தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை கர்நாடகாவில் போராட்டம் தொடரும்: ‘இந்தியா’ அணி அறிவிப்பு

34 minutes before
ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை கர்நாடகாவில் போராட்டம் தொடரும்: ‘இந்தியா’ அணி அறிவிப்பு

ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை கர்நாடகாவில் போராட்டம் தொடரும்: ‘இந்தியா’ அணி அறிவிப்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும்; எஸ்ஐஆர் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ‘இந்தியா’ கூட்டணியின் கர்நாடகப் பிரிவு நவ. 1-ஆம் தேதி முதல்பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தி வருகிறது.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, சிபிஐ(எம்எல்) விடுதலை, பார்வர்டு பிளாக் மற்றும் சமாஜ்வாதி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளும், பிற முற்போக்குக் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் எஸ்ஐஆர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளும் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், வியாழனன்று ‘இந்தியா’ கூட்டணியின் கர்நாடகப் பிரிவுதலைவர்கள் சுதந்திர பூங்காவில் போராடிவரும் போராட்டக்காரர்களுடன் இணைந்து ஞானேஷ் குமார் - வாக்குத் திருட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.தொடர்ந்து ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.

அப்போது கர்நாடக காங்கிரஸ் தலைவர் பி.கே. ஹரிபிரசாத் பேசுகையில், “போராட்டத்தைத் தொடர்வதற்காக ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்களும் உறுப்பினர்களும் இங்கு திரண்டுள்ளோம். ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை இப்போராட்டம் தொடரும். மேலும், கர்நாடகம் முழுவதும் இப்போராட்டம் விரிவுபடுத்தப்படும்” என்று கூறினார்.இப்போராட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பிரகாஷ், சிபிஐ மாநிலச் செயலாளர் சுந்தரேஷ், சிபிஐ(எம்எல்) விடுதலை மாநிலச் செயலாளர் கிளிப்டன்,பார்வர்டு பிளாக் தலைவர் ஜே.ஆர். சிவசங்கர், சமாஜ்வாதி கட்சித்தலைவர் என். மஞ்சுநாத் மற்றும் திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.