நீட், சிபிஎஸ்இ தேர்வுகளில் வரலாறு காணாத முறைகேடு தர்மேந்திர பிரதான் பதவி விலக இந்தியா கூட்டணி வலியுறுத்தல்!
8 Jun 2026, 8:58 pm

நீட், சிபிஎஸ்இ தேர்வுகளில் வரலாறு காணாத முறைகேடு

தர்மேந்திர பிரதான் பதவி விலக இந்தியா கூட்டணி வலியுறுத்தல்!

புதுதில்லி, ஜூன் 8 - நீட், சிபிஎஸ்இ தேர்வு ஆகிய வற்றில் நிகழ்ந்த முறைகேடு களுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இந்தியா கூட்டணி வலி யுறுத்தியுள்ளது.

இந்தியா கூட்டணியின் ஆலோச னைக் கூட்டம், தில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் திங்க ளன்று நடைபெற்றது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கபில் சிபல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் து. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜான் பிரிட்டாஸ் எம்.பி., சிபிஐ (எம்எல்) லிபரேசன் சார்பில் தீபங்கர் பட்டாசார்யா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகி லேஷ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) சார்பில் சுப்ரியா சுலே எம்.பி., ஆர்எஸ்பி சார்பில் பிரேம சந்திரன் எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் சர்பராஸ் அகமது எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வரும்- ஜேஎம்எம் கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் ஆகியோரும் காணொளி பங்கேற்று உரையாற்றி னர்.

ஆம் ஆத்மி கட்சி மற்றும் திமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. தவெக கூட்டத்திற்கு அழைக்கப் படவில்லை. நாடாளுமன்ற உறுப்பி னர்களை வைத்துள்ள கட்சி களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப் பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.

எதிர்வரும் தேர்தல்கள் குறித்து ஆலோசனை

அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, திமுக போன்ற பிராந்திய கட்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து மாறியுள்ள அரசியல் சூழலில் பாஜ கவை எதிர்கொள்வதற்கான உக்தி களை மாற்றியமைக்கவும், இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவது குறித்தும், உத்தரப்பிரதேசம், உத்த ரகண்ட், மணிப்பூர், பஞ்சாப், குஜராத், கோவா, இமாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெற வுள்ள சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2029- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின், காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியா கூட்டணி கூட்டத்தில், 25 கட்சிகளின் ஒப்புதலுடன் 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொருளாதார பிரச்சனைகளை அரசு விவாதிக்க வேண்டும்!

நீட், சிபிஎஸ்இ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; நாட்டின், இன்றையப் பொரு ளாதார சூழல், வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவ சாயிகளின் பிரச்சனைகள் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஒன்றிய அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று இந்தியா கூட்ட்டணி கூட்டத்தின் முடிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

எஸ்ஐஆர் குளறுபடி குறித்து ஜனாதிபதியிடம் முறையீடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து, இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் அளிக்கவும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்தியா கூட்டணியின் கூட்டத்தை நடத்தவும், நாடாளு மன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது இந்தியா கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை முன்னெடுக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் தினமும் காலையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்துவது என்றும் முடிவுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறும் என்றும் கார்கே அறிவித்தார்.