ஜனநாயகத்தை பாதுகாப்போம்! அக்.13 இல் ‘இந்தியா’ அணி ஆர்ப்பாட்டம்
10 Oct 2026, 11:23 pm
<p><strong>ஜனநாயகத்தை பாதுகாப்போம்! அக்.13 இல் ‘இந்தியா’ அணி ஆர்ப்பாட்டம்</strong></p><p>தருமபுரி, அக்.10-ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரியில் அக்.13 ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம்நடைபெறவுள்ளது.</p><p> ‘இந்தியா’ அணியிலுள்ள கட்சிகளின் தருமபுரி மாவட்ட ஆலோசனை கூட்டம், காங்கிரஸ் கட்சி சனியன்று அலுவலகத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோ.வி.சிற்றரசு தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், விசிக மாவட்டச் செயலாளர்கள் த.கு.பாண்டியன், கருப்பண்ணன், சென்னகிருஷ்ணன், முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் சீராஜூதீன், தலைவர் இலியாஸ், சிபிஐ (எம்எல்) விடுதலை மாவட்டச் செயலாளர் கே.கோவிந்தராஜ், சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் நவீன்குமார், மதிமுக நிர்வாகி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். இக்கூட்டத்தில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) ரத்து செய்ய வேண்டும். குளறுபடிக்கு காரணமான தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஸ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா அணி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக, அக்.13 ஆம் தேதியன்று தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே, ‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவுவெடுக்கப்பட்டது.</p>
