அக்.15இல் சென்னையில் இந்தியா அணி ஆர்ப்பாட்டம்!
yesterday
<p>எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கண்டித்து அக்.15-ஆம் தேதி சென்னையில் இந்தியா அணியை சேர்ந்த கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தியா அணியை சேர்ந்த கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஐயுஎம்எல் பொதுச் செயலாளர் அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்.</p><p>இக்கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளகளை சந்தித்த மாணிக்கம் தாகூர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க கோரி அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ‘இந்தியா' கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தவும், சென்னையில் அக்டோபர் 15-ஆம் தேதி இந்தியா அணியை சேர்ந்த கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் ‘இந்தியா' அணியை சேர்ந்த கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p>
