தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராம்லீலா மைதானத்தில் எழுந்த ஜனநாயகப் பேரலை “வாக்கைக் காப்போம், தேசத்தைக் காப்போம்” - ஞானேஷ் குமார் வெளியேறும் வரை ஓயமாட்டோம் என இந்தியா அணி முழக்கம்

1 Nov 2026, 9:50 pm
ராம்லீலா மைதானத்தில் எழுந்த ஜனநாயகப் பேரலை “வாக்கைக் காப்போம், தேசத்தைக் காப்போம்”  -  ஞானேஷ் குமார் வெளியேறும் வரை ஓயமாட்டோம் என இந்தியா அணி முழக்கம்

ராம்லீலா மைதானத்தில் எழுந்த ஜனநாயகப் பேரலை “வாக்கைக் காப்போம், தேசத்தைக் காப்போம்” - ஞானேஷ் குமார் வெளியேறும் வரை ஓயமாட்டோம் என இந்தியா அணி முழக்கம்

புதுதில்லி, நவ. 1 —தலைநகரின் இதயம் (ஞாயிறன்று) ஒரே குரலில் துடித்தது.விடியல் வெளிச்சம் பரவும் முன்பே, அதிகாலை 5.30 மணிக்கே ராம்லீலா மைதானத்தின் வாயில்களை நோக்கி மக்கள் வரத் தொடங்கியதாக தில்லி காவல்துறையே தெரிவித்தது. நண்பகலுக்குள் அந்தப்பரந்த மைதானம் மனிதக் கடலாக மாறியது. கைகளில் மூவண்ணக் கொடி; தோள்களில் பல வண்ணக் கட்சிக்கொடிகள்; முழக்கங்களில் ஒரே கேள்வி — “எங்கள் வாக்கு எங்கே?”சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் நாடு முழுவதும்13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலி லிருந்து அழிக்கப்பட்டதைக் கண்டித்தும், அந்த நடவடிக்கை யை முற்றாக ரத்து செய்ய வேண்டும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் இந்தியா அணி நடத்திய ‘சலோ தில்லி’ — ‘வோட் பச்சாவ், தேஷ் பச்சாவ்’ (வாக்கைக் காப்போம், தேசத்தைக் காப்போம்) மாபெரும் பேரணி இது. மாதக்கணக்கில் நாடெங்கும் நடந்து வரும் போராட்டத்தின் உச்சக் கட்டமாக, அணியின் ஒட்டுமொத்தத்தலைமையும் ஒரே மேடையில் அணிவகுத்து நின்றது.

மக்கள் நாடாளுமன்றமும் மக்கள் மன்றமும்

ராம்லீலா மைதானப் பேரணிக்கு முன்னோட்டமாக, சனிக்கிழமை (அக். 31) இந்தியா அணிநடத்திய “மக்கள் மாதிரி நாடாளுமன்றம்”, பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. ராம்லீலா மைதானத்திலும் அசோகா ஓட்டலிலும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் இல்லப் புல்வெளியே “நாடாளுமன்றமாக” மாற்றப்பட்டது. முன்னாள் மக்களவைத் தலைவர்மீரா குமார் தலைமை தாங்க, கார்கே முன்மொழிந்த தீர்மானம் ஞானேஷ் குமார் மீது ஆறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நிறைவேற்றப்பட்டது. 18 கட்சிகளின்உறுப்பினர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் என 37 பேர் அதில் பேசினர். அம்பேத்கரை மேற்கோள் காட்டி, வாக்குரிமையே பல நூற்றாண்டு ஒதுக்கலை உடைக்கும் அரசியல் கல்வி என்று சிபிஐ(எம்) மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் அங்கு முழங்கினார்.193 எம்.பி.க்கள் கையெழுத் திட்டு இரு அவைகளிலும் அளித்த பதவி நீக்கத் தீர்மான அறிவிப்பு கடந்த ஏப்ரலில் நிராகரிக்கப்பட்டது. நாடாளுமன்றக் கதவுகள் மூடப்பட்டபோது, “மக்கள் நாடாளுமன்றம்” திறக்கப்பட்டது.சனிக்கிழமை புல்வெளியில் வாசிக்கப்பட்ட தீர்ப்பு, ஞாயிறன்று லட்சக் கணக்கான குரல்களால் ராம்லீலா மைதானத்தில் உறுதிப்படுத்தப் பட்டது.

மிண்டோ சாலையிலிருந்து ராம்லீலா வரை

ஞாயிறு காலையில் கார்கேயின் இல்லத்தில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, சிபிஐ(எம்எல்) லிபரேஷன் பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா உள்ளிட்ட தலைவர்கள் கூடினர். அங்கிருந்து திறந்த பேருந்தில் மிண்டோ சாலை – கன்னாட் பிளேஸ் சந்திப்புக்கு வந்து, நண்பகல்அளவில் பேரணியைத் தொடங்கினர்.

பிரியங்கா காந்தி, அபிஷேக் பானர்ஜி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, தேசிய மாநாட்டுக் கட்சியின் பரூக் அப்துல்லா, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, தேசிய வாத காங்கிரஸ் (சரத்) தலைவர் சுப்ரியா சுலே, கே.சி.வேணுகோபால் எனஅணியின் முகங்கள் அனைத்தும்அந்த ஊர்தியில். ஊர்தியைச்சூழ்ந்து, அதன் வேகத்துக்கு இணையாக மக்கள் நடந்தனர்.

பேரணியைத் தடுக்கும் காவல்துறையின் முயற்சி களுக்குக் குறைவில்லை. சுமார் 10,000 காவலர்களும் துணை ராணுவப் படையினரும் மத்திய தில்லியில் குவிக்கப்பட்டனர்; ராம்லீலா மைதானம் 14 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு200-க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களும் ட்ரோன் களும் பொருத்தப்பட்டன. மாநில எல்லைகளில் பேருந்துகள்மறிக்கப்படுவதாகவும், ரயில் பயணிகள் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் சமாஜ்வாதி எம்.பி. ராஜீவ் ராய் குற்றம் சாட்டினார். கன்னாட் பிளேஸ் கடைகளை பாஜக வலுக்கட்டாயமாக மூடச் செய்தது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆனால் மக்களைத் தடுக்க முடியவில்லை. பேரணிக்கு வருவோரை ஆட்டோ ஓட்டுநர்கள் இலவசமாக ஏற்றிச் சென்று தங்கள் ஒருமைப்பாட்டைக் காட்டினர். சுமார் 50,000 பேர்வருவார்கள் என காவல்துறை மதிப்பிட, 10 லட்சம் பேர் வரை திரள்வர் எனத் தலைவர்கள்.

அறிவித்திருந்தனர்.செங்கொடிகளின் அணிவகுப்பு

இந்த மக்கள் கடலில் செங்கொடிகள் தனித்துவமாக அலைமோதின. இந்திய மாணவர்சங்கத் தலைவர்களும் உறுப்பினர்களும் காலையிலேயே ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனில் திரண்டு, அங்கிருந்து ராம்லீலா மைதானம் வரைபேரணியாக அணிவகுத்துச் சென்றனர். “சலோ ராம்லீலா மைதான்! சுர்ஜித்பவனிலிருந்து புறப்பட்ட அணிவகுப்பு மைதானத்தை அடைந் தது” என்று சிபிஐ(எம்) தனது சமூக ஊடகப் பக்கத்தில் அறிவித்தது.

உண்மையில், எஸ்ஐஆர்-க்கு எதிரான கூட்டு நடவடிக்கையின் விதை சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபியின் முன்முயற்சியில் விதைக்கப்பட்டது. எஸ்ஐஆர் குறித்துக் கூட்டாக விவாதிக்க வேண்டும் என இந்தியா அணிக் கட்சிகளுக்கும் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கும் அவர் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்தே அந்தக்கூட்டம் நடைபெற்றது. நவம்பர் 1 பேரணி, இந்தியா அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று அக்டோபர் 18 அன்றே அவர்தெரிவித்திருந்தார். 13 கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையைப் பறிப்பது தேர்தல் நடைமுறையையே முற்றாகச் சீர்குலைக்கும்செயல்என்றும், இதற்கு எதிராக மிகப் பெரிய மக்கள் எதிர்ப்பு எழ வேண்டும் என்றும், ஞானேஷ் குமார் அந்தச்சீர்குலைவின் ஒரு கருவி மட்டுமே என்றும் அவர் கூறியிருந்தார். ஞாயிறன்று பேபதிறந்த ஊர்தியில் அணியின் முன்வரிசையில் நின்றார்.

எம்.ஏ.பேபி முழக்கம்

ராம்லீலா பொதுக் கூட்டத்தில்உரையாற்றிய எம்.ஏ.பேபி, எதிரேவிரிந்து கிடந்த மக்கள் திரளைச் சுட்டி, “இங்கே ஒரு மனிதக் கடல்திரண்டிருக்கிறது. அந்தக் கடல் ஒரே குரலில் சொல்கிறது: ஆட்சியாளர்களின் ஏவலாளாகச் செயல்படும் ஞானேஷ் குமாரே, உங்கள் பாசிச உத்திகள் இந்தியாவில் எடுபடாது” என்றுதொடங்கியபோது மைதானம் அதிர்ந்தது.

அந்த மைதானத்தின் வரலாற்றை அவர் நினைவூட்டினார். விடுதலைப் போராட்டக் காலத்தில் மகாத்மா காந்தி இங்கு மக்களிடம் பேசினார்; நேரு, அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் போன்றோர் இங்குமக்கள் முன் நின்றனர்; மாவீரன் பகத்சிங்கிடம் உத்வேகம் பெற்ற இளைஞர்கள் இங்கிருந்து போராடினர். “இதுஇரண்டாவது விடுதலைப் போராட்டம் என்று சொன்னார்கள். உண்மைதான். பாசிச ஆர்எஸ்எஸ்ஸின் பிடியிலிருந்து நமது தேசத்தை விடுவிக்கும் இரண்டாவது விடுதலைபோராட்டப் பாதையில் நாம் ஒன்றுபட்டு முன்னேறுவோம்” என்றார்.

“நமது முதல் முழக்கம்: வாக்குத் திருடன் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்; அவர் மீது வழக்குத் தொடரப்பட

வேண்டும்” என்று பேபி முழங்கினார். விடுதலைப் போராட்டத்தில் காந்தி உண்மையின் அடிப்படையில் போராட்டப் பாதையைத் தொடங்கினார்; இன்று நரேந்திர மோடியோ “பொய்களின் மகாராஜா”வாக இருக்கிறார் என்றும் சாடினார். “எதிர்க்கட்சிகள் வென்றால் பெண்களின்தாலியைப் பறித்துச் செல்வார்கள் என்று கடந்த தேர்தலில் மோடி சொன்னது பொய்; மீண்டும்ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்என்றார் மோடி — விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வில்லை, அவர்களின் தற்கொலைகள்தான் இரட்டிப்பாகி யுள்ளன” என்று அவர் சுட்டிக்காட்டியபோது கூட்டம் ஆர்ப்ப ரித்தது.

வாக்குத் திருட்டை முடிவுக்குக் கொண்டுவரவும், ஜனநாயக அரசமைப்புச் சட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், அதை மனுவாதச் சட்டமாக மாற்றும் முயற்சியைமுறியடிக்கவும் இந்தப் போராட்டத்தில் ஒன்றுபட்டு முன்னேற வேண்டும் என்றார் பேபி. “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் செங்கொடியும் இந்தப் போராட்டத்தின் முன்னணியில் நிற்கும்” என்று உறுதியளித்து, “லால் சலாம்! இன்குலாப் ஜிந்தாபாத்!”என்ற முழக்கத்துடன் அவர் உரையை நிறைவு செய்தபோது, மைதானமெங்கும் செங்கொடிகள் உயர்ந்தன.

இந்தப் பேரணி இந்தியாவின்எல்லைகளைத் தாண்டியும் ஒருசெய்தியைக் கொண்டு செல்லும்என்று சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார். தேர்தல் ஆணையம் ஆட்சியாளர்களின் நீட்டிக்கப்பட்ட கரமாகச் செயல்படுகிறது என்று சிபிஐ தலைவர் பினோய் விஸ்வம் சாடினார். சிபிஐ(எம்எல்) லிபரேஷன் பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யாவும் அணியின் முன்வரிசையில் இருந்தார். ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட மாட்டார், சிறையில்அடைக்கப்படுவார் என்று நேற்றைய “மாதிரி நாடாளு மன்றத்தில்” அகில இந்திய மாணவர் கழகத் (ஐசா) தலைவர் நேஹா போரா முழங்கியிருந் தார்.

மைதானத்தில் முழங்கிய குரல்கள்

மேடையில் ராகுல் காந்தி கையில் ஒரு கிளியுடன் தோன்றியபோது மைதானம் ஆர்ப்பரித்தது. “கதையில் அரசனின் உயிர் கிளிக்குள் இருந்தது; மோடியின் உயிர் ஞானேஷகுமாருக்குள் இருக்கிறது” என்று அவர் குத்திக் காட்டினார். ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை இந்தப்போராட்டம் தொடரும் என்றும், அவரை நீக்கினால் முப்பது வினாடிகளில் போராட்டம் நின்றுவிடும் என்றும் அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். பேரணிக்கு வருவோர்தில்லியின் சிறு வியாபாரிகளிடம் பொருள் வாங்கி அவர்களை ஆதரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்தார்.ஜனநாயகத்தை நசுக்க முயல்வோர் ஒருபோதும் நிலைத்ததில்லை; அவர்கள் கோழைகள்; தேசத்தையும் ஜனநாயகத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் காக்கவே நாம்அனைவரும் ஒன்றுபட்டுள் ளோம் என்று தேஜஸ்வி முழங்கினார். உத்தரப் பிரதேச முதல்வரே 1.27 கோடி வாக்குகள் குறைந்துவிட்டதை ஒப்புக்கொண்டிருப்ப தைச் சுட்டிக்காட்டிய அகிலேஷ்,“இரட்டை எஞ்சின் அரசு” என்றுபேசியவர்கள் இப்போது “இரட்டைப் பூஜ்யமாகி”விட்டனர் என்று கேலி செய்தார்.மின்னணு வாக்கு இயந்திரங்கள், வாக்காளர் தரவு, வாக்காளர் பட்டியல், வாக்கு எண்ணிக்கை என அனைத்தும் சந்தேகத்தின் நிழலில் இருப்பதாகவும், வாக்கே அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது மௌனம் ஒரு தேர்வாக இருக்கமுடியாது என்றும் மம்தா பானர்ஜி பேசினார். மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர் கள், சிவில் சமூகம் அனைவரும் இந்தப் போரில் இணைய வேண்டும் என்றார்.

நீக்கப்பட்ட பெயர்களின் நீண்ட துணி

ராம்லீலா பேரணியின் மிகநெகிழ்ச்சியான காட்சி கர்நாடகத்திலிருந்து வந்தது. வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட மனிதர்களின்பெயர்கள் எழுதப்பட்ட பல மீட்டர்நீளமுள்ள துணிப் பதாகையை அவர்கள் ஏந்தி வந்தனர். “வோட் சோர், கத்தி சோட்” (வாக்குத்திருடனே, பதவியை விட்டு இறங்கு), “வோட் பச்சாவ், தேஷ் பச்சாவ்” முழக்கங்கள் மைதானமெங்கும் எதிரொலித்தன. மூவண்ணத் துணியால் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட கூடாரத்தின் கீழ் மூத்த தலைவர்களுக்கான பிரதான மேடை யும், மாநிலப் பிரதிநிதிகளுக்கு இரண்டாவது மேடையும் அமைக்கப்பட்டிருந்தன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.