6 குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாதிரி நாடாளுமன்றத்தில் விசாரணை ஞானேஷ் குமாரைப் பதவி நீக்க ஒருமனதாக தீர்மானம்!
31 Oct 2026, 11:40 pm

6 குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாதிரி நாடாளுமன்றத்தில் விசாரணை ஞானேஷ் குமாரைப் பதவி நீக்க ஒருமனதாக தீர்மானம்!

இன்று பேரணி

மாதிரி நாடாளுமன்றத் தீர்மானத்தைத் தொடர்ந்து, தலைமைத் தேர் தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்க வலியுறுத்தி, இன்று (நவ.1) ராம்லீலா மைதானத்தில், ‘தில்லி சலோ’ பேரணியை இந்தியா அணி கட்சிகள் நடத்துகின்றன.

புதுதில்லி, அக்.31-இந்தியா கூட்டணி நடத்திய மாதிரி நாடாளுமன்றக் கூட்டத் தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவிநீக்கும் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

1. தேர்தல்களைத் திருடச் சதி செய்தது; 2. 13.2 கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்கியது; 3. நாடாளுமன்றத்தின் மேற்பார் வையோ அல்லது வழிகாட்டலோ இன்றி ‘படிவம் 6’ (Form 6)-ஐ மாற்றியமைத்தது; 4. தேர்தல் ஆணையத்தின் இணைய அமைப்பு (ECINET) மூலம் வாக்காளர் பட்டியலைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந் தது; 5. மற்ற இரு தேர்தல் ஆணையர்களைச் செயல்பாட்டிலிருந்து ஒதுக்கிவைத்தது; 6. மோடி மற்றும் ஷா ஆகியோரின் கட்டளைப்படி செயல்பட்டது; - ஆகிய ஆறு காரணங்களுக்காக, இந்தியாவின்தலைமைத் தேர் தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பொதுவெளியில் ஏகமனதாகப் பதவிநீக்கம் (Impeachment) செய்யப்படுவதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

அவையை நடத்திய மீரா குமார்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில், சனிக்கிழமையன்று மாலை நடைபெற்ற இந்த மாதிரி நாடாளுமன்றத்திற்கு, முன்னாள் சபாநாயகர் மீரா குமார் தலைமை தாங்கினார். அவர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ‘பொது பதவிநீக்க விசாரணை’யை (Public Impeachment) துவக்கி வைத்தார்.

அப்போது, “உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நமது ஜனநாயக முறையைப் பின்பற்றுகின்றன. தேர்தல் நடைமுறையின் மையமாக இருப்பது வாக்காளர்கள்தான். ஒரே ஒரு வாக்காளருக்குக் கூட வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டால், அது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவையே பாதிக்கும். ஒருவரை வாக்களிக்க விடாமல் தடுப்பது ஜனநாயகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று தெரிவித் தார்.

அரசியலமைப்பு அமைப்பின் கண்ணியம் காப்போம்!

அதைத்தொடர்ந்து, மாநிலங் களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத் தப் பணி (SIR) தொடர்பாக 6 முக்கியக் குற்றச்சாட்டுகளை முன் வைத்து உரையாற்றினார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவுப்படி ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையத்தைச் செயல்படுத்தி வருவதாக கார்கே குற்றம்சாட்டினார்.

“7 மாதங்களுக்கு முன்பு, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 193 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்குவதற்கான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தோம். ஆனால், எங் களது அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே, ஓர் அரசியலமைப்பு அமைப்பின்கண்ணியத்தைக் காப்பதற்காகவே இன்று நாங்கள் பொது பதவிநீக்க விசாரணை நடத்துகின்றோம்.

“தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், அவருக்கு வாழ்நாள் முழுவதும் சட்டப் பாதுகாப்பு வழங்கும் வகையில் 2023 டிசம்பரில் கொண்டுவரப் பட்ட சட்டம், அவர் நாட்டுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட் டத்திற்கும் எதிராகச் செய்த குற்றச் செயல்களை மறைப்பதற்கான கவசமாகவே அமைந்துள்ளது. எனவே, அவர் உடனடியாகப் பதவி நீக்கம்செய்யப்பட வேண் டும்” என்று கார்கே தெரிவித்தார்.

சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் பேசுகையில், அரசியலமைப்பின் சிற்பியான டாக்டர் பி. ஆர். அம் பேத்கர் குறிப்பிட்டது போல, “வாக்குரிமை என்பது ஒரு வகையான அரசியல் கல்வி; பல நூற் றாண்டுகால ஓரங்கட்டலைத் தகர்த்தெறியும் ஒரு ஆயுதம்.” - இது சாதாரணமனிதன் மீது வைக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான நம்பிக்கையாகும். ஆனால், அமித் ஷா மற்றும் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அந்த நம்பிக்கையையே சிதைத்து வருகிறார். எனவே அவருக்கு எதிராக ‘மக் கள் கண்டனத் தீர்மானம்’ (people’s impeachment) ஆதரிக்கிறோம் என்றார்.

ராகுல் காந்தி - எம்.ஏ. பேபி உள்ளிட்ட தலைவர்கள் பேச்சு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, சமாஜ்வாதி எம்.பி. தர்மேந்திர யாதவ், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி பிரசாத், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, ஜேஎம்எம் எம்.பி. மஹுவா மாஜி, சிவசேனா (உத் தவ்) எம்.பி. அரவிந்த் சாவந்த் உள் ளிட்ட தலைவர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பொதுமக்களும் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தின் மீதுஉரையாற்றினர்.

அதைத்தொடர்ந்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஞானேஷ்குமார் மீதான பதவி நீக்கத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகஅவைத் தலைவர் மீரா குமார் அறிவித்தார்.