தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்ஐஆர்-க்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சியினர் ஆவேசம்

11 Nov 2025, 3:41 pm
எஸ்ஐஆர்-க்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சியினர் ஆவேசம்

எஸ்ஐஆர்-க்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சியினர் ஆவேசம்

கோவை, நவ.11- ஒன்றிய பாஜக அரசின் கைப் பாவை யாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், வாக்கா ளர் விரோத எஸ்ஐஆர் பணிகளை கைவிடக்கோரி இந்தியா கூட்டணி கட்சி களின் ஊழியர்கள் பங்கேற்ற மாபெரும்  ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் செவ் வாயன்று நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக, கோவை டாடாபாத் சிவானந்த காலனி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை ஏற்றார்.  இதில், முன்னாள் அமைச்சர் பொங் கலூர் பழனிச்சாமி, திமுக மாவட்டச் செய லாளர்கள் துரை.செந்தமிழ்ச் செல்வன்,  தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முரு கேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச்செயலாளர் சி.பத்மநா பன், முன்னாள் எம்எல்ஏ யு.கே.வெள் ளிங்கிரி, கொமதேக தலைவர் ஈஸ்வரன்  எம்எல்ஏ, சிபிஐ மாநில துணைச் செயலா ளர் பெரியசாமி, மாவட்டச்செயலாளர் சிவசாமி, ஆதித்தமிழர் பேரவை நிறுவ னத் தலைவர் அதியமான், மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ், இந் திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில இளைஞரணி துணைத் தலைவர் முக மது யூனஸ், ஆதி தமிழர் கட்சி தலை வர் ஜக்கையன், தபெதிக பொதுச்செய லாளர் கு.ராமகிருஷ்ணன், திமுக மாண வரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். திருப்பூர் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் செவ்வாயன்று, திருப்பூர் தியாகி குமரன் நினைவகம்  முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, திமுக திருப்பூர் தெற்கு எம்எல்ஏ  க.செல்வராஜ் தலைமை ஏற்றார். இதில்,  சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்து கண்ணன், மாவட்டச் செய லாளர் சி. மூர்த்தி உள்ளிட்ட அனைத் துக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பெருந்தி ரளானோர் பங்கேற்றனர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு,  தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலா ளர் முனைவர். பி. பழனியப்பன் தலை மை வகித்தார். இதில், சிபிஎம் மாவட் டச் செயலாளர் இரா. சிசுபாலன்,  சிபிஐ  மாவட்டச் செயலாளர் எஸ்.கலைசெல் வம், மதிமுக மாவட்ட செயலாளர் இரா மதாஸ், விசிக பொறுப்பாளர் பொ. மு.  நந்தன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர். ஈரோடு திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில்  ஈரோடு காளை மாட்டுச்சிலை அருகில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்டச் செயலாளர்  நல்லசிவம் தலைமை வகித்தார். சிபிஐ  ஆறுமுகம், திமுக மத்திய மாவட்ட  பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம், மதிமுக வந்தியத்தேவன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன்  மற்றும் விசிக மாவட்டச் செயலாளர் எஸ். எம்.சாதிக் ஆகியோர் உரையாற்றினர். இதில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பி னர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், திமுக மாநகரச் செயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார். நாமக்கல் நாமக்கலில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், திமுக நாமக்கல்  மேற்கு மாவட்ட  பொறுப்பாளர் மூர்த்தி, கிழக்கு மாவட் டச் செயலாளர் கே.ஆர்.என். ராஜேஸ் குமார் எம்பி., மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில குழு  உறுப்பினர் டெல்லி பாபு, மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். சேலம் சேலம் கோட்டை மைதானத்தில்  திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.  ஆர். சிவலிங்கம் எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்டச் செயலாளர் டி. எம்.செல்வ கணபதி முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எ.குமார், காங்கிரஸ் கட்சி  சார்பில் ஏ.ஆர்.பி.பாஸ்கர், சிபிஐ மாவட் டச் செயலாளர் ஏ.மோகன் மற்றும் மதி முக, விசிக உள்ளிட்ட மதசார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர் கள் மற்றும் ஊழியர்கள் திரளானோர் பங்கேற்றனர். நீலகிரி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள  ஏடிசி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, திமுக மாவட்டச் செயலாளர் கே.எம். ராஜூ தலைமை ஏற்றார். இதில்,  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், காங்கிரஸ் கட்சியின் கணேஷ் எம்எல்ஏ, சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் பௌ்ளி, இந் திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் அனீபா, விசிக மாவட்டச் செயலாளர் புவனேஸ்வரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்  பாலாஜி பேசுகையில், இந்திய அளவில் எஸ்ஐஆர் குறித்து முதலில் எதிர்ப்பை  பதிவு செய்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். பாஜ அரசு ஐடி, ஈடி,  சிபிஐ மூலம் தேர்தலில் வெற்றி பெற நினைத்து அதில் தோல்வி  அடைந்தது. இதையடுத்து, தற்போது எஸ்ஐஆர் மூலம் திருட்டுத்தனமாக  வெற்றி பெற நினைக்கிறது.  30 நாளில் 7 கோடி வாக்காளர் படிவங்களை கொடுத்து அதை பூர்த்தி  செய்து திரும்ப பெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வரும் என்றால் அது  நிச்சயம் முடியாது என்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரியும். இருப்பி னும், இது போன்ற முன்னெடுப்புகளை தேர்தல் ஆணையம் எடுத்துள் ளது. பீகாரில் 68 லட்சம் பேர் நீக்கப்பட்டு உள்ள நிலையில், 21 லட்சம்  சேர்க்கப்பட்டனர். நீக்கப்பட்ட 90 சதவீதம் பேர் மீண்டும் சேர்க்கப்படவில்லை. இதே போன்ற நிலையை தமிழகத்தில் ஏற்படுத்த பாஜ அரசு முயற்சி செய் கிறது. இந்த எஸ்ஐஆர் பணிகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். வாக்கு  என்பது நம் உரிமை. யார் தீர்மானிப்பது என்பது நமது உரிமை. 2026-ல்  திமுக வென்று விட கூடாது என நினைக்கின்றனர். பாஜவிடம் அதிமுக அடிமையாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக் கும் பாஜ அரசுக்கு அதிமுக துணை போகிறது. அதிமுகவுக்கு தமிழ்நாட்டி லும், கோவையிலும் இது தான் இறுதி தேர்தலாக இருக்கும் என்றார். எஸ்ஐஆர் நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு முயற்சியை முறியடிக்க வேண் டும் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.