தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இன்று ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

7 Jun 2026, 9:35 pm
இன்று ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
<p><strong>இன்று ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம்</strong> </p><p> ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தில்லி அரசியலமைப்பு மன்றத்தில் திங்களன்று (ஜூன் 8) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலா ளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக் கத்தில் அவர் மேலும் கூறுகையில்,”ஜூன் 8 அன்று நண்பகல் 12 மணிக்கு, தில்லி அரசியலமைப்பு மன்றத்தில் நடைபெற வுள்ள இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த சிறப்புக் கூட்டத்தில் ஒருசில கார ணங்களுக்காக சில கட்சிகள் பங்கேற்க வில்லை. எனினும் மோடி அரசாங்கத் திற்கு எதிரான தங்கள் கொள்கைகளி லும் நடவடிக்கைகளிலும் அவர்கள் அழுத்தமாக ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஜனநாயகத்தின் மீது நாள்தோறும் தாக்குதல் நடத்துவது, விசா ரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி யினரை அச்சுறுத்துவது, கோடிக்கணக் கான மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, ஓயாத பணவீக்கத்தின் மூலம் நடுத்தரக் குடும்ப பட்ஜெட்டை சீர்குலைப்பது, லட்சக்கணக்கான இளைஞர்கள், தேர் வர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைப்பது, முதலீட்டு சூழலை பலவீன மாக்குவது மற்றும் வெளியுறவுக் கொள் கையில் சமரசம் செய்துகொள்வது போன்றவற்றில் பாஜகவுக்கு எதிராக அவர்கள் நம்முடன் இணைந்து நிற்கின்ற னர். இந்தியாவைப் போன்று இந்தியா கூட்டணியும் பன்முகத்தன்மையில் ஒன்று பட்டு நிற்கிறது” என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் நாட்டின் பொரு ளாதார நெருக்கடி, வேலைவாய்ப் பின்மை, விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங் கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.