தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும்! நில அளவை அலுவலர் சங்கம் அறிவிப்பு

19 Nov 2025, 3:33 pm
காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும்! நில அளவை அலுவலர் சங்கம் அறிவிப்பு
<p><strong>காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும்! நில அளவை அலுவலர் சங்கம் அறிவிப்பு</strong></p> <p>சென்னை, நவ. 19 - காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் நடத்தி வரும் கால வரையற்ற வேலை நிறுத்தம் புதனன்று (நவ.19) இரண்டாவது நாளாக தொடர்ந்தது. தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பணியி டங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்; ஒப்பந்த லைசன்ஸ் சர்வேயர் முறை, வெளிமுகமை &nbsp;புல உதவியாளர் முறை ஆகியவற்றை கைவிட &nbsp;வேண்டும் என்பன உள்ளிட்ட 18 கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை &nbsp;அலுவலர்கள் ஒன்றிப்பு இந்தப் வேலை நிறுத்தத்தை நடத்தி வருகிறது. போராட்டத்தின் இரண்டாவது நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் &nbsp;நடைபெற்றது. &nbsp;சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச் செயலாளர் அண்ணா குபேரன், மாவட்டச் செயலாளர் பிரியா, அரசு &nbsp;ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகி ம. அந்தோணிசாமி, வடசென்னை மாவட்டச் செய லாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பேசினர். செய்தியாளர்களிடம் பேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் அண்ணா குபேரன், &ldquo;நில அளவர்களை ஒப்பந்த முறையில் நியமிப்பதை கைவிட்டு, காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், 6 ஆண்டுகளுக்கும் மேலாக &nbsp;மறுக்கப்படும் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்; ஊதிய முரண்பாட்டை &nbsp;சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி முதலமைச்சரிடம் நேரடி யாக மனு அளித்தோம். அதன்மீது நடவடிக்கை &nbsp;எடுக்காததால் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. களப்பணியாளர்கள் 3 ஆயிரத்து 200 பேரில் 2 ஆயிரத்து 800 பேர் வேலை நிறுத்தத் தில் உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை &nbsp;போராட்டம் தொடரும்&rdquo; என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.