அநாகரிகப் பேச்சுகளும் அரசியல் முரண்பாடுகளும்
18 Mar 2026, 3:34 pm
<p><strong>அநாகரிகப் பேச்சுகளும் அரசியல் முரண்பாடுகளும்</strong></p>
<p>தமிழகத்தில் அண்மைக்காலமாக அர சியல் தலைவர்களின் பேச்சுகள் கண்ணி யம் கடந்து செல்வது பொதுமக்களி டையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு பாது காப்பு இல்லை என்ற முழக்கத்தை முன் வைத்து போராட்டங்களை முன்னெடுத்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், அதே மேடைகளில் பெண்களை இழிவுபடுத் தும் வகையில் பேசியது ஆணாதிக்க அழுக்கை சுமந்து திரிகிறார்களே என்கிற கவலையை வெளிப்படுத்தியுள்ளது. கோவையில் திமுக அரசுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய கோவை வடக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலா ளருமான அம்மன் கே. அர்ஜுனன், மக ளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித் தார். உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளை அரசு ஆய்வு செய்வதைக் கிண்டல் செய்த அவர், ”மூக்குத்தி இருக்கி றதா? கம்மல் இருக்கிறதா? என்று கேட்ப வர்கள், போனால் போகிறது என்று விட் டால் புருஷன் இருக்கிறாரா? என்று கூடக் கேட்பார்கள்” என அநாகரிகமான முறை யில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. பயனாளிகளின் தகுதிகளை விமர்சிப் பதாக நினைத்துக்கொண்டு, பெண்களின் மாண்பை குறைக்கும் வகையில் அவர் பேசிய விதம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது. அதிமுக தலைவர்களின் இத்தகைய போக்கு இது முதன்முறை அல்ல. கடந்த சில தினங்களாகவே அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பெண்களை இலக் காக வைத்தே சர்ச்சைக்குரிய கருத்து களை பேசி வருகின்றனர். மாநிலங்க ளவை உறுப்பினர் சி.வி.சண்முகம், ஒரு நடி கையை குறித்து பொதுமேடையில் தனிப் பட்ட முறையில் விமர்சித்தது பெரும் விவா தமானது. முன்னாள் அமைச்சர் திண்டுக் கல் சீனிவாசன், பெண்களின் உடை குறித்து அவதூறான கருத்துகளை தெரி வித்தது பெண்களின் சுயமரியாதையை சீண்டுவதாக அமைந்தது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் அதே வேளையில், அந்தப் போராட்ட மேடைகளிலேயே பெண்களை அநாகரிகமாக சித்தரிப்பது அவர்களின் இரட்டை நிலையை தோலுரித்துக் காட்டு கிறது. ”பெண்களின் உரிமைகளுக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் இத் தலைவர்களுக்கு, உண்மையில் பெண் கள் மீது அக்கறை இருக்கிறதா? என்றால் இல்லை என்பதே. வரவிருக்கும் தேர்தலை மனதில் வைத்து வெறும் அரசியல் ஆதா யத்திற்காக மட்டுமே இத்தகைய போராட் டங்களை நடத்துகின்றனர் என்பது நிதர் சனம்.</p>
