பொதுமக்களை மிரட்டிய அஜித் பவார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை
25 Nov 2025, 3:29 pm

பொதுமக்களை மிரட்டிய அஜித் பவார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை

மும்பை பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ் டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருக்கும் அஜித் பவார் (தேசி யவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்தவர்) கடந்த வாரம் பாரமதி தாலுகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர் தல் பிரச்சாரத்தின் போது, ”வாக்காளர்களே! நீங்கள் எங்க ளின் 18 வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்தால், நான் வாக்குறுதியளித்த அனைத்தை யும் நிறைவேற்ற தயாராக இருக் கிறேன். ஆனால் நீங்கள் எனது வேட்பாளர்களை நிராகரித் தால், நானும் உங்களை புறக்க ணிப்பேன். வாக்கு மட்டுமே உங் கள் கையில் உள்ளது. ஆனால் பணம் (நிதி) என் கையில் உள் ளது” என பொதுமக்களை பகி ரங்கமாக மிரட்டினார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் வாக்கா ளர்களை பொது மேடையி லேயே மிரட்டிய அஜித் பவார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என “இந்தியா” கூட் டணிக் கட்சிகளான காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசிய வாத காங்கிரஸ் (சரத்) மற்றும் ராஜ் தாக்கரேயின் நவநிர்மாண் சேனா (“இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கவில்லை - ஆதரவு மட்டும்) கட்சியும் இந் திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக தேசிய வாத காங்கிரஸ் (சரத்) கட்சியின் தலைமை செய்தித் தொடர்பா ளர் மகேஷ் தபசே கூறுகையில், ”மகாராஷ்டிராவின் நிதி அமைச் சராக அஜித் பவார் இருந்தா லும், அது அவருடைய பணம் இல்லை. மக்களின் வரிப்பணம் ஆகும். ஆனால் அவர் ஆட்சி அதிகாரத்தை வைத்து மக் களை மிரட்டுகிறார். இது கண்ட னத்துக்குரியது ஆகும். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் உடனடி மற்றும் கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கூறினார்.

சர்ச்சை பேச்சு மூலம் ஊழல் விவகாரத்தை மூடி மறைக்க சதி

சுமார் ரூ.1,800 கோடி மதிப்புள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான மற்றும் விதிகளின் படி யாரும் வாங்க முடியாத நிலத்தை ரூ.300 கோடி அடி மாட்டு விலையில் தனது மகன் பார்த் பவாருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் அஜித் பவார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “இந் தியா” கூட்டணிக் கட்சிகள் கடும் எதி ர்ப்பு தெரிவித்தன. இத்தகைய சூழ லில், நிலமோசடி ஊழல் விவகா ரத்தை மூடி மறைக்கவே பாரமதியில் வாக்காளர்களை மிரட்டும் வகையில் பேசி பிரச்சனையை திசை திருப்பி யுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.