தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லியில் 4ஆவது நாளாக இன்றும் போராட்டம் தொடரும் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. தகவல்

8 Oct 2026, 11:54 pm
தில்லியில் 4ஆவது நாளாக இன்றும் போராட்டம் தொடரும் ‘இந்தியா’ கூட்டணி சார்பில்  ஜான் பிரிட்டாஸ் எம்.பி. தகவல்

தில்லியில் 4ஆவது நாளாக இன்றும் போராட்டம் தொடரும் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. தகவல்

புதுதில்லிதலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிரான போராட்டத்தை ‘இந்தியா’ கூட்டணி தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தில்லியில் வியாழனன்று3ஆவது நாளாகத் தொடர் போராட்டம் நடைபெற்றது. தில்லி ராஜ்காட் அருகே நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

போராட்டம் தொடரும்

இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும்,மாநிலங்களவை உறுப்பினருமான ஜான் பிரிட்டாஸ், தில்லியில் 4ஆவதுநாளாக வெள்ளியன்றும் போராட்டம் தொடரும் எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்மேலும் கூறுகையில், “ஞானேஷ் குமார்தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பிக்கும் வரை ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் போராட்டம் வெள்ளியன்றும் தொடரும். மோடியும் அமித் ஷாவும் ஞானேஷ் குமாரைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருந்தால், அவர்களும் ஞானேஷ் குமாருடன்சேர்ந்து வீழ்வார்கள். நாங்கள் மிகுந்த உறுதியுடனும் மனத்திடத்துடனும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். அவர் எவ்வளவு சீக்கிரம் பதவியிலிருந்து விலகுகிறாரோ, அவ்வளவு அவருக்கும் நாட்டிற்கும் நல்லது. ஞானேஷ்குமார் ஒரு திருடன்” எனக் கூறினார்.

சமாஜ்வாதி, என்சிபி,

சிவசேனா (உத்தவ்) பதிலடிபுதன்கிழமை தில்லியில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிப் போராட்டத்தில் சமாஜ்வாதி கட்சி, சிவசேனா (உத்தவ்)மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத்) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவில்லை. இதனால் ‘இந்தியா’கூட்டணியில் விரிசல் எனபாஜக மற்றும் ஊடகங்கள் வதந்தியைக் கிளப்பின.இத்தகைய சூழலில், வியாழனன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்காட்போராட்டத்திற்கு முன்பு மதிய விருந்து வைத்தார். இந்த விருந்தில் சமாஜ்வாதி, என்சிபி,சிவசேனா (உத்தவ்) கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதேபோல ராஜ்காட் போராட்டத்திலும் அவர்கள்பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.