முந்தய பக்கம்

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்

7 Feb 2026, 2:02 pm
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்
<p><strong>இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்</strong></p> <p>சென்னை, பிப். 7- இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப் பந்தம் இறுதியானதல்ல என்பதையே கூட்டறிக்கை காட்டுகிறது என்று முன்னாள் நிதியமைச்சர் பி. சிதம்பரம் தெரிவித் துள்ளார். இடைக்கால ஒப்பந்தத்துக் கான கட்டமைப்பு எப்படி கொண்டாட்டத் துக்கான விஷயமாக இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதி யாகவில்லை என்பது கூட்டறிக்கையில் தெளிவாகத் தெரிகிறது. இது ஒரு இடைக்கால ஒப்பந்தம்கூட அல்ல, இடைக் கால ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பு மட்டுமே என்று சிதம்பரம் தெரிவித் துள்ளார். கூட்டறிக்கையில் உள்ள அம்சங்கள் அமெரிக்காவுக்கு சாதகமாகவே உள்ளன என்று அவர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா வரி விலக்கு அல்லது வரி குறைப்பு செய்யும் என கூட்டறிக்கையில் கூறப் பட்டுள்ளது. ஆனால், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 18 சதவீத வரி விதிப்பு என்றும் அதில் தெரி விக்கப்பட்டுள்ளது. இடைக்கால ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவடைந்தால் மட்டுமே அமெரிக்கா வரியை நீக்கும் என்றும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில விமானங்கள், விமான உதிரி பாகங்களைத் தவிர எஃகு, அலுமினியம், காப்பர் மீதான அமெரிக்க வரி தொடரும் என்றும் அதில் கூறப்ப ட்டுள்ளது என்று ப. சிதம்பரம் சுட்டிக் காட்டி யுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram