இந்தியா - தெ. ஆ., அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்
29 Nov 2025, 1:28 pm
<p><strong>இந்தியா - தெ. ஆ., அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்</strong></p>
<p>டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, முதற்கட்டமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது. இதனை தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் விடுமுறை நாளான ஞாயிறன்று தொடங்க உள்ளது. முதல் ஒருநாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது. டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணியும், ஒருநாள் தொடரையும் கைப் பற்றும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடம் : ராஞ்சி, ஜார்க்கண்ட் நேரம் : மதியம் 1:30 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார்</p>
