தீக்கதிர் முக்கிய செய்திகள்
1 Nov 2026, 9:27 pm

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

இந்தியாவில் மத்தியில் உள்ள பாஜக அரசு உட்பட, அக்கட்சி ஆட்சி செய்யும் பல மாநில அரசுகள் “திருடப்பட்ட” மக்கள் ஆணையைக் கொண்டே அமைக்கப்பட்டவை ஆகும். இதனால், நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றுவது மிக அவசியம். மோடியும்-ஷாவும் தலித்துகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குரிமையைப் பறித்துள்ளனர்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

பாஜக தனது சொந்தக் கட்சியின் உறுப்பினர்களை மட்டுமே இந்தியாவில் வாக்காளர்களாகவும் குடிமக்களாகவும் வைத்திருக்க விரும்புகின்றனர். ஆனால் இந்தியா அணியின் போராட்ட குரலுக்குப் பிறகே பாஜகவினர் தங்களது வாக்குகளும் நீக்கப்படுவதைப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்த போராட்டம் இனிமேல்தான் நாடுமுழுவதும் தீவிரமடையும்.

திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி

நாட்டின் பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் தோற்கவில்லை, திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டுள்ளன. இதை இந்தியா அணி ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ளும். பாஜக இளைஞர்களின் வேலைகளையும், மனித உயிர்களையும், பெண்களின் மரியாதையையும் கொள்ளையடித்து விட்டது. தற்போது தேர்தலையே கடத்திவிட்டது.

பத்திரிகையாளர் கிருஷ்ணகாந்த்

தில்லி ராம் லீலா பேரணியில் யாருமே கலந்துகொள்ளவில்லை; பேரணி பெரும் தோல்வி அடைந்தது என்றுதான் பாஜக ஆதரவு ‘கோடி மீடியா’ ஊடகங்கள் மக்களிடம் சொல்லும். உண்மையில் கோடி மீடியாவும் வாக்குத் திருட்டில் ஈடுபடும் கும்பலின் ஒரு பகுதியே ஆகும்.