக்சன் கேட், கமன் சௌமுஹானி, சூர்யா சௌமுஹானி, தபால் நிலைய சௌமுஹானி, பாரடைஸ் சௌமுஹானி, மேலர்மத்,பட்டாலா மற்றும் ஜெயநகர் பேருந்து நிலையம் வழியாக ஆபீஸ் லேனில் உள்ள மாநிலமுதன்மைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை நோக்கி ‘இந்தியா’ அணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள்,காங்கிரஸ், திரிபுரா மக்கள்கட்சி மற்றும் கணமஞ்ச் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் எனபல்லாயிரக்கணக்கானோர் தேசியக் கொடியுடன் நெரிசல் ஏற்படும் அளவிற்கு பேரணியாகச் சென்றனர்.

அதிர்ந்த அகர்தலா

பேரணியின் போது “அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் வாக்குரிமையைப் பாதுகாப்போம்”, “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமாசெய்ய வேண்டும்”, “எஸ்ஐஆர் நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்”, “இறந்தவர்களைத் தவிர, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களின்பெயர்களையும் மீண்டும் சேர்க்க வேண்டும்” உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த முழக்கங்களால்அகர்தலா வீதிகள் அதிர்ந்தன.

ஞானேஷ் குமாரை பாதுகாக்க பாஜக முயற்சி

தொடர்ந்து, தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜிதேந்திர சௌத்ரி,”மோடி அரசுநாட்டின் பொதுச்சொத்துகளை அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்து வருகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற சுதந்திரமான அமைப்புகளைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து மிக மோசமான அளவில் அராஜக வேலையில் ஈடுபட்டு வருகிறது. மோடி அரசின் மக்கள்விரோத மற்றும் சர்வாதிகாரக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் வேளையில், ஆளுங்கட்சியினர் சுதந்திரமான, நியாயமானமற்றும் அமைதியான தேர்தலுக்குத் தேவையான சூழலைச் சீர்குலைத்து வருகின்றனர். அதனால் அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் வாக்குரிமையைப் பாதுகாக்க அனைத்து தேசபக்தர்களும் ஒன்றிணைய வேண்டும். அதேபோல தற்போது நாடு, அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க நாங்கள் வீதிக்கு வந்துள்ளோம். ஆனால் அவர்கள்(பாஜகவினர்) தங்களது ஆட்சியைக் காப்பாற்றவும், மாநிலத்திற்குப் பின் மாநிலமாக ஆட்சியைக் கைப்பற்றஉதவிய நபரைப் (ஞானேஷ் குமார்) பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள்” என கடுமையாக விமர்சித்தார்.

13.40 கோடி வாக்காளர்கள் நீக்கம்

தொடர்ந்து சிபிஎம் மூத்த தலைவரும், திரிபுராவின் முன்னாள் முதலமைச்சருமான மாணிக் சர்க்கார் பேசுகையில்,”ஞானேஷ் குமார்என்பது ஒரு பெரிய அரசியல் சதித்திட்டத்தின் வெளித்தோற்றம் மட்டுமே. இதன் உண்மையான பின்னணி பிரதமர் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சரிடமே உள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களால் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதே சமயம் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் இணக்கமாகச் செயல்படுகிறார். ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலகியே ஆக வேண்டும். எஸ்ஐஆர் மூலம் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க முயல்வது முழு தேர்தல் முறையையும் ஒரு கேலிக்கூத்தாக மாற்றிவிட்டது. இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்படுகின்றன. நாடு முழுவதும் இதுவரை சுமார் 13.40 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.அதனால் எஸ்ஐஆர் நடவடிக்கை திரும்பப் பெறப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும். அதே போலவாக்குரிமையைப் பாதுகாப்பதற்கான இந்தப்போராட்டம், நாட்டையும் அதன் அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான பரந்த போராட்டத்திலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாதது. குறிப்பாகதிரிபுராவில் நடக்கும் கேலிக்கூத்தான தேர்தல்களுக்கு எதிரான போராட்டம் இப்போது ஜனநாயகத்தைப்பாதுகாப்பதற்கான நாடு தழுவிய இயக்கத்தின்ஒரு பகுதியாக மாறியுள்ளது. ஆனால் ஆளுங்கட்சி இந்த இயக்கத்தை அடக்க முயல்கிறது. அவர்களின் கை ஓங்காது. போராடும் மக்களே வரலாற்றைஎழுதுவார்கள்” என அவர்கூறினார்.

உச்சநீதிமன்றத்திலும் பொய்

சிபிஐ மாநிலச் செயலாளர் மிலன் வைத்யா பேசுகையில்,”தேர்தல் ஆணைய நியமனம் தொடர்பான சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும். மக்களின்போராட்டக் குரல்களை ஒடுக்க பாஜக முயல்கிறது. இதனால் வீதிகளில் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும்” என அவர் கூறினார்.ஆர்எஸ்பி தலைவர் ஜோய் கோபிந்தா தேப்ராய்,”தற்போதைய அராஜகச் சூழல் தொடர முடியாது. ஞானேஷ் குமாரை நீக்கப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பார்வர்டு பிளாக் தலைவர் ரகுநாத் சர்க்கார்,“ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் சக்திகளுக்குஎதிராக மக்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்றிணைய வேண்டும்” என வலியுறுத்தினார்.

சிபிஐ(எம்எல்) விடுதலை மாநிலச் செயலாளர் பார்த்தா கர்மாகர்,“ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கூட தேர்தல் ஆணையம் பொய் தகவல்களைச் சமர்ப்பித்துள்ளது. இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்” என அவர் கூறினார்.

ஜனநாயகச் சக்திகளும் விழிப்புடன் இருக்க வேண்டும்

காங்கிரஸ் மூத்த தலைவர் சுதீப் ராய்பர்மன், “தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற சுதந்திரமான அமைப்புகளில் பாஜக தனது சொந்த நபர்களை நியமித்துமக்களைஅச்சுறுத்தி வருகிறது. தங்களது வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சி

களை எதிர்க்க மக்கள் அதிகளவில் முன்வந்துகொண்டிருக்கிறார்கள். அனைத்து ஜனநாயகச் சக்திகளும் விழிப்புடன் இருக்க வேண்டும்”என கேட்டுக்கொண்டார். இறுதியாக திரிபுராகாங்கிரஸ் தலைவர் ஆசிஷ் சாஹா,“ஜனநாயகத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. போராட்டம் தொடரும்” என்று உறுதியளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.