தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்.ஐ.ஆர். முறைகேடு ; ஞானேஷ் குமார் ராஜினாமா கோரி தெலுங்கானா, ஒடிசா, பீகார், ஜம்மு-காஷ்மீரில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் பேரணி, போராட்டம்

8 Oct 2026, 11:59 pm
எஸ்.ஐ.ஆர். முறைகேடு ; ஞானேஷ் குமார் ராஜினாமா கோரி தெலுங்கானா, ஒடிசா, பீகார், ஜம்மு-காஷ்மீரில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் பேரணி, போராட்டம்

எஸ்.ஐ.ஆர். முறைகேடு ; ஞானேஷ் குமார் ராஜினாமா கோரி தெலுங்கானா, ஒடிசா, பீகார், ஜம்மு-காஷ்மீரில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் பேரணி, போராட்டம்

முழு அடைப்புப் போராட்டத்தால் புவனேஸ்வரத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு புதுதில்லிஎஸ்.ஐ.ஆர். முறைகேடு மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக் கோரிதெலுங்கானா, ஒடிசா, பீகார், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள்வியாழனன்று பேரணி மற்றும் போராட்டங்களை நடத்தின.

ஒடிசாவில் முழு அடைப்பு

பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். முறைகேடு, புதிய சுரங்கச் சட்டம், பள்ளிப் பாடப்புத்தகங்களில் வரலாற்றைத் திருத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் காரணமாக வியாழக்கிழமை ஒடிசாவின் பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வணிக நிறு

வனங்கள், பெட்ரோல் பங்குகள்,கடைகள் மற்றும் பல கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் போன்ற பொதுப் போக்குவரத்துகள் இயக்கப்படவில்லை. குறிப்பாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரம், கட்டாக், பர்கர்க், பத்ரக், பாலசோர், ராயகடா, கேந்திரபாரா, போலங்கிர், பெர்ஹாம்பூர் மற்றும் சம்பல்பூர் ஆகியபல்வேறு இடங்களில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், சாலைகளையும் தேசிய நெடுஞ்சாலைகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முழு அடைப்புப் போராட்டத்தால் புவனேஸ்வரத்தில் இயல்பு வாழ்க்கைகடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தெலுங்கானா

காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகப் பேரணி நடைபெற்றது. ஹைதராபாத்தின் நெக்லஸ் சாலையில் அமைந்துள்ள இந்திரா காந்தி சிலையில்தொடங்கிய இந்தப் பேரணி லோக் பவன் வரை நடைபெற்றது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, தெலுங்கானா ஜன சமிதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்தப் பேரணியில் பங்கேற்றன.அதேபோல பொன்னம் பிரபாகர், டி. ஸ்ரீதர் பாபு மற்றும்ஜூபல்லி கிருஷ்ணா ராவ் உள்ளிட்ட தெலுங்கானா அமைச்சர்களும் எஸ்.ஐ.ஆர். முறைகேடு மற்றும் ஞானேஷ் குமார் ராஜினாமா உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பிப் பேரணியில் பங்கேற்றனர்.

பீகார்

பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும்பீகாரில் வியாழனன்று ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும், மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தலைமையில் எஸ்.ஐ.ஆர். முறைகேடு மற்றும் ஞானேஷ் குமார்ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பேரணி நடைபெற்றது. பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ராஜ்பவனை நோக்கி நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட ‘இந்தியா’கூட்டணிக் கட்சிகள் ‘வாக்குத் திருடன்’, ‘ஞானேஷ் குமாரே பதவி விலகு’உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

நாக்பூர்

பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரான நாக்பூரில் தேசியவாத காங்கிரஸ் (சரத்) கட்சித் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் இந்தஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஐ.ஆர். முறைகேடு மற்றும் ஞானேஷ் குமார் ராஜினாமா கோரி எழுப்பிய முழக்கங்களால் ஆர்எஸ்எஸ் தலைமையகம் உள்ள நாக்பூர் அதிர்ந்தது.

ஜம்மு-காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வியாழனன்று காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, சிபிஎம் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஜம்முவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் பாஜக, மோடி அரசுக்குஎதிராகப் பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பாஜக குண்டர்களை நையப்புடைத்த ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியினர்ஜம்முவில் போராட்டம் நடைபெற்ற பின்பு கனாட் பிளேஸில்‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கனாட் பிளேஸ் வெளியரங்கு பகுதியில் புகுந்த பாஜக குண்டர்கள், “எங்களுக்கு எதிராக எப்படி முழக்கங்களை எழுப்பலாம்” என்று

கூறி, காங்கிரஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையறிந்த சிபிஎம், தேசிய மாநாட்டுக் கட்சி ஊழியர்கள் பதிலடி கொடுக்க, பாஜக குண்டர்கள் அந்தஇடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.